(Reading time: 17 - 33 minutes)

07. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ஆட்டம் 8

து அறைக்கதவை திறந்து கொண்டு கையில் பைல்லோடு வந்தாள்.

இன்டெர்காமை எடுத்த கார்த்திக், "எஸ் மாம்" என்ற பின் "இல்ல...அது சைலென்ட் மோட்ல .." என்று முழுமையாக சொல்ல முடியாமல் எதிர்முனையில் என்ன கேட்டானோ அவனது முகம் இறுகியது. சிறிது நேரத்தில் "ஓகே மாம். சி யு" உணர்ச்சியற்ற முகத்தோடு போன்ஐ வைத்தான்.

அதே நேரத்தில் உள்ளே வந்த மதுவும் அவனை கவனித்தவாறு, "யாரு?...அத்தையா?" என கேட்க, "ம்..." என்றவன் அதற்கு மேல் அதை பற்றி  பேச விரும்பாதவனாய்,  "பேப்பர்ஸ் எல்லாம் சைன் பண்ணியாச்சா ?" என கேட்க

"காதி..கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு. சந்தியாவோட டெசிக்நேஷன் வெறும் ட்ரைனின்னு  இருக்கு. நீ ஏன் ட்ரைனி அனலிஸ்ட்ன்னு தெளிவா சொல்லலை?" என்றாள் மது.

"இந்த டவுட் எல்லாம் ப்ரூப்  பாத்த அப்ப கேட்கணும்ன்னு தோணலையா ?" என்றான் எரிச்சலுடன்.  பின் "சந்தியாக்கு பிரச்சனையை கையாளுற திறமை இயல்பாவே இருக்குது. அவ உன்னோட BPO க்ளையன்ட்ஸ்ஸ அழகா  சமாளிச்சிடுவா. சோ, உனக்கு கீழ அக்கௌன்ட் மேனேஜரா  இருந்துகிட்டே ரெண்டு மணி நேரம் என்கிட்ட அனலிஸ்ட் ட்ரைனிங் எடுக்கிற மாதிரி பிளான் பண்ணேன். அதான்  ட்ரைன்னீன்னு  பொதுவா போட்டேன்"  என்றான்.  

கார்த்திக் சந்தியாவை புகழ்வது பொறுக்காது, "அதுக்கு தான் நமக்கு மஹா இருக்காங்களே. திறமை மட்டும் போதுமா? அவுங்க அனுபவம் சந்தியாவுக்கு கிடையாது. அவுங்க இடத்துல சந்தியாவை போட எனக்கு இஷ்டமில்லை காதி" என்றாள் மது வெளிப்படையாக.

 "ஓகே. நாளைக்கு பத்து மணிக்கு நம்ம  'சிக்மா' ப்ராஜெக்ட்  க்ளயன்ட் 'ரிக் அன்டேர்சன்' னோட கான்ப்ரன்ஸ் கால் இருக்கு. அதுல மஹாவோட சந்தியாவும் அட்டெண்ட் பண்ணட்டும். அதை பாத்துட்டு  நாம முடிவெடுக்கலாம்." என்றான் கார்த்திக்.

"காதி, விளையாடுறியா ? ரிக் கடியான ஆளு. அதோட அந்த ப்ராஜெக்ட்ல ஏகப்பட்ட பிரச்சனைன்னு  ஹி இஸ் நாட் ஹாப்பி. என்ன செய்தாலும் குறை சொல்லிகிட்டே இருக்கான். இந்த சமயத்தில இப்படி ஒரு ரிஸ்க்  நமக்கு தேவையா?" என்றாள் மது.

வர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த சந்தியா, "அட பாவிங்களா.. உயிரோட இருக்கும் போதே என்னை புதைக்கவா..எரிக்கவான்னுல சண்டை போடுறாங்க " என்று எண்ணியவாறே "ஹே.. என்ன நடக்குது இங்க? " என்றாள் பொதுவாக.

கார்த்திக் சந்தியாவை பார்த்து "சந்தியா நீ நாளைக்கே ஜாயின் பண்ண வேண்டியிருக்கும். உன்னோட ரோல்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸிபிலிடீஸ் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கோம். உனக்கு ஏதாவது கேள்வி இருக்கா?"

சந்தியா "கார்த்திக், இது என்ன கேள்வி? நான் எப்ப நாளைக்கு ஜாயின் பண்றேன்னு சொன்னேன்?"

கார்த்திக், "அதுல உனக்கு என்ன கஷ்டம் ?"

சந்தியா, "இன்னும் MBA ல பண்ண ப்ராஜெக்ட்டோட வைவா-வோஸ் கூட முடியல. செமஸ்டர் ஹாலிடேஸ்ஸ  என்ஜாய் பண்ணவிடாம அதுக்குள்ள வரச்சொன்னா எப்படி? ரெண்டு வருஷமா ஹொஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு. எங்க அம்மாவுக்கு வேற ஸ்கூல் லீவு. நல்லா வித விதமா சமைச்சு போடுவாங்க. மே மாச வெயிலுக்கு அதுக்கும் மத்தியானம் கும்முன்னு சாப்பிட்டவுடனே ஒரு கிறக்கு கிறக்கும் பாருங்களேன் ... அப்படியே ஒரு குட்டி தூக்கம். நல்லா தூங்கி முழிச்சவுடன் எங்க ஏரியா குட்டீஸ் அண்ட் அக்கா குட்டீஸ் கூட ஒளிஞ்சு விளாட்டு, கண்ணை கட்டி விளையாட்டு, கல்லா மண்ணா, நொண்டி விளாட்டு, ஓடி பிடிச்சு விளாட்டு..இப்படி எல்லாம் முடிச்சு டயர்ட் ஆகறதுனால தெம்பூட்ட அப்படியே சூடா ஒரு மசாலா சாய் வித் மேரி கோல்ட் டீ டைம் பிஸ்கட் .. சான்ஸ் லெஸ். சம்மர்ல இந்த லைப்ப மிஸ் பண்ணவே முடியாது.  நான் வேணும்னா ஜூன்ல ஜாயின் பண்றேன். எங்க அம்மா  அந்த நேரம் ஸ்கூல்லுக்கு போயிடுவாங்க."

ந்தியாவைத் தான், காலையில் இருந்தே  பார்க்கிறானே கார்த்திக். அவனுக்கு தெரியாததா? அவன் மனதிற்குள் "உனக்கு மவுசு இருக்குன்னு தெரிஞ்சு தான புளியங்கொம்பை விட்டு இறங்க மாட்டேன்ற. இந்த நேரத்தில நான்  சைலென்ட்டா இருந்தா ஏற்கனவே கொதிச்சுகிட்டு இருக்கிற மது பொங்கி எழுவா.... அப்போ அவளுக்கு ப்ரூவ் பண்றேன்ட்டு நாளைக்கே வேலைல சேந்துடுவ. " என்று திட்டமிட்ட படியே, அவள் சொல்லி முடிக்கவும் பதிலேதும் சொல்லாமல் மதுவை பார்த்தான்.

மது கார்த்திக்கிடம் "பாத்தியா.. காதி...கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம எல்.கே.ஜி பிள்ளையாட்டம் பிஸ்கட் சாப்பிடணும்.. ஓடி பிடிச்சு விளையாடணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கா. இவளை நம்பி  எப்படி ஹண்ட்ரெட் தௌசண்ட் டாலர் வொர்த் அக்கௌன்ட்ட கைல கொடுக்க முடியும் . அமெரிக்க க்ளைன்ட்ஸ்ஸுக்கு பங்க்ச்சுவாலிட்டி ரெம்ப முக்கியம். 9:30 இண்டர்வ்யூக்கு 11:30க்கு வர்றா. அதுக்கு மன்னிப்பு கேட்கனும்னு தோணலை. எதையும் தெளிவா பேச மாட்டேன்றா. பொய் சொல்றா.. இது போதாதுன்னு அதுக்கு  திருவள்ளுவர் சாக்கு.... இப்படி கொஞ்சம் கூட சாப்ட் ஸ்கில்ஸ் இல்லாதவளை அக்கௌன்ட் மேனஜரா என் தலைல கட்டிட்டு நீ அடுத்த மூணு மாசம் அமெரிக்கா போயிடுவ. அப்புறம் நான்ல தனியா கிடந்து கஷ்டப்படணும்... ஆளை விடு... " என்றாள் மது.

கார்த்திக், சந்தியாவிற்காக போராடி தோற்ற பாவனையுடன் மவுனமாய் சந்தியாவை பார்க்க, சந்தியா "பச்ச பிள்ளை மாதிரியே பாக்கிறியே கார்த்திகேயா...சரி போனா.. போகுது... உன் தெய்வானைக்கு செண்டிமெண்ட் டார்ச்சர் மட்டும் கொடுத்து  மன்னிச்சு விடுறேன்.." என நினைத்து மதுவிடம் "நீங்க கொஞ்சம் என் சாண்டல்ஸ்ல கால விட்டீங்கனா தான தெரியும்.. அது கடிக்குதா.. கிஸ் கொடுக்குதான்னு... " என்றாள்.

மது  புரியாமல் "வாட்?" என கேட்க, சந்தியா அதற்கு "அதான்.....என் சிடுவேஷன்ல இருந்து யோசிங்கன்னு சொன்னேன்.....நான் இப்போ வேலை, சம்பாத்தியம்ன்னு ஓட ஆரம்பிச்சேன்னா ...அப்புறம்.....கல்யாணம், குடும்பம், குழந்தை, குட்டி அப்படின்னு ஓடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.......அடுத்த சம்மர்க்கு  என் அம்மா கையால சாப்பிட முடியுமா? கஷ்டமோ நஷ்டமோ  எந்த குறையும் சொல்லாம வீட்டுகாரர் சமைச்சு கொடுக்கிறத கண்ண கசக்காம  சாப்பிட்டாகணும். அப்போ தான்அடுத்த வேளைக்கு சாப்பாடு கிடைக்கும்" என்றாள் சந்தியா.

அதை பார்த்த கார்த்திக் "இந்த பேய்யை கட்டி சமைச்சு போடுற துரதிர்ஷ்டசாலி? ஐய்ஐய்யோ... நான் இல்லப்பா....சமைக்க தெரியாத புருஷன் கிடைச்சா வாம்பைர் மாதிரி அவனையே சாப்பிடுவாளோ என்னவோ? " மனதுக்குள் விமர்சித்துக் கொண்டே  ஊமையான அவனது போனை சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.

சந்தியா தொடர்ந்தாள். "தூக்கில் போடுறவன்கிட்ட கூட கடைசி ஆசைய கேட்டு நிறைவேத்தி வைப்பாங்க. நான் என்ன தப்பா கேட்டேன் மது? என் ஸ்டுடென்ட் லைப் முடிய போகுது. அதான் ஜாயின் பண்ண ரெண்டு வாரம் எக்ஸ்ட்ரா கேட்டேன் . அதுக்கு காரணமா என்னோட சின்ன சின்ன ஆசைகளைச் சொன்னேன். அதுக்கு எதுக்கு என் மேல உள்ள பழைய கேஸ் எல்லாம் மறுபடியும் ஓபன் பண்றீங்க? சரி ...அந்த ஆபர் லெட்டரையும், கான்ட்ராக்ட் லெட்டரையும் கொடுங்க. உங்க லட்சம் டாலர் க்ளயண்ட் அக்கௌன்ட்டுக்கு நான் கேரெண்டி"  என்று வருத்தத்துடன் ஆரம்பித்து அழுத்துக் கொள்வது போல முடித்தாள்.

அதை பார்த்த மது மனதிற்குள் "இவ நல்லவளா? கெட்டவளா? " என்று எண்ணிகொண்டே மறு பேச்சு பேசாமல் அதை கொடுத்தாள். சந்தியாவின் பேச்சில் கோபம் தணிந்திருந்தாள் மது.  கார்த்திக் "குட் கேர்ள் சந்தியா. எப்படி சீக்கிரம் இறங்கி வந்துட்ட?. அடம்பிடிக்காம அப்படியே சைன் போட்டேன்னா நல்லது."  என்றான் மனதிற்குள்.

பைல் ஐ வாங்கி அதை படிக்க போனவள் ஏதோ நினைவு வந்தவளாய் கார்த்திக்கிடம் "ஒரு கண்டிஷன்" என்றாள். "அதான பாத்தேன்.." என மனதிற்குள் எண்ணிக்கொண்டே "சொல்லு சந்தியா.. "  என்க "கார்த்திக் நான் இன்னும் த்ரீ வீக்ஸ்ல ஜூன் 1-4 சென்னைல எங்க காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லாம்  கெட் டுகெதர் பிளான் பண்ணி இருக்கோம். ஜூன் பர்ஸ்ட் ப்ராஜெக்ட் டெமோ  காலேஜ்க்கு போகணும். ஜூன் 4த் ப்ர்ண்ட் மேரேஜ்.என்னால மிஸ் பண்ண முடியாது  " என்றாள்.

கார்த்திக் சந்தியாவிடம் "சந்தியா,  நான் உன்னை நாளைக்கே ஜாயின் பண்ண சொல்றதுல ரீசன் இருக்கு. நீ சொன்ன ஜூன் 4 அன்னைக்கு சென்னைல ஒரு மீட்டிங் முடிச்சிட்டு அப்படியே அமெரிக்கா போனா மூணு மாசம் கழிச்சு தான் வருவேன். நான் இங்க இருக்கும் போதே உனக்கு முக்கியமானதை ட்ரைன் பண்ணா நல்லதுன்னு தான் சீக்கிரம்  ஜாயின் பண்ண சொன்னேன்.  மத்த படி நீ லீவ்வே  எடுக்க கூடாதுன்னு போர்ஸ் பண்ணலை. காலேஜ் லைப்ல இது ஒரு  கோல்டன்  மொமென்ட்!அடுத்து எல்லாரும் இப்படி மீட் பண்ணறது ஈஸி இல்ல. சோ என்ஜாய்!" என்றான்.

"தேங்க்ஸ் கார்த்திக்." என்ற படி வேலை நியமன கடிதத்தை படித்தாள்.

ந்த கடிதத்தில், கார்த்திக், மது இருவருமே சி.இ.ஓ என்று இருந்ததை பார்த்த பின் தான் அவளுக்கு அவன் யார் என்பதே தெளிவாக தெரிந்தது. "கார்த்திக் நீ கூஜான்னு நினைச்சேன் ...ராஜாவா?!!!" மனதிற்குள் வியந்து கொண்டாள்.

அவள் மதுவை பார்த்து "ஆடிட்டர் அங்கிள் மதுகாதின்னு யாரோ தான் பாஸ்ன்னு சொன்னாங்க.. ஆனா உங்க பேரு மதுமிதா ன்னு இருக்கே.. " என்று யோசனையோடு நிறுத்தினாள்.

"ஆடிட்டர் னா... ஓ...ராஜ்மோகன் மாமா சொன்னாங்களா?.. அது ரெண்டு பேரு - மது நானு, காதின்னு சொன்னது கார்த்திக்கை.. வீட்ல அவனை காதின்னு தான் கூப்பிடுவோம்"  என்ற மதுவிடம்

"வேட்டையாடு விளையாடு படத்தில கூட இன்டர்வல் அப்போ ஒருவழியா இரண்டு வில்லன்னு தெரிஞ்சுடும். ஆனா எனக்கு கடைசியா ஆபர் லெட்டர் வாங்குறப்போ தான் தெரியுது இரண்டு பாஸ் ன்னு"  என்றாள் அழுத்து கொள்வது போல சந்தியா.

"எங்களை பாத்தா உனக்கு வில்லனாட்டம் தெரியுதா? காதி யாருன்னு தெரியுமா? ஐஐடில என்ஜீனியரிங் , ஹார்வர்ட்ல  எம்.பி. ஏ இந்த மாதிரி டாப் ஸ்கூல்ஸ்ல படிச்ச  உலகத்திலே ஒன் ஆப் தி டாப்  "டேட்டா சயின்ட்ஸ்ட்". ஒரு ப்ரெஷ்ஷரா இருந்துக்கிட்டு அவன் கூட வொர்க் பண்ற சான்ஸ் கிடைச்சதே உனக்கு பெருசு." என்றாள் மது.

அதை கேட்டவுடன் சந்தியா கார்த்திக்கிடம்  "ரியல்லி? ப்ரௌட் ஆப் யு கார்த்திக்! இந்த சயின்ட்ஸ்ட்ட சிக்கின டெஸ்ட் மங்கி நான் தானா?" வியப்பாக சொல்லி விட்டு கிண்டலில் முடித்தாள்.

கார்த்திக் சந்தியாவிடம் "ம்....உண்மையிலே பேய்கிட்ட சிக்கின ஸ்பெசி 'மேன்' நான் தான்"

சந்தியா, "அப்ப ஆட்டி படைக்காம விட மாட்டேன் கார்த்திக் "

கார்த்திக், "இப்பவும் அதை தான  செய்துகிட்டு இருக்க"

சந்தியா "அக்சுவலா பர்த் டேன்றதுனால நான் பார்ம்லே இல்ல கார்த்திக்"

கார்த்திக், "பார்ம்ல..... இல்லயா?(சிவாஜி செத்துட்டாரா... மாதிரி சொன்னான் ஒரு கதறலுடன்)....மது, நான் நைட்டோட நைட்டா  மூட்டை முடிச்ச கட்டி  USக்கே ஓடிடுறேன் " என்றான் மதுவை பார்த்த படி.

அதை கேட்ட மதுவும், "அப்போ என் கதி?" என அவர்கள் பேச்சில் இணைந்தாள்.

கார்த்திக்,  "அதான்... அப்பவே அதோகதி ஆகிடுச்சே" என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.