Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.63 (8 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 33 - 4.6 out of 5 based on 8 votes

33. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

manam virumbuthe unnai

ப்போதும் ஆறு மணி அளவில் எழும் பழக்கம் கொண்ட வீணா, அன்றும் ஆறு மணி அளவில் எழுந்தாள். தூங்கிக் கொண்டிருந்த அவினாஷையும், ரோஷினியையும் ஒரு சில நிமிடங்கள் பார்த்து ரசித்து விட்டு, எழுந்து முகம் கழுவி, பல் துலக்கி, கீழே வந்தாள். காலையில் காபி குடிக்காவிட்டால் அவளுக்கு தலையே வெடித்து விடும். கட்டாயம் யாரேனும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வந்தவள், அங்கே யாரையும் காணாது திகைத்தாள்.

“ஹலோ சிஸ்டர்”

என்ற குரலில் திரும்பியவள், அவள் வந்ததின் எதிர் திசையில் நின்றிருந்த சஞ்சீவை ஆச்சர்யமாக பார்த்தாள்.

“குட் மார்னிங்!”

அப்போதும் வீணா எதுவும் சொல்லாது அவனையே பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.

“நீங்களும் கோபம் வந்தால் இப்படி தானா?”

“அது என்ன நீங்களும்? வேற யார் இப்படி செய்வது?”

“உங்களுக்கு தெரியாதா என்ன, எல்லாம் என்னோட இன்னொரு பாதி தான்...”

“ம்ம்ம்ம்... என்கிட்டே பேசும் போது, என் பிரென்ட்ன்னு சொல்லுங்க...”

“அது எப்படி?”

“ம்ம்ம்... சரி, எப்போ எல்லோரும் எழுந்திருப்பாங்க? எனக்கு காபி வேணுமே...”

“அத்தை வந்து காபி தரனும்னா இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்...”

“ஓ!”

“என்ன பார்க்குறீங்க? ஏழு மணிக்கு மேல மெதுவா தான் எல்லோரும் எழுந்திருப்பாங்க...”

“ஓஹோ!”

“ஆனால் வீணா கவலை படாதீங்க, உங்க கிட்ட கோபமா பேசியதற்கு பிராயசித்தமாக நானே காபி போட்டு தரேன்... “

“உங்களுக்கு காபி போட தெரியுமா?”

சந்தேகமாக பார்த்தவளை பார்த்து சிரித்து விட்டு,

“பயப்படாதீங்க, நான் யூஎஸ்’ல் தங்கி இருந்த போது, நானே தான் சமைத்து சாப்பிடுவேன்... அப்புறம் காபி எல்லாம் என்ன?”

“அப்பா! ரொம்ப நல்லதா போச்சு...”

புன்னகையுடன் அவன் சமையலறை பக்கம் செல்லவும், வீணாவும் அவனுடன் சென்றாள்.

“ஆமாம், நீங்க இவ்வளவு காலையில் எழுந்து என்ன செய்றீங்க? இந்து எங்கே?”

“மேடம் தூங்குறாங்க... நான் சும்மா வாக் போகலாம்னு வந்தேன்...”

“ஓகே... நாளைக்கு தானே கோவிலுக்கு போகணும்? இன்னைக்கு என்ன பிளான்?”

“ஸ்பெசிபிக்கா எந்த பிளானும் இல்லை...”

பொதுவாக பேசியபடி, பாலை காய்ச்சி, இன்ஸ்டன்ட் காபி பவுடர் கலந்து, சர்க்கரை அளவு கேட்டு, கலந்து, வீணாவிடம் கொடுத்தவன்,

“ஸாரி வீணா சிஸ்டர்... உங்க கிட்ட அப்படி கோபமா பேசியதற்கு நான் எந்த சமாதானமும் சொல்ல முடியாது... ப்ளீஸ் பெரிய மனசு செய்து இந்த அடியேனை மன்னிச்சிடுங்க...”

“ம்ம்ம்... உங்களை மன்னிப்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான்... ஆனால் சிஸ்டர்ன்னு சொல்லி, இப்படி காபி எல்லாம் போட்டு தரீங்க, சரி போனால் போகுது ட்ரை செய்றேன்... ஆனால் சஞ்சீவ் இந்து லக்கி தான்... காபி சூப்பர்...”

இந்து பற்றி அவள் சொன்னதில் இளகியவன்,

“இந்து இல்லை வீணா, நான் தான் ரொம்ப லக்கி...” என்றான்.

காபி பருகிய படி அவனை பார்த்தவள், அவன் கண்களில் மின்னிய காதலை புரிந்துக் கொண்டு கேலியாக சிரித்தாள்.

“சரி இரண்டு பேரும் லக்கி தான் போதுமா?”

“இல்லை வீணா, இந்துவிற்கு நான் ஏற்றவன் தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு... ஷி இஸ் லைக் அன் ஏஞ்சல்...”

அவன் எதோ கனவில் பேசுபவன் போல் பேசவும், வீணா, அதே புன்னகையுடன், அவன் கண் முன் கையை ஆட்டினாள்.

“ஹலோ சஞ்சீவ், எந்த உலகத்தில் இருக்கீங்க? பூலோகத்திற்கு வாங்க... உங்க ஏஞ்சல் இங்கேயே தானே இருக்காங்க, இந்த டையலாக் எல்லாம் அவள் கிட்ட போய் சொல்லுங்க...”

சொல்ல முடிந்தால் நன்றாக தான் இருக்கும் என மனதில் நினைத்தவன், மறுமொழி எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான். ஒரு சில வினாடிகள், அமைதியாக கழியவும், ஏதோ யோசனையில் இருந்த வீணா, திடீரென பேசினாள்.

“சஞ்சீவ், நான் ஒரு விஷயம் சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்க தானே? உங்க பர்சனல் விஷயம்...”

அவன் என்ன என்பது போல் பார்க்க, வீணா பேச்சை தொடர்ந்தாள்.

“நேற்று என்னிடம் பேசியதுப் போல் இந்துவிடம் பேசாதீங்க... ப்ளீஸ், தப்பா எடுத்துக்காதீங்க... இந்து ரொம்ப சென்சிடிவ்... சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் கூட மனதில் போட்டு குழம்புவாள்... எப்போதும் எதையும் எங்க இரண்டு பேரிடமும் ஷேர் செய்வாள். ஆனாலும் நிறைய நாள் சின்ன விஷயத்தை எல்லாம் மனதில் வைத்திருப்பாள்... இப்போ உங்க இரண்டு பேருக்குள்ள என்ன விஷயமோ, இந்து அதை சொல்லனும்னு எல்லாம் நான் எதிர்பார்க்கலை, ஆனால் அவள் மனதில் எதையாவது நினைத்து வருத்த படக் கூடாதுன்னு தான் என்னுடைய கவலை... இந்து உங்க மேல எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்பது எனக்கு நல்லா தெரியும்... நீங்க இரண்டு பேரும் முதல் நாள் சந்தித்ததில் இருந்தே, பல தடவை இந்து என்னிடம் தான் வந்து ஐடியா கேட்டிருக்கிறாள்... முன்பு எந்த கம்பெனிக்காக, கல்யாணம் செய்துக் கொள்வது என்று நினைத்தாளோ, அதே கம்பெனியை விட்டுக் கொடுத்துட்டு உங்களை கல்யாணம் செய்துக் கொள்வது என்றால் பார்த்துக்கோங்க... என்ன பார்க்குறீங்க? உங்க வைப் என்னிடம் எதுவும் சொல்லலை சார்... ஆனால் இதை கூடவா என்னால் புரிஞ்சுக்க முடியாது? எதை எப்போ கேட்டாலும், பாவம் சஞ்சீவ் தப்பா எடுத்துக்க போறார், அவரை ஹர்ட் செய்ய போகுது என்னும் பாராயணம் தானே? அவள் சின்ன குழந்தை போல சஞ்சீவ்... ரொம்ப கோபம் வரும் ஆனால் இப்போ எல்லாம் ரொம்ப மாறி போய் விட்டாள்... எல்லாம் உங்கள் மேலிருக்கும் அன்பினால் தான்... நீங்கள் அவளை புரிந்துக் கொண்டு, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து...”

அது வரை அமைதியாக அவள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தவன்,

“இல்லை வீணா, இந்து தான் ரொம்பவே எனக்காக விட்டுக் கொடுத்திருக்கா... மாற வேண்டியது நான் தான்... என்ன கோபம் வந்தாலும் இந்துவிடம் கோபமா பேச மாட்டேன் சரியா?” என்று குறுக்கிட்டு சொன்னான்.

“இது என்ன இவ்வளவு ஈசியா இவ்வளவு பெரிய வாக்குறுதி கொடுத்துட்டீங்க?”

“ஹி ஹி... மாற்றி விட்டால் போச்சு.... முடிந்த அளவு கோபத்தை காட்ட மாட்டேன் சரியா?”

“இதோ பாருடா, ஒரு செகன்ட்ல பேச்சை மாற்றுவதை... ஆமாம், இவ்வளவு லேட்டா தான் எல்லோரும் எழுந்திருப்பாங்களா? அப்போ டிபன் லேட் ஆகுமோ?”

“கவலை படாதீங்க... ஏழரை எட்டு மணிக்கு எல்லாம் ரெடி ஆகிடும்... இங்கே வீடு எப்படி சேர்ந்து சேர்ந்து இருக்கு பார்த்தீங்களா? எல்லோரும் சொந்தக் காரங்க தான்... இப்போ நாம் வந்திருக்கோம் இல்லையா, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த இடமே அல்லோல படப் போகுது... எல்லோருமா சேர்ந்து சமைப்பாங்க... வேலையும் சீக்கிரம் முடியும், செய்யும் வேலையில் அலுப்பும் தெரியாது... உங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் கிராமத்து டிஷ் வேணும்னா சொல்லுங்க, ஒரு எக்ஸ்பெர்ட் கட்டாயம் இருப்பாங்க...”

 

“நிஜமாவா, எனக்கு ஆப்பம், நாட்டுக் கோழி குழம்பு ரொம்ப பிடிக்கும், கிடைக்குமா?”

“இது என்ன கேள்வி, உங்களுக்கு இல்லாததா?”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பேச்சு சத்தமும், யாரோ நடந்து வரும் சத்தமும் கேட்டது.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# lovelyKiruthika 2016-07-08 12:19
Couldint see who wrote this but very intersting want to read the whole story
Reply | Reply with quote | Quote
# RE: lovelyDevi 2016-07-08 12:26
I thought Aadhi name le ezhudhinadhu Bindhu mam .. nu.. I am not sure
Reply | Reply with quote | Quote
# RE: lovelyBindu Vinod 2016-07-09 19:54
Ungaluku yaar ezhuthinathu pola thonutho avangaluthunu ninaichukonga Kiruthika :-)
Reply | Reply with quote | Quote
# MVUS.MAGI 2013-06-12 06:30
Just one day left for MVU new updates...hehehe..cannot wait for the story... :-)
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-06-13 08:17
Ha Magi, thanks a lot for your interest! Hope you will like the update also :-)

Thanks!
Reply | Reply with quote | Quote
# MVUjeny 2013-06-05 17:09
Superb update :P :D
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-06-13 08:17
Thank you jenny!
Reply | Reply with quote | Quote
# மனம் விரும்புதே உன்னைamul 2013-06-05 12:53
wow...super :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னைThenmozhi 2013-06-13 08:17
Thanks Amul :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Ponni 2013-06-04 15:14
Very Nice Update Adhi,

Now a days Sanjeev going good
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:17
Thanks Ponni!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33vidhya vidhu 2013-06-04 12:35
hii.. aadhi... :-) story ig goin soo interstn... waitn for ur nxt update.. wen vil publosh the next update...??? :sigh:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:16
Hi Vidhya,
Thanks for your comment! The next episode si published now. Check it out!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33AmuthaRajan 2013-06-04 12:09
wow unexpected turning...
Indhu still acting lyk x accept sanjev
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:16
Thank you Amutha :-)
Reply | Reply with quote | Quote
# MVUS.MAGI 2013-06-04 06:21
super Aadhi...never expect this kind of turning point..
SANJEEV ..chance a illa....Indu's reaction also very nice...
THANK U....
Reply | Reply with quote | Quote
# RE: MVUThenmozhi 2013-06-13 08:16
Thanks a lot Magi :-)
Reply | Reply with quote | Quote
# wow kala kiteengaVadhana 2013-06-03 20:34
super romance Adhi. sema kala kal. Sanjeeve super ah maritarae. athuku oru like.
Reply | Reply with quote | Quote
# RE: wow kala kiteengaThenmozhi 2013-06-13 08:15
Thank you Vadhana... Kathai climax pakkam vanthachu'la athu thaan :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Nanthini 2013-06-03 06:33
Nice romantic story Aadhi madam ;-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:15
Nandri boss :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33azmi sharaf 2013-06-03 01:19
Hi

Its very interesting. At a time I read all the updates. expecting the next one.

From
Azmi
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:15
Thanks a lot Azmi! Your comment encourages me a lot :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Vazharmathi.K 2013-06-02 16:01
awesome adhi.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:14
Thanks Vazhar :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Dan 2013-06-02 07:50
wow............ :D
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:14
Thanks Dan!
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 33Admin 2013-06-02 02:34
Nice Aadhi!

Sanjeev thideernu thalai kizhe maarittaaraa? ;-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 33Thenmozhi 2013-06-13 08:14
Thanks madam :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top