(Reading time: 22 - 43 minutes)

 

சூர்யா ஏற்கனவே சந்தியாவின் வீட்டு வரவேற்பறையில் மாட்டிருந்த தன்ராஜின் இராணுவ உடையணிந்த படத்தை கவனித்தவனாய்  சந்தியாவிடம் "உங்க அப்பா டிபன்ஸ்ல இருக்காங்களா?"  என கேட்க சந்தியா "ஆமா. முந்தி  இருந்தாங்க. அம்மாக்கு இந்த ஊரில் டீச்சர் போஸ்டிங் கிடச்சு பிறகு நாங்க  இங்கவே இருந்திட்டோம். அப்பாவும் கொஞ்ச வருஷம் நார்த்ல இருந்துட்டு பாமிலிய பிரிஞ்சு இருக்க முடியாம வந்துட்டாங்க. இப்போ ஸ்டேட் பேங்க்ல வொர்க் பண்றாங்க. எங்கப்பா மிலிட்டரிய விட்டாலும் ரூல்ஸ்ல விடமா பிடிச்சு வைச்சிருபாங்க. ரெம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர். தெருவுல ஒரு பய எங்ககிட்ட வாலாட்ட  மாட்டான்.  எல்லாரும் பயப்படுவாங்க. எங்க ஸ்ரீயோட தான் ஒரே காமெடியா இருக்கும். சரியான பயந்தாங்கொள்ளி. அவ தப்பு பண்ணா ஒரு திருட்டு முழி முழிப்பா பாருங்க ... அதுலயே அப்பா கண்டுபிடிச்சிடுவாங்க"  என்றாள் சிரித்த படி.

 

ஸ்ரீ வுடனே "ஆமாடி இருந்தாலும் உனக்கும், பூவுக்கும் இருக்குற  தைரியம் யாருக்குமே வராது. பூவாவது  தப்பு செஞ்சுட்டு எப்பவாவது அப்பாட்ட மாட்டி திட்டு வாங்குவா. ஆனா நீ இருக்கியே அப்பாடி ... நடிகர் திலகம் சிவாஜியே தோத்துடுவாரு. பேசி பேசியே  இந்த பூனையும் பால் குடிக்குமான்னு அப்பாவ நம்ப வச்சிடுவ.  அதே மாதிரியே, லாஸ்ட் டைம் நீ எங்க வீட்டுக்கு வந்தப்ப எங்க அத்தை மாமாட்ட பில்ட் அப் போட்டதுல  என்னையும் உன்னை மாதிரி இருக்க பழகுனும்னு அவுங்க அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடாங்க. உன்னை எங்க வீட்டுக்கு கூட்டு போனா எனக்கு பாக் பயர் ஆகிடுதுடி. உனக்கு பதிலா என் தம்பி இப்போ உயிரோட இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் " என்றாள் ஸ்ரீ ஒரு பெருமூச்சுடன். "ம்... இதை விட மோசமா இருக்கும். அப்பா சின்னதுல கொடுப்பாங்களே பனிஷ்மெண்ட்க்கு  நங்குன்னு ஒரு கொட்டு அதவிட டபுள் ஸ்ட்றாங்க உனக்கு கொடுத்திருப்பான்." என்றாள் சந்தியா. ஸ்ரீமா பேசுவதை கேட்ட விந்தியா "இன்னைக்கு சந்துக்கு  பர்த்டே ஸ்ரீ. அவளை நெகடிவா சொல்லாத. " என்றாள் சிறு கண்டிப்புடன்.

 

பின் லக்ஷ்மி சந்தியாவின் அப்பா தன்ராஜை பற்றி சூர்யாவிடம் சொல்லிகொண்டிருந்தார். மிகுந்த கண்டிப்பான அவர், சந்தியா அன்பு இல்லத்திற்கு சென்று வர எப்போதும் அவளுக்கு கட்டுப்பாடு விதித்ததே இல்லை. சூர்யாவிற்கு மட்டும் இல்லை சந்தியாவுடன்  பேசிய அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக லக்ஷ்மி, தன்ராஜின் திரைப்படம்  பார்க்க கூடாது என்ற கட்டளையை அவரது பிள்ளைகள் (சந்தியா உட்பட) கண்ணும் கருத்துமாக பின்பற்றுவார்கள் என்றார்.

 

அதன் பின் சந்தியாவும் பூமாவும் சிறு வயதில் செய்த குறும்புகளை பற்றி பேச்சு வந்தது. அதைக் கேட்க கேட்க சூர்யாவிற்கு புரையேறும் அளவிற்கு சிரித்தான். சந்தியா சொன்ன தண்டட்டி பாட்டி அவளை  ராசியில்லாதவள் என்று எப்போதும் குறை கூறுவார்களாம். அந்த பாட்டி வந்தால் அவரை துரத்தி விட பூமாவும் சந்தியாவும் அவர்களின்  கண்ணாடியை ஒளித்து வைத்து தேட விடுவது, சுருக்கு பையில் ரப்பர் பல்லி, தேளு என போட்டு விடுவது, மூக்கு பொடியில் மிளகாய் பொடியை கலந்து விடுவது என அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்களாம். ஹிந்தி கற்று கொடுக்க வீட்டிற்க்கு வந்த வாத்தியார் பூமாவை மக்கு என திட்ட, அதிலிருந்து  சந்தியா மூட்டை பூச்சி மாதிரி  தொண தொணவென்று அறை குறை ஹிந்தியில் அவரை பேசிப் பேசி புண்ணாக்க, மறுபுறம் பூமா லக்ஷ்மி அவருக்கு வைக்கும் ஸ்நாக்ஸ், டீயில் எதாவதை கலந்து கொடுத்து அவரை கதறடிக்க,இவர்கள் தொல்லை தாங்காமல்  துண்டை காணோம் துணியை காணோம் என ஓடி விட்டாராம்.

 

அதை பற்றி பேசும் பொழுது சந்தியா , "சூர்யா, பூமா  அவருக்கு கொடுக்கிற டீல எதையுமே கலக்காமலே பட்டைய கிளப்புனா ...எப்படி தெரியுமா?  அவர் பாதி டீ குடித்த பிறகு "நல்ல வேளைக்கு சார். அதில ஈ விழுந்து இருந்தது நான் எடுத்து போட்டுட்டு தான் குடுத்தேன். பயப்படாம குடிங்க"ன்னா. அப்போ அவர் முகம் போகும் போன போக்கை பாக்கணுமே.. ஹைய்யோ! அப்படி பூ சொன்னவுடனே  நான் "பூ, எங்க சயின்ஸ் மிஸ்  ஈ மொக்கிற பண்டம் சாப்பிட்டா  டயோரியா, லூஸ் மோஷன், காலரா, மஞ்ச காமாலை, மலேரியா, மூளை காச்சல் ன்னு நோய் வரும்னு  சொன்னாங்களே" ன்னு சொல்ல அவர் அன்னைக்கு ஓடினவர் தான் " என்று சொல்லி சிரிக்க, அதற்கு ஸ்ரீ உடனே "இவுங்க ரெண்டு பேரும் அவரை மட்டுமா  காமெடி பீஸ் ஆக்குனாங்க? எங்க பழைய வீட்டுக்கு பக்கத்துல ஒரு முரட்டு பையன் இருந்தான். விந்தியா செட். அவன்  பால் விளையாட சந்தியாவை சேர்க்கலைன்னுட்டு பூமா அவன்கிட்ட பால்ல எழுதிருக்கிறத   ஒரு நிமிஷம் பாத்துட்டு தாரேன்னு நைசாக அதில் ஓட்டை போட்டு  கொடுத்திட்டு ஓடிட்டா. கொஞ்ச நேரத்தில் பால்ல காத்து இறங்க அது  பூவோட வேலைன்னு தெரிஞ்சி அவளை தேடினான். அப்போ என் கெட்ட நேரம், அவன் கண்ல நான் மாட்டிட்டேன். என்னைய பூ ன்னு நினச்சு சும்மா துவ துவன்னு  துவைத்து எடுத்துட்டான். " என கவலையுடன் ஸ்ரீ சொல்ல  அனைவரும் சிரிக்க, சந்தியாவுக்கு ஸ்ரீ அன்று காரணமே தெரியாமல் அடி வாங்கி வந்து நின்ற கோலம்  மலரும் நினைவுகளாய் மனதில் விரிய கண் கலங்க சிரித்தாள்.

 

கார்த்திக்கோ சந்தியாவின் கலங்கிய கண்கள் நொடிக்கொரு முறை மனதில் விரிய, எதோ கொலைக் குற்றம் செய்தது போல உணர்ந்தான் கார்த்திக். அவளிடம் மனதால் பாவ மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான்.

 

சூர்யாவும் சந்தியாவும் சாப்பிட்டு விட்டு கிளம்ப ஆயத்தமான பொழுது, சூர்யா பிள்ளைகள் புது நண்பர்களை விட்டு வர மறுக்க சூர்யா "ஒன்லி 10 மோர் மினிட்ஸ் அண்ட் வி ஆர் டன்" என அவகாசம் கொடுக்க, அந்த நேரத்தில், "புறந்த நாளும் அதுவுமா இப்படியா  பேய் மாதிரி தலைய விரிச்சு போட்டிருப்ப"  என்றவாறே அவளுக்கு தலை வாரி, ஜடையில் பிச்சி பூவை சூடினாள் லக்ஷ்மி. அவர் பேய் என சொன்னவுடன் சந்தியா கார்த்திக்கின்  ஞாபகம் வந்தவளாய் "இப்படி விரல் பதியுற மாதிரி அடிச்சிருக்க. ஒரு சாரி கேட்டியா? கல் மனசா கார்த்திக் உனக்கு?" என நினைத்தாள்.

 

அங்கே கார்த்திக்கோ, "படிக்காதவனாட்டம் பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி அடிச்சிட்டேனே! உன் முகத்தில முழிக்க முடியுமா  சந்தியா? இதுல எப்படி சாரி கேட்பேன். ஐ டோன்ட் நோ " என்று மருகி கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அவளை காணும் பொழுதெல்லாம் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லையே என்று தன்னை நொந்தான். ஆனால் ஏன் என்று தான் யோசிக்கவில்லை. இனிமேல் அப்படி நடக்கக் கூடாது என அவன் முடிவெடுத்தான்.

 

"சந்து இன்னும் பைவ் மினிட்ஸ் இருக்கு. என் ப்ரெசண்ட்ட போட்டு போடி.. உன் லக்கி கலர்"  என்று ஸ்ரீ சொல்ல வேக வேகமாக அவள் அன்பளித்த மஞ்சளும் பச்சையும் நீயா நானா என வாதமிடுவது போல தோன்றும் எழுமிச்சை பழ நிற சுடிதாரை மாற்றி விட்டு கிளம்பும் போது  அவள் போனில் வந்த அழைப்பை எடுத்தவளிடம்  "சந்தியா, மது ஹியர். ஐ ஆம் வெயிடிங் பார் அன் ஹவர். ஆர் யு கமிங் ஆர் நாட்?" என வினவ, "கமிங் மது. ஐ வில் பி தேர் இன் 15 டு 20 மினிட்ஸ்" என்றாள். மது சற்றே கோபத்துடன் "இதே தான அப்பவும் சொன்னீங்க சந்தியா" என்றாள். "எஸ் மது. அப்போ மட்டும் இல்ல இப்பவும் அதே தான் சொல்றேன். நாக்கு பிரண்டாலும் சந்தியா வாக்கு பிரள மாட்டா. வர்ட்டா " என சூப்பர் ஸ்டார் பாணியில் சொல்லிவிட்டு மது பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பை துண்டித்தாள்.

 

குழந்தைகளை கிளப்பிக் கொண்டிருந்த சூர்யா, "கம்பெனி பாஸ்கிட்ட இப்படியா பேசுறது?" என்றான். சந்தியா "அவங்க எனக்கு இன்னும் பாஸ் ஆகலயே! அவுங்க பேசுற தொனிய பார்த்தா  எனக்கு சரியாப படல.  நான் கண்ணாடி மாதிரி, அவங்க என்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்களோ அதை அப்படியே ரிப்ளக்ட் பண்ணுவேன். எனக்கு இந்த வேல இல்லாட்டி வேற வேல" என்றவளை வியப்புடன் நோக்கினான். இது தன்னம்பிக்கையா இல்லை தலைக்கனமா? அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது - காலந்தவறாமை, உண்மை பேசுதல், சிறு சிறு விஷயத்திலும் தீவிரத்தையும் கடைபிடிப்பது, இது ஏதாவது  நடக்காவிட்டால் கோபப்படுவது, மற்றவர்களுக்கு வளைந்து கொடுக்காமல் நினைத்தை சாதிக்கும் பிடிவாதம் என்ற கார்த்திக்கின் குணத்திற்கு நேர் எதிர் சந்தியா என்பது.

 

லக்ஷ்மி சூர்யா வீட்டிற்கு மாதிரிக்கு என பிரியாணியை கொடுத்து அனுப்பினார். அவரிடமும் சந்தியாவின் சகோதரிகளிடமும் நன்றி கூறி விட்டு கிளம்பிய சூர்யாவிற்கு அவர்களின் அன்பான உபசரிப்பையும் இயல்பாக பழகிய தன்மையும் மிகவும் பிடித்திருந்தது. அவன் சந்தியாவை மதுவின் அலுவலகத்தை இறக்கி விட செல்லும் வழியில் "உங்க வீட்டில அட்சய பாத்திரம் கண்டா இருக்கா? உங்க அம்மா பிரியாணிய அள்ளி அள்ளி கொடுத்துகிட்டே இருக்கிறாங்க. டிரைவருக்கு வேற கொடுத்துருக்காங்க "  என்றான்.

 

சந்தியா, "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சூர்யா. என் ப்ரண்ட்ஸ்க்கு அம்மா பிரியாணி ரெம்ப பிடிக்கும். அவுங்களுக்கு சேத்து காலையிலே செய்துட்டாங்க. இப்போ நாம வந்ததுனால இன்னொரு ரவுண்டு சமைப்பாங்க. அம்மா பாஸ்ட் அண்ட் ஸ்மார்ட். அக்கா வேற ஹெல்ப்க்கு இருக்கா. சோ நோ ப்ராப்ளம். என் பர்த்டேக்கு இப்படி திடுதிப்புன்னு என் ப்ரண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வருவது வழக்கம்  தான். ஆனா பாய்ஸ்க்கு நோ என்ட்ரி. அப்பா இதுல ஆர்த்தோடெக்ஸ். நீங்க அர்ஜுனுக்கு ஹெல்ப் பண்ண ஓடி வந்தீங்களே எவ்ளோ பெரிய விஷயம். உங்கள வீட்டுக்கு கூப்பிடாட்டினா தான்  அப்பா கோபப்படுவாங்க. ஒரு நாள் கார்த்திக்கையும் வீட்டுக்கு இன்வைட் பண்ணனும் சூர்யா. ஆக்ச்சுவல்லி தி கிரெடிட் கோஸ் டு ஹிம்" என்றாள்.

 

பின்னர், ஒரு வழியாக என்விஷன் மேக்ஸ் நிறுவனத்தை அடைந்து சூர்யாவிற்கும், குழந்தைகளுக்கும் கையசைத்து விடை பெற்று அந்த அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்க, மணி அவளிடம் அர்ஜுனை விசாரித்து விட்டு சந்தியா கேட்டதற்குகிணங்க மது அறையை காண்பித்தார். கண்ணாடி சுவர் என்பதால் மதுவை அந்த அறையை எட்டும் முன்பே தெரிந்தது.

பளிங்கு சிலையாட்டம் இருந்த அவளின் அழகை பார்த்த சந்தியா "எப்பா..தமன்னா மாதிரி என்ன கலரு. கொஞ்சம் சமந்தா சாயல் கூட தெரியுதே. கார்த்திக்குக்கு லக்கு தான். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு சூப்பர் பிகரு கசின்னா. அதான் நம்மளை பேய் ன்னு சொன்னானோ?" என்று எண்ணிகொண்டே அவள் அறையை அடைய மதுவும் அவளை வரவேற்றாள். மதுவோ "கேர்ள் நெக்ஸ்ட் டோர் மாதிரி இருக்காளே.  லென்த்தி ஐ லாஷஸ். காஸ்மெடிக்ஸ் போடாமலே இவ்ளோ அழகா. இதை பாத்து தான் கார்த்திக் மயங்கிட்டானா? என்கிட்ட என்னலாம் சொன்னான்? மது ஏமாற மாட்டா." என நினைத்துக் கொண்டே அவளிடம் பொதுவான அறிமுகமும் விசாரிப்புகளும் முடித்துவிட்டு கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள். (பொதுவாக  ஆங்கில உரையாடல் தான். படிக்க வசதியாக தங்கலீஷில்)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.