(Reading time: 9 - 17 minutes)

03. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

"வி தூக்கமா வருது மீதி காய் நாளைக்கு வெட்டிக்கிறேன்" 

"சரி போய் தூங்கு மீரா" என்று சொல்லி கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தாள் கவி.

கீர்த்தனாவிற்கு தெரியும் ஆறுதல் சொன்னாலும் கவி அழுவது நிற்காது பின் அவள் பேசினால் தானும் அழ நேரும் என்று அதனால் அடுத்த வேலையை கவனிக்க தொடங்கினாள்.

தூங்க சென்ற  மீரா தூங்கிவிட்டதை உறுதி செய்துக்கொண்டு ஏசி ஓடவிட்டு கதவை சாற்றி போன் கைலெடுத்தாள்

"ஹலோ, அவ தூங்கிட்டா ராம்"

"குட், "

"ஏன் பிஸியா,இன்னும் பேஷன்ட்ஸ் இருக்காங்களா"

"எஸ்,அப்பறமா பேசறேன்"

ராம் கீர்த்தனா வீட்டில் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை. மனநோய் மருத்துவன். அப்பாவின் ஆசைக்காக மருத்துவம் படித்து மேற்கொண்டு படித்து சைக்ரியாட்ஸ்ட் ஆகினவன்.இப்போது அவன் தான் ஒரு வகையில் மீராவை புரிந்துகொள்ள உதவினவன். மீராவின் நிலையை கண்டு உயிர்தோழியாய் திருமணத்தை தள்ளிபோட்டபோது சமதித்தவன். படித்த முடித்தவுடனே வேண்டாம் அவள் வேலைக்கு கொஞ்ச நாள் போகட்டும் என்று வீட்டில் எடுத்து சொல்லி,அவர்களுக்காக வாங்கிய வீட்டை தோழிகள் பாதுகாப்பாய் தங்க விட்டுகொடுத்தவன்.

"எதையுமே லேசா எடுத்துக்கிற மீரா இதை மட்டும் ரொம்ப பெருசா எடுத்துக்கிட்டதால வந்த பாதிப்பு,"-ராம் 

கலவரம் அடங்காமல் கீர்த்தனாவும் கவியும் பார்க்க, ராம் தொடர்ந்தான் 

"இதை ஒரு வகையில போஸ்ட் பிரேக் அப் இன்சாணிட்டி (post break up insanity) என்று சொல்லுவாங்க. உலகத்துள்ள தொனுத்தி ஒன்பது சதவிகிதம் பேர் இதோட தான் வாழறாங்க"

கீர்த்தனா கேள்வியாய் பார்க்க 

ராம்,"ஆசை படறது நடக்காம போச்சுன்னா வர வலி, ரொம்ப நாள் ஏங்கி  கிடைக்காம போறப்போ வர வெறுப்பு. எதுமேலையும் நம்பிக்கை இல்லாம போற அந்த அவநம்பிக்கை ரொம்ப காலம் நீடிச்சதுன்னா வர சின்ன சைக்கலாஜிகல் டிசார்டர் " 

"மீதி ஒரு சதவிதம்???" - கவி

"இதோட கரையை கண்டவங்க" -

"அப்படின்னா??"

"வாழ பிடிக்காம போறவங்க"

மிரட்சியுடன் பார்த்த தோழிகளுக்கு  சமாதானமாக ராம் 

"கவலை படாதீங்க,மீராவுக்கு எய்ம் இருக்கு, வாழனும் சாதிக்கனும் ஆசை இருக்கு, இந்த பிரேக் அப் அவங்கள கொஞ்சம் ஸ்ட்ராங்கா டிஸ்டர்ப் பண்ணிருக்கு"

அது ப்ரேக் அப் இல்லை ஏமாத்தல் தான் சொல்லனும் என்று உள்ளுக்குள் கொதித்தாள் கவி.

"இதுக்கு ட்ரீட்மென்ட் ??"

"அதிகமா யோசிக்க வெக்காதீங்க, தனிமையில விடாதீங்க, தூங்க மாட்டாங்க நல்ல தூங்க வைங்க,புது ஆளுங்க கூட பழக விடுங்க " 

அதன்படி இருந்து ஜான் ஏறி முழம் சறுக்கி மீராவை மீட்டு கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார்கள் தோழிகள். அம்மாவிடம் சண்டை, கிருஷ்ணாவிடம் கோபம், பேச பாட பிடிக்கல, மொபைல் வேண்டாம், பாட்டு கேட்க பிடிக்கல, கனவு பயம் தூங்க மாட்டேன்  என்று மீராவின் அராஜகத்தில் திணறினாலும் பொறுமையாக வீட்டு வேலைகளை செய்ய விட்டு,வேண்டும் என்றே சந்தேங்களை சொல்லி நிறைய புத்தங்கள் படிக்க விட்டு,அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்க வைத்து  மாற்றி கொண்டிருந்தார்கள். மீராவும் மாறிக்கொண்டே வந்தாள்.

நினைவுகளுக்குள் புகுந்து தூக்கத்தில் ஆழ்ந்தாள் கவி.

 

ன்றைய நாள் இனிதாய் முடிந்தது உலகின் ஒருபாதிக்கு, மற்றொரு பாதியில் வசிக்கும் கிருஷ்ணா தனிமையின் கொடுமையான ஆட்சியில் இருந்தான்.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது" இயற்கையாகவே சோம்பேறியான கிருஷ்ணாவிற்கு சலிப்பு வந்தால் தோன்றும் கேள்வி இது.

"அந்த ராங்கி ராட்சசியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்" வேலை பளு அதிகமானால் தோன்றும் எண்ணம் இது. கிருஷ்ணா மீராவின் நண்பன், நடக்க பழகின நாள் முதல் நண்பன். கண் காது போல கிருஷ்ணாவிற்கு மீரா டிபால்ட்(default).அவள் அருமை அவள் இல்லாமல் தான் மட்டும் அமெரிக்கா வந்து எம்.எஸ் படிக்கும் போது புரிவது போல்.

இத்தனைக்கும் அசைன்மெண்ட் அதிகபடியாக இருந்தால் கவியிடம்  இணையத்தில் தேடி சேகரித்து மெயில் பண்ணிவிட சொல்லுவான்.  நைட்கிளப்,ஊர்சுற்றல், பார்ட்டைம் ஜாப், டிரம்ஸ்,  பைக் ரேஸ், என்று கழிந்தாலும் வெற்றிடம் மனதில் அடைக்கும்.

சில நேரம் "டேய்ய் கிருஷ்ண்ணா..." என்று மீரா ராகமாய் உரிமையுடன்  அழைப்பதுப் போல் தோன்றும். அந்த மாதிரி சமயங்களில் கண்ணீர் தானாய் கன்னங்களை நனைக்கும். அவளாய் எப்போது பேசுவாள் என்று துடிக்கும். இப்போதைக்கு ஒன்று தான் செய்யமுடியும், மீரா மனம் மாறும் வரை காத்திருக்கலாம்.

குதி என்று முதுகுக்கு பின்னால் நிற்கும் பெண் குரல்  கர்ஜிக்க,மீரா எட்டி பார்க்கிறாள். அது குளம் அதில் முதலைகள் அவள் எப்போது குதிப்பாள் என்பது போல் பார்கிறது. ம்ம்ம் குதிக்கிறியா இல்லையா திரும்ப அந்த பெண் கத்த மீரா எத்தனிக்கும் போது அவள் கையை பிடித்து தடுக்கிறது அந்த கை. பின்னால் இருக்கும் அந்த பெண் இருவரையும் சேர்த்து தள்ள மீரா அம்மாஆஆ... என்று கத்திக் கொண்டு எழுந்து அமர்ந்து விட்டாள். முகமெல்லாம் வேர்த்து அமர்ந்தவள் பக்கத்தில் கவி அமைதியாக தூங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் தொந்தரவு செய்ய விரும்பாமல் தண்ணீர் குடித்து விட்டு படுத்து விட்டாள். வேலை அசதியில் தூங்கியும் விட்டாள்.

வெட்டிய காய்களை வைத்து காலையிலே மணக்க மணக்க வெஜிடிபல் பிரியாணி செய்து கொடுத்து,கீர்த்தனாவின் புதிய கிராப்ட் வேலைக்கு தேவையான பட்டியலை கையில் எடுத்துக்கொண்டு பரக்க பரக்க கிளம்பி காலேஜ் வந்து சேர்ந்து போரடித்த கிளாஸ் முடித்து அன்றைய நாளை  நகர்த்திகொண்டிருந்த மீராவிடம்

"நீ எங்க வீட்டுக்கு வந்திரு மீரா"-ஹரிணி

கண்களில் நீருடன் தொண்டை அடைக்க கேட்கும் ஹரிணியை மீரா கேள்வியாய் பார்த்தாள்.

"உன்னை அவங்க கொடுமை படுத்துறாங்க என்னால பார்த்திட்டு சும்மா இருக்க முடியாது" தீவிரமாய் ஹரிணி சொல்லிக் கொண்டிருக்க

ராம் சொன்னது மூளையில் ஒலித்தது

"கவி சொல்ற மாதிரி நடந்துக்கோ இந்த கனவு, தலைவலி, இந்த பேட் பீலிங் எல்லாம் குறையும்"கவனம் களைந்து நடப்புக்கு வந்தவள் ஹரிணி கவியையும் கீர்தனாவையும் திட்டிக்கொண்டிருந்தாள்.பேச்சை மாற்ற

"நரேனுக்கு என்ன கிபிட் வாங்க போற ஹரிணி”

மீரா எதிர்பார்த்ததுப் போல ஹரிணி மின்னல் ஒளியாக பிரகாசமாக பேச்சை ஆரம்பித்து சட்டென

"அவர் சும்மா சும்மா என்னை பணகார வீட்டு பொண்ணு சொல்லி பேசறாரு,ரொம்ப கஷ்டமா இருக்கு மீரா" ஆதங்கமாய் ஹரிணி சொல்லி முடித்தாள்.

மீரா பதில் ஏதும் சொல்லாமல் தரையில் குச்சியால் எதோ வரைந்து கொண்டிருந்தாள்.

"மீ....ரா" என்று தரையை எட்டி உதைத்தாள் ஹரிணி

அவர்கள் அமர்ந்திருந்த அந்த பூட்பால் கிரௌண்ட் மண் தூசு கிளம்பியது.

"இப்படி இழுத்து கூப்பிடாதே" பல்லை கடித்துக்கொண்டு கண்டிப்புடன் சொன்னாள் மீரா.

யாரையுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று முனுமுனுபுடன் கோபத்தை காட்டும் விதமாக தன் புக்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டு இடத்தை காளி செய்தாள் ஹரிணி. ஒரு விதத்தில் மீராவிற்கு அது தேவைப்பட்டது.

ஹரிணி அவள் கனவுகளை பற்றி பேசும் போதெல்லாம் மீரா ஊமையாகி உள்ளுக்குள்ளே தானும் இப்படி கனவுகளை பொக்கிஷமாக வைத்திருந்தோமே. ஏமாந்து விட்டோமே. தன்னிடம் சொல்லும் இவளும் ஏமந்துவிடுவளோ??!!.கிறுக்கு தனமாய் யோசிக்கும் மூளையை நிறுத்த முடியவில்லை. ஹரிணியின் கற்பனை பேச்சுகளை தவிர்க்க முடிந்தது. சுலபமான வழியை தேர்ந்து எடுத்தாள் மீரா. 

 

ரேன் வீட்டில்

"அண்ணா பத்திரிக்கை ப்ரூப் பார்த்துடீங்களா" -மஹி

கண்ணாடி பார்த்து தலையை வாரிக்கொண்டு  நரேன் பிரகாசமாய் சிரித்துக்கொண்டே தலையை மட்டும் ஆட்ட  மஹி கிண்டலில் இறங்கினான். எதிர்பார்க்காத விதமாய் நரேன் மஹியின் முகத்திற்கு நேராக மீரா என்றதும் மஹி சட்டென பேச்சை நிறுத்தி அதிர்ந்து பார்த்தான். 

சிரித்து கொண்டே  நரேன், ” உங்க முகத்த கண்ணாடில பாருங்க ராஜா, பாருங்க " என்றதும் திரும்ப அங்கே கிண்டல் கேலி தொடர்ந்தது.

அந்த வீட்டில் சுந்தரம் மருத்துவமனையிலிருந்து திரும்பிய நாள் முதல் இல்லாத கலகலப்பு திரும்பியதில் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடியது. சிறுவயதிலிருந்தே பையன்கள் இருவரும் கூட படிக்கும் பெண்களின் பெயரை சொல்லி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதை பெரிதாக எடுத்துக்கொண்டதே இல்லை சுந்தரமும் சிவகாமியும், படிப்பில் விளையாட்டில் மூன்று பிள்ளைகளும் முதலாக வர அவர்களின் கவனம் சிதறாமல் இருப்பது தெரிந்ததால்.

அப்படியே காதல் என்று வந்தாலும் மறுக்க மாட்டார் சுந்தரம்.அவரே சிவகாமி தான் வேண்டும் காத்திருந்து திருமணம் செய்தவர். பிள்ளைகள் எதிரே கறார் ப்ரொபசர் என்று காட்டிக்கொண்டாலும் மனதளவில் வலுவான காதல் மன்னன். அன்பை வாரி வெள்ளமாக செலவிடுபவர். 

"ரிணிக்குட்டி ஜவுளி, நகை எடுக்க நல்லநாள் பார்த்து எடுக்க ஆரம்பிக்கலாமா"- ஜெகநாதன்

கேட்ட விவரமும். கேட்ட விதமும் இதயம் சிறகை விரிக்க போனாலும் வயற்றில் புளி கரைந்தது. ரங்காராட்டினத்தில் சுற்றும் போது  அது கீழே இறங்கும் போது ஏற்படும் அந்த உணர்ச்சி. வெறும் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள். ஜெகநாதன் திட்டம் போட ஆரம்பித்து விட்டார்.யாரை அழைத்துப்போவது,எங்கே எதெல்லாம் வாங்க, என்று  தன்  வாக்கில் பேசிக்கொண்டே சென்றார். ஹரிணி அங்கே இருக்க முடியாது அகன்றாள்.

மீராவிடம் கோபம் பேச முடியாது.அதனால் குமுறலை நரேனிடமே கொட்டினாள்.நரேனுக்கு ஹரிணியின் நிலை புரிந்தாலும் எரிச்சல்  வந்தது அவள் அழும்குரல்  மட்டும்  கேட்டு. என்னமோ அவளை மொத்தமாக திருமணம்  என்று பெயர் சொல்லி அவள் தந்தையிடம் இருந்து பிரிப்பதுப்போல் பேசுகிறாளே. ஏற்கனவே அழுதுக்கொண்டிருப்பவளிடம் கோபமும்  பட முடியாது.அமைதியாக இருந்தான்.

தங்கை சூரியாவை திருமணம் செய்துக்கொடுத்து  பிரிந்தபோது என்னதான் அவள் இல்லாமல் போகும் நேரத்திற்கு தயாராகியிருந்தாலும் வாய்விட்டே அழுதிருக்கிறான் நரேன். அப்பாவிற்கு உடம்பு சரியில்லாமல் கொஞ்சம் இக்கட்டான நிலையில் மருத்துவமனையில்.! நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாது தங்கையின் திருமணம். நிலைமை பார்த்து எளிமையாக திருமணத்தை முடித்த போது செல்ல தங்கையை பிரிந்த வலி நெஞ்சுக்குள் ரணமாய். தங்கைகாக அழுத மனம் மனைவியாக போகும் பெண்ணின் வலி புரிந்தாலும் கோபத்தை தான் காட்டியது. அது அவள் சோகத்தை துடைக்க முடியாத இயலாமையா, தன் மேலே நம்பிக்கை இல்லையே என்ற ஆதங்கமோ!!

அன்பை, நேசிக்கிறேன் என்பதை வார்த்தை வடிவில்  சொல்லி விடலாம். அதை நிரூபிப்பதில் தெரியும் அதன் ஆழம். காதலை புரிந்து  கொண்ட  இதயம் நிரூபணம்  எதிர்பார்பதில்லை. நேசிக்கும் நெஞ்சங்களிடையே தூரம் பெரிதல்ல அவர்களின் எண்ணங்களிடையே இருக்கும்  ஒற்றுமை புதிய உலகம் படைக்கும். அதில் சுவர்களை எழுப்பாமல் பாலம் அமைக்கும் நேசம் உன்னதமான ஒன்று. 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 02

Go to Ninaikkatha naal illai rathiye 04

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.