எந்த பெண்மணியை ஜனனி தேடிக் கொண்டு இருந்ததாலோ அதே பெண்ணை பார்த்து விட்டாள் ஜனனி.
தனுவை அழைக்க பள்ளியின் உள்ளே செல்லாமல் பள்ளியில் இருந்து வெளியே சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்தாள் ஜனனி..
சற்று வேகமாக ஓட்டமும் நடையுமாக அந்த பெண்ணின் அருகில் சென்றவள் சற்று ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு விட்டு அம்மா... நான் உங்களை பார்க்க என்று ஆரம்பிக்கவும் பொண்ணை கூப்பிடுறதை விட நேரத்தை வீணடிப்பதில் தான் உனக்கு ஆர்வம் அதிகமோ?... வண்டியில் ஏறு... சனியை மகுடி வாசித்து அழைக்கிறியோ என்று இடியென்ற குரலில் பேசிக் கொண்டே போக ஆடிப் போய் விட்டாள் ஜனனி... ஆம்.. அவள் அங்கு ஜனாவை எதிர்பார்க்கவில்லை.
ஆபிஸில் இருந்து வரும் போது அவனுக்கு அழைத்தாள். அவனோ வெளியே இருக்கிறேன் என்று டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி இருந்தான். ஆனாலும் அவன் வேலை முடிந்து பள்ளிக்கு வருவான் என்று ஜனனி எதிர்பார்க்கவில்லை. அதோடு என்னவென்று எதுவுமே தெரியாமல் மற்றொருவர் முன் தன்னிடம் அவன் பேசிய விதம் ஜனனிக்கு பிடிக்கவில்லை.
அந்த பெண்மணி என்ன நினைப்பார்கள்.. ஏற்கனவே தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்களே என்று அந்த பெண்ணைப் பார்க்க அந்த பெண்மணியோ ஜனாவைப் பார்த்து ஏளன சிரிப்பொன்று சிரித்து விட்டு அந்த பெண் நகர ஜனாவை நேருக்கு நேர் பார்த்து விட்டு அதிர்ந்து போனாள் ஜனனி.
அவன் கண்களில் அத்தனை ஆக்ரோஷம்.. அந்த பெண்ணை அப்படியே அலக்காக தூக்கி தரையில் அடிக்க வேண்டும் என்பது போல அவன் கைகள் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்து கொண்டு இருந்தது.
ஜனனி எதுவும் புரியாமல் காரில் அமர தனுவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான்.
அந்த நாள் ஏதோ சிறையில் மாட்டிக் கொண்டது போல இருந்தது ஜனனிக்கு.
இனியும் காலம் தாமதிப்பது நல்லதல்ல... ஜனாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்தவள் யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தாள்.
தேநிலவை முடித்து திரும்பி இருந்த ஸ்வீனா நினைவு வர தன் மொபைலை எடுத்து நாளைக்கு காலை உங்களை மீட் செய்ய வேண்டும் என்று அஸ்விட்க்கு மெசேஜ் செய்து விட்டு அமைதியாக படுத்தாள்.
ஸ்வீனாவிடம் கேட்பதை விட அஸ்விட்டிடம் கேட்பது சரியாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Episode ena achu 😠😠😠😠😠
Anda pombala ah edum seiya mudiyala ya
Seeram sariyaganum parkalam
Jana oda anni oda mom entha mathiriyana person
Thank you.
Rompa sry nijama story yota follo maranthurichu athan sonnen but unga update ahh wait pannen at one sec really very sorry hate panniruthal
Today episode la story continue vanthuruchu thanks a lot❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
Good luck for your next episode😊😊😊