(Reading time: 6 - 11 minutes)

01. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

ந்த காபி ஷாப்பில் “கார் ரிவேர்ஸ் எடுத்து கொடுத்து ஹெல்ப் பண்ணி அப்படியே பேச ஆரம்பிச்சி எல்லாமே புடிச்சி போய் அப்படியே பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்”என்று அந்த பத்துமாத கால நட்பைப் பற்றியும் மீராவை பற்றியும்   ராகமாக சொல்லிக் கொண்டிருந்தாள் ஹரிணி நரேன்திரனிடம். காலேஜ் போறதே மீராவுக்குப் போர் அடிக்குமே கம்பெனி கொடுக்கலாம் என்று சுயபுகழ்ச்சியோடு தொடர்ந்துக் கொண்டிருந்தாள். நரேனுக்கு ஹரிணி பேசி கொண்டே இருக்கணும் தான் அதை கேட்டு கொண்டே இருக்கணும் என்று ஆசை தான். ஆனால் இன்று அவன் மீராவை பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

 

மூன்று நாட்கள் முன்பு அவர்களின் நிச்சயதார்த்த விழாவில் ஆர்ப்பட்டமில்லாத அழகுடன் மின்னிய மீராவை ஹரிணியுடன் பார்த்த போதிலிருந்து அந்த ஆர்வம் அடங்க மாட்டாமலிருகிறது. அவள் அழகாய் இருக்கிறாள் என்றெல்லாம் இல்லை. எங்கேயோ அவளை முன்பு பார்த்த ஞாபகம். அந்த மஹிமீராவோ என்ற சந்தேகம். நெருடளிலும்  ஹரிணியின் ஈர்ப்பில் சிக்கி தான் போனான் நரேன். பெரும்பாலும் ஹரிணியின் பொழுதுப்போக்கு , இரசனைப் பற்றி இருந்தாலும் அதில் மீராவும் கலந்தே இருந்தாள்.

 

 ரிணி பேச்சிலிருந்து நரேனுக்கு மீரா பண்புள்ளவள், பிறர்க்கு உதவும் எண்ணம் இருப்பவள், பள்ளி பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கிற ,சூப்பரா கிட்டார் வாசிக்கிற, நல்ல சமைக்கிற, ரொம்ப கோபப்படற, நல்லத எடுத்து சொல்லும் , சிரிக்க யோசிக்கிற குட் ப்ரெண்ட். யு.ஜி பிரெண்ட்ஸோட பிளாட்ல இருக்கா. அவங்களோட ப்ரெண்ட்ஷிப்  பார்த்த ஹரிணிக்கு பொறாமையா இருக்கு என்று முடிந்த அளவு சேகரித்தும் அவனால் எதுவும் தெரிந்துக் கொள்ள முடியவில்லை கடைசியில் ஹரிணியின் கோபத்திற்கு ஆளானதை தவிர.

 

வீட்டில் "அண்ணனுக்கு நாம்ப கண்ணுக்கே தெரியறதில்லை மஹி, அண்ணாக்கு செலக்ட்டிவ் பிப்பல் ப்ளைண்ட்னெஸ் போல " என்று ஆரம்பித்தாள் நரேந்திரனின் தங்கை சூர்யா.

 

"ஆமாக்கா, அண்ணா அதோ பாரு பிங்க் கலர் காக்கா " என்று தன் பங்கில் அண்ணனை ஓட்டினான் தம்பி மகேந்திரன். பின் அங்கே கிண்டலும்  சிரிப்பும்மாக சிறிது நேரம்.

 

இரவு சாப்பாட்டு மேஜையிலும் தொடர்ந்த போது நரேந்திரனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை மறைத்து வேண்டும் என்றே மீராவை பற்றி பேச்செடுத்தான் அவன் யூகதிர்க்கேர்ப தம்பி முகத்தில் மாற்றம் தெரிந்தது. 

 

சூர்யா ஏழாம் மாதம் முடிந்து பிள்ளை பெறுவதற்கு என்று தாய் வீடு வந்திருப்பவள். மகேந்திரனும் பொறியியல் முடித்து சென்னையிலே கடந்த ஒரு வருடமாய் வேலை செய்துக் கொண்டிருக்கிறான். நரேனுக்கு தம்பியின் மாற்றத்தின் காரணம் தானே  என்று மன உறுத்தல். மகேந்திரன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். ஆனால் கொஞ்ச நாட்களாய் என்ன மாதங்களாகவே அவன் பேச்சே மறந்திருந்தான். 

 

இதே யோசனையில் இருந்தவனின்  மொபைல் சினுகியது,  ஹரிணியிடமிருந்து தான். எடுத்ததும் அவள் விளையாட்டு தனமாய்  பேச நரேனுக்கு எரிச்சல் அடக்க மாட்டாமல் எரிந்து விழுந்தான். முதல் கோபம் ஹரிணிக்கு இடியாக இதயத்தில் விழுந்தது. 

 

மூன்று நாட்கள் முன்பு இப்படி அது வலிதிருக்குமா என்று ஹரிணிக்கு தெரியாது ஆனால் இன்று ஏனோ தூக்கம் மறந்து குமுறலாகவே இருந்தது. 

 

விடிந்ததும் மனதுக்கு மாற்றம் தேவை போல் உணர்ந்தாள். மீராவிற்கு போன் செய்தாள் 

 

"உடனே டென்னிஸ் கிளுப்க்கு வா மீரா"-ஹரிணி 

 

"சரி வரேன் "-மீரா 

 

மீராவிற்கு ஆச்சரியம் ஹரிணிக்கு கோபம் வந்திருக்கே.!! அது தான்  இரண்டே வார்த்தையில் முடித்து அதை நேரில் பார்த்து தெரிந்துக்கொள்ள கிளம்பிவிட்டாள்.

 

டென்னிஸ் கிளபில் ஹரிணியை பார்த்ததுமே மீராவிற்கு புரிந்து விட்டது ஹரிணியின் வீங்கிய கண், நெத்தி சுருக்கம். அவள் யோசனை பலமாக உள்ளது என்று.

 

சூழ்நிலை புரிந்த மீரா 

 

"காலைல கூட எப்படி இவ்வளோ ஹாட்டா  இருக்க” -மீரா 

 

பதிலுக்கு ஹரிணி முறிக்க 

 

"நான் உன் இந்த ஷார்ட்ஸ் பத்தி மட்டு தான் சொன்னேன் "என்று குறும்பாய் மீரா சொல்லியும் ஹரிணி சூடாகவே இருந்தாள்.

 

“மீரா, நான் நரேனுக்கு சூட் ஆவேனா?”- ஹரிணி 

 

“ஏன் இப்படி ஒரு கேள்வி" மீரா கேள்வியாய் சாதாரணமாக கேட்க 

 

"அவர் என் மேல நேத்து எப்படி கோப பட்டார் தெரியுமா?,நைட் தூக்கமே வரல, காரணமே தெரியாம அழவும் முடியாம இதெல்லாம் எனக்கு ஒரு மாதிரி ஸ்ட்ரெஸா இருக்கு.” 

 

மீரா சிரித்துக்கொண்டே “பாரு இதெல்லாம் சகஜம், அவர் பக்கமும் யோசிச்சி பாரு எல்லாம் சரி ஆகிடும், ஏதோ அவர் வொர்க் டென்ஷன் உன் மேல அது ரிப்லெக்ட் ஆகியிருக்கு, கோபம் உரிமையை காட்டும்மா” என்று பெரிதாய் ஆரம்பித்து குறும்பாய் முடித்தாள்

 

ஹரிணிக்கு ஆச்சரியம் பொங்கியது மீரா சிரிச்சா எவ்வளோ அழகு!! இருக்கமாய் இருக்கும் மீரவையே பார்த்த ஹரிணிக்கு அது அதிசயமாகவே இருந்தது . லயித்து நின்றவளின் பின் யாரோ கனைக்கும் சத்தம். திரும்பியவளுக்கு கண்கள் விரிந்தது.

 

"நீங்க எப்படி இங்க?"-ஹரிணி 

 

“என் லவ் தேடிட்டு வந்தேன் " -நரேன் 

 

"கிடச்சதா?"-மீரா 

 

“ம்ம்ம்” என்று ஹரிணியை தன் தோளோடு சேர்த்துக் கொண்டான்.

 

“மீ..! சாரி மீரா சொன்ன மாதிரி ஹாட்டா தான் இருக்க”-நரேன்

 

ஹரிணிக்கு முகம் சிவந்தது. மீராவுக்கு முகம் கருத்தது. அங்கே மனநிலை அழகாய் மாற்றம் காட்டியது.

 

“சரிப்பா  காலங்காத்தால இப்படி ஒரு ரொமான்ஸ் சீன் சூப்பர்!! இதோட நான் கிளம்பறேன், அப்பறம் கரடினு பேர் வெச்சிட போறீங்க” என்று சொல்லிக் கொண்டே தன் ஆக்டிவாவில்  பறந்து விட்டாள் மீரா.

 

“சாரி ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்” - நரேன் 

 

"நானும் " -ஹரிணி 

 

இனிதாய் அங்கே காதல் தொடர்ந்தது. அந்த “மீ..!” யில் மீராவிற்கு கலவரம் ஆரம்பித்தது. காலை காபி, யாரோ எங்கோ பேசும் வார்த்தை, காற்றில் கலந்து வரும் பாட்டு, சிரிக்கும் குழந்தை, ரோட் சிக்னல், எதிர்க்கே வரும் வண்டி,என எல்லாமே தனக்கு எதிராய் பழைய நினைவுகளை திரட்டி கொட்டுதே என்று மனம் குமுற, தொடங்கியது அந்த நாள். பின் காலேஜ்,கவி கீர்த்தனாவுடன் அரட்டை, என எப்போதும் போல்  நாள் கழிந்தும் போனது .பின் வரும் நாட்கள் வானவில்லின் வண்ணத்தில் வரவிருக்கு என்பதை மீராவிற்கு குறிப்பால் காட்டாது. 

 

உலகமே சிறிதாக தோன்றும், பசி, தூக்கம், துக்கம், தாகம், கோபம் என எல்லாம் மறக்கும் அந்த சின்ன அன்பின் பிடியில், இதில் உண்மை பொய் எதுவுமே இல்லை. வெறும் கல்லையும் வைரமாய் பாவிக்கும் காதல். இது உணர்தவன்னுக்கு மட்டுமே புரியும், காதலித்து பார் ஓடும் கடிகாரத்தை நிறுத்த துடிக்கும் மனம். இரசாயன மாற்றத்தில் தோன்றுவதோ!! இல்லை வயதின் தேடலோ? கள்ளமில்லாத அன்பில் மனிதம் வளர்கிறது. காதல் வளர்க்கிறது. 

தொடரும்


Go to Ninaikkatha naal illai rathiye 02

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.