தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 20 - ஜெபமலர்
ஜனனியிடம் தன் மனதில் இருப்பதைச் சொல்லி விட வேண்டும் என்று உள்ளே நுழைந்தான் ஜனா...
கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது சில சமயங்களில் எளிதாக தான் இருக்கிறது போல... ஆனால் மனதில் தேக்கி வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் சில நேரங்களில் வெளிக்கொண்டு வருவது சற்று கடினமாகவே அமைந்துவிடுகிறது. அதுபோலதான் ஜனாவிற்கும் அமைந்துவிட்டது.
ஆரம்பத்தில் ஜனனியின் மீது வெறுப்பை காட்டுவது அவளை காயப்படுத்தி பார்ப்பதும் எளிதாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவளது ஒவ்வொரு குணநலன்களும் பிடித்துப் போய்விட அவன் அறியாமலேயே அவனுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள் அவனவள்.
அந்த உண்மையை அறிந்ததும் தன் மனதில் இருப்பதை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது ஏற்கனவே அவளிடம் காட்டியிருக்கும் கோபமும் காயப்படுத்திய வார்த்தைகளும் இப்பொழுது அவனது அன்பை வெளிப்படுத்துவதில் சிரமத்தையும் ஒருவிதமான பய உணர்ச்சியும் ஏற்படுத்தியது.
எப்படி தன் மனதில் இருப்பதை சொல்வது என்று வழி தெரியாமல் யோசித்துக்கொண்டே ஜனனியின் முகத்தை பார்த்தவன் அவள் முகத்தில் தெரிந்த பல்வேறு கேள்விக்குறிகளால் இது தன் மனதை வெளிப்படுத்துவதற்கான சமயம் இல்லை என்று சொல்லி அமைதியாக தன் அறைக்குள் சென்று விட்டான்.
வேண்டும் என்பதை உடனே சொல்லி விடுவதும் வேண்டாம் என்பதை பற்றி சற்று யோசித்துப் பேசுவது நல்லது என்று என்றோ யாரும் சொல்லியது அந்த நேரம் ஜனாவிற்கு நினைவு வந்தது.
வேண்டாம் என்று நினைத்த போது சற்று யோசித்து பேசியிருந்தால் வேண்டும் என்பதை உடனடியாக சொல்லியிருக்கலாமே என்று யோசித்தவன் இப்பொழுது தன் மனதில் இருப்பதை உடனடியாக சொல்ல வேண்டும் என்று தோன்றாமல் தனக்கு தானே தாழ்ப்பாள் போட்டு கொண்டான். அப்படி சொல்லியிருந்தால் பின்னால் மறைந்திருக்கும் பலவிதமான பிரச்சினைகளுக்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் விதி யாரை விட்டது வாழ்க்கையில்...
என்னவெல்லாம் நடந்து தீரவேண்டும் என்று இருக்கிறதோ அது அனைத்தும் நடந்த அல்லவா முடியும்... அதை மாற்ற முடியுமா என்ன???
ஜனனி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு நேரமாவது உணர்ந்து ஜனாவிற்கு தேவையான சாப்பாடு எடுத்துக்கொண்டு ஜனாவின் அறைக்குள் செல்ல வேண்டாமா என்று