(Reading time: 22 - 43 minutes)

 மது: 9:30 இண்டர்வியூக்கு 11:30க்கு வந்துருக்கீங்க?

 

சந்தியா: சாரி. பர்சனல் எமர்ஜென்சி.

 

மது: பெருசா ஒன்னும் இல்லைன்னு கேள்விப்பட்டேன்.

 

சந்தியா: யு ஆர் ரைட். பை காட்ஸ் கிரேஸ் .

 

மது:  தென் ஏன் லேட் ?

 

சந்தியா:  சாரி. மறுபடியும் பர்சனல் எமர்ஜென்சி.

 

மது: இப்போ என்னது?

 

சந்தியா: பெருசா ஒன்னும் இல்ல.

 

மது:  பெருசா இல்லைனா சீக்கிரம் வர வேண்டியது தான?

 

சந்தியா : அதான் பர்சனல் எமர்ஜென்சின்னு சொன்னேன்ல. முடிச்சிட்டு தான வர முடியும்.

 

(வாழைப் பழ கதையான அந்த விஷயத்தை மேல தொடராமல் விட்டாள் மது)

 

மது: இண்டர்வ்யூ முக்கியமா தெரியல உங்களுக்கு? அதுவும் சி.இ .ஓ வே உங்களுக்காக வெயிட் பண்றப்போ ?

 

சந்தியா:  சி.இ .ஓக்கே நான் முக்கியமா தெரியுறதுனால தான வெயிட் பண்றாங்க.

மது:  இன்னைக்கு காலையில் என்ன நடந்தது சந்தியா ?

 

சந்தியா: நீங்க இப்படி ஓல்ட் ஸ்டைல்ல நாட்டு நடப்பெல்லாம் கேட்பீங்கன்னு  எக்ஸ்பெக்ட் பண்ணல. இல்லாடினா சன் நியூஸ்ல மண்டல செய்திகள், சிஎன்என் இந்தியால இந்தியால நடந்தது , பிபிசில வேர்ல்ட்ல  நடந்ததுன்னு எல்லாத்தையும் பார்த்து கரைச்சு குடிச்சிட்டு, டான் டான் அன்ஸ்வர் பண்ணிருப்பேன். இப்போ என்னால  ஆடு நடந்தது .. மாடு நடந்ததுன்னுற லெவல்லுக்கு தான் சொல்ல முடியும்.

 

மது: ஹைய்யோ.... காலையில் உங்களுக்கும் கார்த்திக்கும் இடையே என்ன நடந்தது? அப்படி உங்களுக்காக ஏன் கார்த்திக் விழுந்தடிச்சு ஓடி வரணும்?.

 

சந்தியா: முதல் கேள்விக்கு அன்ச்வேர் பண்றேன். அது பெரிய கதை.  ஆனா ரெண்டாவது கேள்வி அவுட் ஓப் சிலபஸ். கார்த்திக்ட்ட கேக்க வேண்டியது .

மது: சரி. முதல் கேள்விக்காவது பதில் சொல்லுங்க.

 

சந்தியா: தமிழ்ல சொன்னா தான் நச்சுன்னு இருக்கும். (எழுந்து நின்று இரு கரங்களையும் தலை மேல் தூக்கி கும்மிடு போட்டபடி இயக்குனர் பாரதி ராஜா குரலில் ) என் இனிய என்விஷன் மேக்ஸ் நிறுவனத் தலைவியே உங்கள் பாசத்துக்குரிய சந்தியா இந்த பார்த்த முதல் நாள் படத்தின் மூலம் உங்களுக்கு...  (மது இடைமறிக்க)

 

மது: சந்தியா, ஸ்டாப் திஸ். சரி நேரடியாவே கேட்கிறேன். கார்த்திக் பொண்ணுங்ககிட்ட பேச கூட மாட்டான். பாத்த கொஞ்ச நேரத்தில இந்த அளவுக்கு உன் பின்னாடி அலைய வைச்சிருக்க. (மது படபடவென பொரிந்தாள்)

 

சந்தியா மனதிற்குள் "மது நீ மட்டமா பேசி எனக்குள் தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை சொறிஞ்சு விட்டுட்ட. உனக்கு கார்த்திக் மேல லவ்வா? லவ்ல கோபம், பொறாமை எல்லாம் இருக்கலாம் . ஆனா சந்தேகம் வரக்கூடாது. என் மொக்கை படத்தை ஓட்டி உன் டெம்பரேச்சர ஏத்தி லவ்வ டெஸ்ட் பண்ணிட வேண்டியது தான்." ( எச்சரிக்கை: மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே சந்தியாவின் மொக்கை வசனங்களை பார்க்க முடியும். இதுவரை பார்த்து கொண்டிருந்தவர்கள் அந்த தகுதியை அடைந்து விட்டீர்கள். மேலே படிக்கலாம். அப்புறம் எதுக்கு எச்சரிக்கை ன்னு சிகரட் பாக்கெட்டில் மாதிரி கடைசில போடுறீங்க நீங்க புகையுறது புரியுது. மன்னிக்கவும்.)

 

மது: உங்கிட்ட அப்படி என்ன இருக்கு ?

 

சந்தியா: அப்படி என்ன இல்ல?

 

மது: இப்படி தான் அவனை பேச்சிலயே மயக்கினியா?

 

சந்தியா: பேசி தான் மயக்கணுமா என்ன? கம்பராமாயணம் படிச்சதில்லையா ? "அண்ணலும் நோக்கினான்  அவளும் நோக்கினாள் "ன்னு.

 

மது: அப்போ கண்டதும் காதலா?

 

சந்தியா: கண்டதும் க்ளிக்கு தான்.

 

மது: வாட் ?

 

சந்தியா: கார்த்திக் என்ன பாத்தவுடனே ஐபோன்ல பட்டுன்னு போட்டோ எடுத்ததை சொன்னேன்.

 

மது: போட்டோ வா?

 

சந்தியா: கார்த்திக் சொல்லலையா .. அப்ப அந்த பைக் மேட்டர் ?

 

மது: பைக்?

 

சந்தியா: அதையும் சொல்லலயா  அவரை பைக்ல டபுள்ஸ் வைச்சு நான் ஓட்டினேன். செம த்ரில். அப்புறம் ஹாஸ்பிடல்ல வச்சு...(ரகசியமா சொல்லுவது போன்ற பாவனையுடன்)

 

மது: என்ன ஆச்சு?

 

சந்தியா: கன்னத்தை தடவியவாறே .. ப்ச்... கார்த்திக்கிற்கு ரெம்ப தைரியம் தான். அவரு பப்ளிக்கா செஞ்சுட்டாரு. (கொஞ்சுலாக) என்னால தான் வெளில சொல்ல முடியல.

 

மது: அந்த அளவுக்கு போயாச்சா? ஒரே நாளிலேவா? (மதுவிற்கு அவள் கன்னத்தில் இருந்த தடம் கூட அவன் அறைந்திருப்பான் என எண்ணாமல், வேறு ஏதோ.... என்று தோன்றியது )

 

சந்தியா: ம்... அதுவும் என் பர்த்டே அன்னைக்கு. ஐ அம் சோ லக்கி  (சற்று வெக்கத்துடன்)

 

மது: யு ..காதி! (அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மது தனக்குள் சொல்லுவது சந்தியாவிற்கும் கேட்டது)

 

சந்தியா: காதியா அது என்ன வியாதி மாதிரியே  சொல்றீங்களே ?

 

மது: ஏன் கார்த்திக் சொல்லலையா ? (சலிப்புடன்)

 

சந்தியா: டயலாக் டெலிவரிகெல்லாம் எங்க டைம் இருந்தது. கார்த்திக் ஆக்சன்ல பிஸியா இருந்தாரு.(லேசா அலுத்துகொண்டது போல)

 

மது: (தலையில் கை வைத்தவாறே வெறுப்புடன்) ஓகே சந்தியா. யு ஆர் டன். வி வில் கெட் பாக் டு யு "

 

சந்தியா:  "வேலை குடுத்தால்..... சொல்லி அனுப்பு...(நீ) உயிரோடிருந்தால் வருகிறேன்..." என்று பாடிய பிறகு "நான் போறேன். ஆனா ..

 

மது:  (அவள் பாடியதில் இன்னும் எரிச்சலைடந்த மது ) என்ன ஆனா?

 

சந்தியா:  திரும்ப வரமாட்டேன்னு சொல்ல நான் வடிவேலு இல்ல. இவ்ளோ நேரம் உங்களுக்கு டைட்டில் போட்டு, கதை சொல்லி, சங்கர் சார் ஸ்டைல்ல க்லைமாக்ஸ்ல பாட்டு வச்சு, பைனலா உங்க பீலிங்ஸ் க்கு ஏத்த மாதிரி ஒரு மெசேஜோட முடிச்சா நல்லா ரீச் ஆகும் அதான்.

 

மது: (இவள் அந்த இடத்தை விட்டு போனா போதும் என்று நினைத்து கொண்டு) ம்...ஆனா சொல்லிட்டு நிக்காத. கிளம்பு.

 

சந்தியா : பிளாப் சாங் சூப்பர் ஹிட் ஆகும். ஆனா, சூப்பர் ஹிட் சாங் ப்ளாப் ஆகுமா?  "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?" என்று பாட ஆரம்பித்தவளை எரித்து விடுவது போல மது பார்க்க, "பிடிச்சா பிக்கு பிடிக்காட்டி ட்ராப்பு. நோ வன்முறை..கொலவெறி!  ஹி...ஹி...லுக்கிங் பார்வர்ட் டு வொர்க் வித் யு"

 

என்று சொல்லி விட்டு  மதுவின் அறையை விட்டு அகன்றாள். அவள் அலுவலக வாயிலை அடைந்த போது மணியை பார்த்துவுடன் பூங்கொத்து நினைவு வர அதை அவரிடம் கேட்ட போது, "கார்த்திக் சார்ட்ட இருக்கு. இருங்க நான் போய்  வாங்கிட்டு வந்துடுறேன்" என்றார். "கார்த்திக் இங்க இருக்காரா ?" என அவள் கேட்க "ஆமாம். சார் இன்னும் வீட்டுக்கு போல. நீங்க சாரை பாக்கலயா?" என்று மணி கேட்க, "இல்ல. மதுவை தான் பார்த்தேன். கார்த்திக் எங்க இருக்காருன்னு காட்டுறீங்களா? இந்த ஆபீஸ் எனக்கு புதுசுன்றதுனால அவ்வளவா பழக்கமில்ல " என்றவளை மணி அழைத்துச் சென்றார். மதுவின் அறைக்கு அடுத்த இருந்த அறையை காட்டியவாறே மணி  "இது தான் சாரோட ரூம்"  என "சரி, நீங்க போங்க. நான் பாத்துக்கிறேன்" என்று அவரை அனுப்பிவிட்டு, அவளின் இடது பக்கம் இருந்த கண்ணாடி சுவரின் பக்க வாட்டிலே நடந்தாள்.

கார்த்திக்கின் அறைக்கு வந்து மது சொல்வதை கேட்டு  வேகமாய் எழுந்த அவன்,  கதவை திறக்க நடக்க முற்பட கண்ணாடி சுவர் இடைவெளியில் அவனை ஒட்டி வருவது போல சந்தியா வர,  அவனக்குள்  சகலமும் அடங்கி, கால்கள் மட்டும் இயந்திரத்தனமாய் கதவை நோக்கி நடக்க அவளை வைத்த கண் வாங்காமால் பார்த்துகொண்டே வந்தான்.

 

அவனை அங்கு எதிர்பார்க்காத சந்தியாவிற்கோ பேரதிர்ச்சி. அவன் பார்த்த பார்வையில் தடுமாறி அவனருகில் நடந்தது அவனோடு கைகோர்த்து நடப்பது போன்ற மாயையில் மூழ்க, தன்னினைவை இழந்தவள் அவனின் கரம் மறுபடியும் அவள் கன்னத்தை நெருங்க சுயநினைவுக்கு வந்தவளாய் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

இவ்வாறாக, இவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த சந்திப்பு ஒருவித  காந்த அலையை உருவாக்க.. கார்த்திக்கின் கரம் கண்டித்ததா? கெஞ்சியதா? கொஞ்சியதா? ஆட்டம் முடியவில்லை.. தொடரும்.

                                                                        ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 4      

Go to Episode 6

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.