(Reading time: 17 - 33 minutes)

து, "பார்ம்ல இல்லாதப்பவே என்னை என்னம்மா பின்னி எடுத்துட்டா..." கவலையுடன் சொல்ல,

சந்தியா, மதுவிடம் "அட விடுங்க மது.. சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?" என

கார்த்திக்,  "மது, ரெம்ப பயமா இருந்தா நீ வேணா மலேசியா போயிடேன்...." என்றான் குறும்பாக சிரித்த படி. மது கார்த்திக்கை முறைக்கவே, கார்த்திக் பேச்சை திசை திருப்ப

சந்தியாவிடம், "சரி, சரி சீக்கிரம் சைன்ன போடு. " என்றான் கார்த்திக்.

"எதுக்கு அவசரம்...பொறுமை...நீங்க கோபத்தில மட்டும் தான் நம்ம கேப்டன் சார் மாதிரி இருப்பீங்கன்னு நினச்சேன்... ஹர்வர்ட்ல படிச்சிட்டு தாய் நாட்டில வந்து பிஸ்னஸ் பண்றீங்க.. அன்னிய ஊடுறவலை தடுக்க கேப்டன், அன்னிய செலாவணிய  ஈட்ட கார்த்திக்...சேம் ப்ளட்... என்ன நாட்டு பற்று!" என்றாள் சந்தியா.

வள் சொன்னதை கேட்டு கார்த்திக்கும் மதுவும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்தனர். கார்த்திக் சந்தியாவிடம் "நான் அமெரிக்கன் சிட்டிசன் " என்றான்.

" அமெரிக்கன் சிட்டிசன்னா?  எங்க தல  பட டைட்டில் எல்லாம் இப்படி காபிரைட்ஸ் இல்லாம காபி பேஸ்ட் பண்ண கூடாது கார்த்திக். அமெரிக்கன் சொன்ன போதும். உங்களுக்கு இந்தியால என்ன வேலை?" என்றாள் சந்தியா விளையாட்டாக.

"ஜஸ்ட் பார் மை டாட். அப்பாக்கு போன் கான்சர். பட் ஏர்லி ஸ்டேஜ். மைல்ட் ரிஸ்க் தான்.  அப்பா அமெரிக்காவுக்கு வர மாட்டேன் சொல்லிட்டாங்க. அம்மாவும் ரெம்ப டல்லாகிட்டாங்க. தட்ஸ் ஒய் ஐ அம் ஹியர். கிட்டதட்ட இரண்டு வருஷமா இங்க இருக்கிறேன். என்னோட வேலைய  இங்க இருந்தே  எவ்ளோ முடியமோ அவ்வளோ செய்துட்டு ஆன்சைட்க்கு போகுற தேவை இருந்தா மட்டும் ட்ராவல் பண்ணுவேன்." என்றான் கார்த்திக்.

மது சந்தியாவிடம் "காதி, கிட்ட தட்ட வருஷத்தில பாதி நாள்  வீட்டில் இருக்க மாட்டேன். இருந்தாலும் காதி இருந்தா மாமாக்கு மட்டும் இல்ல எங்க எல்லாருக்குமே ஒரு தனி பலம். ரெம்ப சப்போர்டிவ்வா இருப்பான்."

சந்தியா "நாட்டுக்காக இல்லாட்டியும் வீட்டுக்காக வந்தீங்களே கார்த்திக். அங்கிள்கிட்ட நான் சொன்னேன் சொல்லுங்க... இடுக்கண் வருங்கால் நகுக...."

."..நாம சாவ பாத்து நடுங்க கூடாது. சாவு தான் நம்மள பாத்து பயந்து நடுங்கணும்.. அப்படின்னு" என்றாள்.

"சாவு" என்பதை எவ்வளவு பெரிய வார்த்தை. புற்று நோய் என்றால் உயிர் பயம் இருக்க தானே செய்யும். கார்த்திக்கின் தந்தை நோயை பற்றி சொன்னால் கேட்டவர்கள் பொதுவாக பதறுவர், புலம்புவர், பயமுறுத்துவர், வருந்துவர் இல்லை ஆறுதல் சொல்வர். ஆனால் இவளோ தைரியம் சொல்கிறாளே! அதுவும் உற்சாகம் கொடுக்கும் நகைச்சுவை உணர்வோடு. அவள் பேசியது மதுவிற்கு வியப்பாகவும், கார்த்திக்கிற்கு இதமாகவும் இருந்தது. அவனும் உற்சாகத்தோட பதில் தந்தான்.

கார்த்திக், "அதுக்கு  உன்னை பார்த்து ப்ராக்டிஸ் பண்ண சொன்ன போச்சு. ஆனாலும் எப்படி எந்த சிட்டுவேஷன்லயும் பஞ்ச் டையலாக்கா விடாம பிச்சு உதறுற?"

சந்தியா "அது அதுவா வருது கார்த்திக்..."

கார்த்திக், "இண்டர்வியூக்கு ஓபி அடிச்சு பிரியாணி சாப்பிட்டு தெம்பா வந்தா எல்லாம் வரும் ... நாங்க லஞ்ச்க்கு போக வேண்டாமா? சீக்கிரம் சைன் ன போடு"

சந்தியா "பிரியாணி மாட்டர் தெரிஞ்சிடுச்சா... சூர்யாவா ? ......நீங்க இங்க இருக்கவே மாட்டீங்கன்னு  சூர்யா சொன்னது பொய் தான?" என்றாள். "நான் தான் பாஸ் ன்னு தெரிஞ்சா கோபத்தில இங்க வரமாட்டியோன்னு அவன்ட்ட அப்படி சொல்ல சொன்னேன். அப்புறம் போன்ன  சைலென்ட் மோட்ல போட்டதால உன்னை ஆபிஸ்ல ட்ராப் பண்ணப்பவே அவன் கால் பண்ணிட்டு SMS பண்ணிருக்கான். அதை இப்ப தான்....மோட் ரிசெட் பண்றப்போ பாத்தேன். " என்றான் கார்த்திக்.

அவன் சொன்னவுடன் சந்தியாவிற்கு மருத்துவமனை நினைவு வரவே, "கார்த்திக் நான் சைன் போடணும்னா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். செய்வீங்களா? ப்ராமிஸ் பண்ணனும்" என்றாள்.

கார்த்திக், "அந்த சைன்ன போடுறதுக்குள்ள  என்ன பாடு படுத்த போறாளோ?" என்று நினைத்துக் கொண்டே, "செய்ய முடியுறதா இருந்தா கண்டிப்பா செய்றேன்"

சந்தியா "அதெல்லாம் செய்ய முடியும். என்னன்னு சொல்றேன். உங்களால அந்த ஹாஸ்பிட்டல் ரிசெப்சனிஸ்ட்க்கு  ப்ராப்ளம்.  உங்களை மாதிரி பணக்காரவுங்க ஏதாவது சொல்லிட்டு போயிடுவீங்க. பாவம் அந்த ஏழை பொண்ணு பொழப்புல மண்ணு.  பாவம், முகமே வீங்கி  போற அளவு ரெம்ப அழுதா. அதுக்காகவாது நீங்க அவகிட்ட நேர்ல போய் சாரி கேட்கணும். அவங்க ஹெட் கிளார்க் சீப் டாக்டர்ட்ட போட்டு கொடுத்திருப்பார்ன்னு பயந்தாள்.  நீங்க வந்தா அவங்க சீப் டாக்டர் போன் நம்பர் கொடுக்க சொல்லிருந்தேன். அதை அவகிட்ட  வாங்கி அவங்கள்ட்ட பேச முடியுமா? நீங்க சொன்னா  கேட்பாங்க தான ? "

கார்த்திக் அதற்கு "என்னால அவகிட்ட சாரி எல்லாம் கேட்க முடியாது. நீ சொன்ன மாதிரியே வைச்சாலும் பணக்காரனையே மதிக்காதவ  அடிமட்டத்தில இருக்கிறவங்க விவரம் தெரியாம ஏதாவது கேட்டா சொல்லியிருப்பாளா? ரிசெப்சனிஸ்ட்க்கு ஹாஸ்பிட்டாளிட்டி முக்கியம், அதுவும் ஹாஸ்பிட்டல் ப்ரொண்ட் டெஸ்க்குக்கு  ரெம்ப முக்கியம். அது தெரியாதவங்க அந்த வேலைக்கு லாயக்கு இல்ல. நான் வேணா எங்க அப்பா கன்சர்ன்ல அந்த பொண்ணுக்கு வேற வேலைக்கு ரெகமெண்ட் பண்றேன். அவ்வளவு தான் என்னால செய்ய முடியும்" என்றான் கண்டிப்புடன்.

சந்தியா "சரியான திமிர் பிடிச்சவன்" என மனதிற்குள் திட்டி கொண்டே, "ஒருத்தரோட நிறைகளை பத்தி பத்து பேருக்கு முன்னாடி பாராட்டணும், குறைகளை தனியா கூப்பிட்டு சொல்லணும். நீங்க இவ்ளோ படிச்சு இருக்கீங்க. அப்படி இருந்தும் கோபத்தில் அப்படி ரியாக்ட் பண்ணது சரியா? நம்ம மேல தப்பு இருக்கிறப்போ மத்தவங்களை குத்தம் சொல்லக் கூடாது.. நீங்க அவளுக்கு பொறுமையா அவ தப்பை சுட்டி காட்டி இருக்கலாம்ல" என சொல்ல, கார்த்திக் தனது தவறை உணர்ந்தாலும் நேரில் சென்று மன்னிப்பு கேட்பது தகுதி குறைவாக எண்ணினான். தொலைபேசியில் அந்த பெண்ணிடம் பேசுகிறேன் என்பதற்கு சந்தியா மருத்துவமனை போயே ஆக வேண்டும் என அடம் பிடித்தாள்.

கார்த்திக் "இவ ஏன் நேர்ல பாத்து சொல்லனும்னு அடம்பிடிக்கிறா.. சரியா படலையே.. மதுவையே கணக்கு வச்சு வஞ்சம் தீத்தவ... நம்ம கன்னத்தில் அறைந்ததை இன்னும் மனசுல வைச்சு ப்ளே பண்றாளோ?.. சரி ஹாஸ்பிட்டல் போனா தெரிய போகுது. ஆனா ரிசெப்சனிஸ்ட்கிட்ட சாரி எல்லாம் கேட்க மாட்டேன்" என மனதிற்குள் சிந்தித்து கொண்டிருந்தான்.

அதை பார்த்த சந்தியா, "சப்ப மேட்டர்கெல்லாம் உங்க வாஷிங் மெஷின ஓட்டாதீங்க பாஸ்..." என்றாள்.

"சரி ஹாஸ்பிட்டல் போறேன். ஆனா ஒன்னு சொல்லு. என் மேல உனக்கு கோபமே இல்லையா?" என்றான் கார்த்திக்.

சந்தியா அதற்கு  "கார்த்திக், தாடி தாத்தா என்ன சொல்லிருக்காருன்னா இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண  " என ஆரம்பிக்க கார்த்திக் இடைமறித்து "அய்யோ...விட்டுடும்மா. அந்த ஷட்டர க்ளோஸ் பண்ணிட்டு சைன்ன போடுறியா?" என கேட்க அவள் கட கடவென மேலோட்டமாக பார்த்து விட்டு கையெழுத்திட்டாள்.

வர்கள் பேசுவதை புரிந்தும் புரியாமலும் வெறும் பார்வையாளராக மட்டும் பார்த்து கொண்டிருந்த மதுவிற்கு கார்த்திக் அவளிடம் சகஜமாக பழகியதை  பார்க்க வியப்பாக இருந்தது. கார்த்திக் தனது குடும்பாத்தார் தவிர மற்ற பெண்களிடம் அனாவசியமாக  பேசியது இல்லை. அப்படி யாராவது வந்தாலும் அவனின்  இனிமையான  பேச்சில் அவர்கள் திமிர் பிடித்தவன் என பட்டம் வழங்கி ஓட்டம் கட்டி விடுவர். கார்த்திக்கிடம் கேட்க ஒரு மூட்டை கேள்விகளை வைத்து கொண்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள் மது.

சந்தியா கையெழுத்திட்ட பின், மது தனது கைப்பை எடுக்க அவள் அறைக்கு சென்றாள்.

மது சென்ற பின், கார்த்திக் சந்தியாவிடம் , "சாலரி எல்லாம் ஓகேவா?" என கேட்க, அவளோ "ம்...உங்களால இவ்வளவு தான் முடியும்னு  தெரிஞ்சது தான" என்றாள் இளக்காரமாக அவனை பார்த்து.  அவளுக்கு ஒரு நல்ல தொகையை சம்பளமாக அந்த கடிதத்தில் குறித்திருந்தான் கார்த்திக்.

அவள் சொல்வதை கேட்டு கார்த்திக்கிற்கு கோபம் வர, "சந்தியா உனக்கு ஈமெயில் வரும். இப்போ நீ கிளம்பு" என்றான் கோபத்துடன்.

சந்தியா, "என்ன அங்கரி பர்ட்..  ஹாஸ்பிட்டல் கண்டிப்பா போவீங்கள்ள?"

"நான் சொன்னதை செய்வேன் " என்றான் கார்த்திக் அவளிடம்.

அதற்கு சந்தியா "அப்படியா?......ஆனா சந்தியா சொல்றதை செய்ய மாட்டா, செய்றதை சொல்ல மாட்டாளே " என புன்முறுவலுடன் சொல்ல, எதோ புரிந்து கொண்டவன் போல கார்த்திக் அவளிடம் ,

"சந்தியா ... நான் மது மாதிரி கிடையாது.....என்கிட்ட விளையாண்டா உனக்கு ரெம்ப கஷ்டம்" என்றான் கோபமாக.  "கஷ்டமா...எனக்கா...எனக்கு அங்கரி பர்ட் கேம்ஸ் எல்லாமே ரெம்ப பிடிக்கும்" என்றாள் விளையாட்டாக இரு பொருள் பட.

"அப்படியா... ஒரு சாம்பிள் தெரிஞ்சுக்கோ...நீ பேச்சுக்கு கொடுக்கிறதா சொன்ன லட்சம் அமெரிக்க டாலர் கேரன்ட்டி நீ சைன் போட்டு ஒத்துக்கிட்ட இந்த காண்ட்ராக்ட்ல எழுத்துலயும்  இருக்கு தெரியுமா ?" என்றான்.

கைப்பை எடுத்து கொண்டு மது உள்ளே நுழைவதை இருவரும் பொருட்படுத்தாமல் விவாதித்து கொண்டிருந்தனர்.

கார்த்திக்கை நம்பி கண்ணை மூடி அதில் கையெழுத்திட்டு இருந்தாள். ஒரு நொடி அதிர்ச்சி அடைந்த அவள் பின் சற்று நிதானமாக, "சரியான காரியவாதி" என்றாள் ஏமாற்றத்துடன்.

கார்த்திக் "காரியவாதியா இல்லாட்டி உன்னை மாதிரி சந்தர்ப்பவாதிய சமாளிக்க முடியாது. நான் சகுனி சந்தியா. என்னை பத்தி உனக்கு தெரியாது" என்றான் நக்கலாக.

சந்தியா "என்னை பத்தியும் உங்களுக்கு தெரியாது கார்த்திக். எனக்கு உங்களை மாதிரி சகுனி மட்டும் இல்ல,  எனக்காக அள்ளி அள்ளி கொடுக்கிற கர்ணன்களும் ப்ரண்ட்ஸ்ஸா  இருக்கிறாங்க. நீங்க சொன்ன லட்சம் டாலர் எனக்கு ஒரு மேட்டரே இல்ல." என்று தைரியமாக சொல்லி விட்டு "லுக்கிங் பார்வார்ட் டு வொர்க் வித் யு" என்று அவனிடமும் மதுவிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள்.

துவிற்கு மயக்கம் வராத குறை தான். அவள் கைப்பை எடுத்து வரும் நேரத்திற்குள் ஒரு ரணகளமா? அவனின் கோபத்தை அறிந்த அவள் எதுவுமே அவனுடன் பேசவில்லை. கார்த்திக்கும் மதுவுடன் ஒன்றும் பேசாது அந்த மருத்துவமனை நோக்கி மதுவின் காரை செலுத்தினான்.

வரலாற்றுதத்துவம் மிக்க இந்த சந்திப்பும் கொஞ்சலில் ஆரம்பித்து வழக்கம் போல சண்டையில் முடிந்தது. அடுத்த ஆட்டம் முக்கியமான கட்டத்தை எட்ட போகிறது. காரியவாதி கார்த்திக் சந்தர்ப்பவாதி சந்தியா உருவாக்கிய ஆட்டத்தை  எப்படி எதிர்கொள்ள போகிறான்? பார்க்கலாம்.

                                                                        ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 6

 Go to Episode 8

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.