நிலத்தை பார்வையால் அளந்து விட விரும்புபவள் போல், தலையை நிமிர்த்தாமல் பூமியையே பார்த்திருந்தாள் அவள்.
நிச்சயதார்த்தம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது! இரண்டு வீட்டு பெரியவர்களும் பேசி, தங்களுக்கு திருமணத்தில் சம்மதம் என்று தெரிவித்தனர்.
“பொண்ணோட அப்பா மாப்பிள்ளைக்கு செயின் போடுங்க!” என்று பெரியவர் ஒருவர் சொல்ல, கண்ணன், ஷிவாவிற்கு தங்க செயினை அணிவித்தார்.
ஷிவாவின் மனதில் ஏமாற்றம் நிறைந்தது! அவள் அருகே அவன் செல்ல முடியாதா?
அவன் மனதை படித்ததுப் போல, அவனை ஏங்க வைக்காமல்,
“பொண்ணுக்கு நகைப் போடுங்க” என்ற குரல் அடுத்துக் கேட்டது.
சின்ன பெட்டியை திறந்து மோதிரத்தை எடுத்து ஷிவாவின் கையில் கொடுத்தாள் லக்ஷ்மி.
“அதை முதல்ல போட்டுட்டு, அப்புறம் இதையும் போட்டு விடு,” என்று மறு கையில் இருந்த ப்ரெஸ்லேட்டை காட்டினாள் லக்ஷ்மி.
தலை அசைவுடன் ஆர்வத்துடன் சென்றவன், மயிலென நின்றிருந்தவளின் அருகே சென்று கையை நீட்டினான்.
அவள் மெல்ல தயக்கத்துடன் நீட்டிய கையை அழுத்தத்துடன் பற்றியவனின் உடலில் என்ன என்று விவரிக்க முடியாத இன்ப உணர்வு எழுந்தது.
அவளுள்ளும் அது போன்ற உணர்வு தோன்றியதின் அறிகுறியாக சிலிர்த்தது அவனின் கையுள் இருந்த அவளின் கரம்!
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.