Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Idhayathile Oru Kanavu
Pin It

Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 08 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

திரே நின்றவனை பார்த்து நம்ப முடியாமல் ஒரு அடி பின்னே எடுத்து வைத்தாள் புவனேஸ்வரி.

“ஈஷ்” – ஜெய்யும் ஒரு அடி எடுத்து வைத்து அவள் அருகே வந்தான்.

“ஜெ--- ய்--- “ – கண்களை நம்ப முடியாமல் காற்றின் துணையுடன் விசாரித்தாள் புவனேஸ்வரி.

“உன்னை நான் தேடி வராமல் இருப்பேனா ஈஷ்?” – ஜெய் அவர்கள் நடுவே இருந்த இடைவெளியை குறைத்து பக்கத்தில் வர இன்னுமொரு அடி எடுத்து வைத்தான். புவனேஸ்வரி வேகமாக துடிக்கும் இதயத்துடன், மூச்சு விடவும் மறந்து நம்ப முடியாமல் நின்றாள்.

“ஜெய்” – புவனேஸ்வரி ஜெய்யின் முகத்தை தொட கையை உயர்த்தினாள்.

“புவனேஸ்வரி, நின்னுட்டு என்ன செய்துட்டு இருக்க?” – திடீரென கேட்ட ராஜேஸ்வரியின் கேள்வி புவனேஸ்வரியை குழப்பியது. கண்களை ஒரு வினாடி மூடி திறந்தாள். அங்கே ராஜேஸ்வரியும், அவள் கணவன் ராமும் இருந்தார்கள். ஜெய்யை காணவில்லை.

என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பியவள், ஒன்றிரண்டு வினாடிகளில் புரிந்துக் கொண்டாள். கண்களை திறந்துக் கொண்டே கனவு கண்டிருக்கிறாள்!

புவனேஸ்வரிக்குள் ஏமாற்றம் அலையாக ஓடியது.

“இதுங்க தூங்கிடுச்சா? இப்போ என்னங்க செய்றது?” – ராஜேஸ்வரி குறை பட்டுக் கொண்டே குழந்தைகள் பக்கம் சென்றாள். புவனேஸ்வரி கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

ராஜேஸ்வரி “உடனே” என்று சொல்லிப் போனது, ஒரு மணி நேரம் என்பது இப்போது புவனேஸ்வரிக்கு புரிந்தது. அதற்காக அக்காவை குறை சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

ஜெய்யை உண்மையாகவே கண்ணில் ஒரு முறை பார்க்கும் வாய்ப்புக்காக அவளின் மனம் ஏங்கியது.

அதை காட்டிக் கொள்ளாமல் அக்காவின் உதவிக்கு சென்றாள்.

“நீ போன உடனேயே தூங்கிட்டாங்க ராஜி. இப்போ எழுந்திருவாங்க.” – புவனேஸ்வரி மென்மையாக குழந்தைகளை வருடினாள். அவளின் ஸ்பரிசம் பட்டு இரு மழலைகளும் புரண்டார்கள், பின் ஒருவர் பின் ஒருவராக மெதுவாக கண் திறந்துப் பார்த்து சிணுங்கி அழுதார்கள்.

“அழாதீங்க கண்ணா” – புவனேஸ்வரி கொஞ்சிப் பேசி மென்மையாக வருடிக் கொண்டே அவர்களுக்கு பிடித்த கிலுகிலுப்பை எடுத்து கொடுக்கவும், இரண்டு மழலைகளும் அந்த சத்தத்தில் அழுகையை மறந்து நிறுத்தினார்கள்.

“லைட்டா முகம் கழுவி விடு அக்கா, அவ்வளவு தான் பசங்க ரெடி” – புவனேஸ்வரி

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vetri yin selviVetri yin selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 08 - Chillzee StoryRiswin 2021-03-09 21:57
Sad episode.. Pathathum rendu perum Elam maranthutu mingle aahirvanganu nenachen... But,, jai ipdilam yosichitarae... 😒😒.. Pavam puvanesh... Jai avangala understand panikama poitarae.. Vera marriage panipara.. Ila avar puvanesh kuda seruvarah.. Pakkalam.. Waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 08 - Chillzee Storymadhumathi9 2021-03-09 21:01
:clap: nice epi.jai kobam niyayamanathu thaan :Q: enna nadakka poguthunnu parppom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 08 - Chillzee StorySaraniya 2021-03-09 17:40
Nice episode :hatsoff: . Rajeshwari ku Ean intha velai steam . Jei buvenshwari ya manika maadaaraa :sad: .Waiting for next episode :-) .
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

KKP

POK

EMS

IOK

NIN

EEKS

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top