(Reading time: 8 - 16 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

ரெண்டாவது நாடகம்!...அந்த ரெண்டு நாடகத்தையும் மீடியா வரை கொண்டு போய் பிரபலாமாக்கியது மூணாவது நாடகம்!...இது எல்லாமே நான் இயக்கிய நாடகங்கள்!...ஆனா இன்னிக்கு அங்க நடந்த நாடகத்தை இயக்கியது யார்?”

“அப்படின்னா...உண்மையிலேயே சத்தியுள்ள அம்மனைப் புரிஞ்சுக்காத ஜனங்கள்...சும்மா மேம்போக்கா...ஒரு சம்பிரதாயத்துக்காக கும்பிட்டுக்கிட்டு இருந்திருக்காங்க...அதிசயங்களை நிகழ்த்தும் மகிமை உள்ள அம்மன் என்பது என்னோட பொய் நாடகங்களால்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கு!...அப்படின்னா...போதும் இனிமேல் நம்ம நாடகங்களைத் தொடர வேண்டாம்!..நிறுத்திக்குவோம்”

தீர்மானித்தான் ரவீந்தர்.

அன்று மாலை பொள்ளாச்சித் திரும்பியவன், நேரே சுதாகர்ஜி வீட்டிற்குச் சென்று, தன் தீர்மானத்தை அவரிடமும் சொன்னான்.

மூன்றே நாளில் சஞ்சீவ் குமாரசாமியிடமிருந்து அஞ்சு கோடி கோயிலுக்கு வந்து விட, அவர் அனுப்பிய எஞ்சினீயர் புணரமைப்பு பணிக்கான எஸ்டிமேட்டை சமர்ப்பிக்க, அதைத் தொடர்ந்து மற்ற வேலைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடந்தேற,

கட்டுமானப் பணிக்காக எங்கெங்கோ இருந்து நன்கொடைத் தொகைகள் வந்து குவிய ஆரம்பித்தன. ஊர் மக்கள் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு, வாயில் பெருமூச்சு விடுமளவிற்கு கோயில் செம்மையாகிக் கொண்டே வந்தது.

அரசின் அறநிலையத்துறை ஆட்கள் வந்து சோதித்து விட்டு, தனியொரு குலத்திற்கான குலதெய்வம் கோயில், என்கிற காரணத்தால் நிர்வாகத்தினுள் புக முடியாமல் தோல்வியோடு திரும்பிச் சென்றனர்.

சரியாக பத்தாவது மாதம், பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகத்திற்கு தயாரானது கோயில். அறங்காவல் குழுவினர் தினந்தோறும் கூட்டம் போட்டு கும்பாபிஷேக வேலைகளை நெறிப்படுத்திக் கொண்டிருக்க,

சுதாகர்ஜி தன் கனவுகள் நனவானது சந்தோஷத்தில் மிதந்தார். 

காலை ஆறு மணி வாக்கில் கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சுதாகர்ஜி காம்பௌண்ட் கேட்டை யாரோ நீக்கும் ஓசை கேட்க, வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

ரவீந்தர் வந்து கொண்டிருந்தான்.

அவசர அவசரமாய் வெளியே வந்து, “வாப்பா ரவீந்தர்” என்று அவனை வரவேற்று உள்ளே கூட்டிச் சென்றவர், மனைவியிடம் காஃபி போடச் சொல்லி விட்டு, “டேய்...உனக்கு எப்படி நன்றி சொல்றது?ன்னே தெரியலைடா!...நான் கற்பனையில் கண்டதெல்லாம் நிஜத்தில் நடக்கறதைப் பார்க்கும் போது...எனக்கு என்ன சொல்றது?ன்னே தெரியலைடா” நெகிழ்ச்சியோடு சுதாகர்ஜி பேச,

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.