(Reading time: 6 - 12 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

முன்னால் நிறுத்தி, அவனுடைய அனுபவங்களைக் கேட்டு அதை வீடியோ காமிராவிற்குள் சுருட்டினர்.  அடுத்ததாய் கோகுலிடம் வந்தனர்.

கடைசியில் பொது மக்களிடம் பேசி விட்டுப் புறப்பட்டனர்.

“இது எப்பங்க டி.வி.ல வரும்?” பால்ராஜ் கேட்டான்.

“நாளைக்கு காலைல முதல் நியூஸ்ல போட்டுடுவோம்”

****

வ்வூர் மக்கள் அனைவரும் அடுத்த காலை டி.வி.முன் அமர்ந்து ஸாலிமர் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“இனி அந்தக் கோயிலுக்கு நல்ல நேரம்தான்!...அம்மன் கண் திறந்திட்டா” வேறு குலத்தைச் சேர்ந்த பெரியவரொருவர் வாய் விட்டே சொன்னார்.

“முன்னொரு காலத்தில் இந்த உப்பாயம்மன் பல அற்புதங்களை நிகழ்த்தியிருப்பதாய் என் பாட்டி சொல்லியிருக்கா!...இப்ப மறுபடியும் அந்த அற்புதங்கள் நிகழ ஆரம்பிச்சிடுச்சு!... இனி இந்த ஊருக்கு நல்ல காலம்தான்!” என்றாள் நூத்துக் கிழவி ஒருத்தி.

கோவிலுக்கு மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போக, கோவிலுக்குள்ளிருந்த சின்ன உண்டியல் மாற்றப்பட்டு பெரிய லாக்கர் உண்டியல் வைக்கப்பட்டது.

சோர்ந்து போய்க் கிடந்த கோவில் நிர்வாகக் குழு நிமிர்ந்தெழுந்தது.

உப்பாயம்மனுக்கு தினப்படி பூஜைக்கு உள்ளூர் பெரியவர் ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.  விசேஷ நாளுக்கு ஸ்பெஷல் பூஜை செய்ய ஆளாளுக்கு “நீ முந்தி...நான் முந்தி” என போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.

அம்மன் அலங்காரம் நிதமும் மாறிக் கொண்டேயிருந்தது.

வாரம் இரு முறை, அதாவது செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில், சுதாகர்ஜி அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்தார்.  அவர் மீது வந்து இறங்கியிருக்கும் அம்மனின் வார்த்தைகளாய் அவரது அருள் வாக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, மதிக்கப்பட்டது, கடைப்பிடிக்கவும் பட்டது.

கோயில் நிர்வாகக் குழு மீட்டிங் போட்டு, அபிஷேக ஆராதனைக்கு கட்டணங்கள் நிர்ணயித்து, டிக்கெட்டுகளை அச்சடித்தது.  கூட்டம் மித மிஞ்சிப் போனதால்...கும்பலைக் கட்டுப்படுத்த கோவிலுக்குள் மக்கள் வரிசையாகச் செல்ல கம்பித் தடுப்புகள் போடப்பட்டன.

தொடரும்...

Next episode will be published on 9th Apr. This series is updated weekly on Fridays.

Go to Kaanpome ennaalum thirunaal story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

3 comments

  • Hahahha besh besh nadathunga nadathunga :D ini bacground la sundhar ji kk engal veetil ella nalum karthigai than :grin: arul vaku sollurarame!! :P good one!!<br /> <br />nice update sir 👏👏👏👏👏👏 nallavela indha reported 4th competitor ah varamal ponadhu :cool: :P <br /><br />Thank you

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.