(Reading time: 13 - 26 minutes)

06. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

ந்த மாருதி சிப்ட் பாண்டிச்சேரி நோக்கி பறந்து கொண்டிருந்தது ஹரிணியின் வழிகாட்டுதலில். நரேனுக்குள் எதெர்கென கேள்வி. அவன் கேட்டு நச்சரித்தும் ஹரிணி சொல்லவே இல்லை. பல எதிர்பார்ப்புகளுடன் இயக்கிகொண்டிருந்தான் நரேன். கார் ஏசி, ஹரிணியின் முகத்தின் பிரகாசம், எப்.எம் பாட்டு எல்லாம் கிளர்ச்சி உண்டுப்பண்ணி கொண்டிருந்தது நரேனுக்குள். இந்த கிளர்ச்சியில் கார் சற்று வேகமாகவே பறந்தது. பிரயாணம் முடிந்து நின்றது. அது ஒரு பள்ளிக்கூடம். கூடவே விடுதியும் இருந்தது ரொம்பவே சாதரணமாக இருந்தது. அடிப்படை தேவைகள் இருந்தது அவ்வளவு தான். 

அந்த நேரம் நாற்பதுகளில் இருக்கும் ஒரு பெண்மணி பிரின்சிபால் அறையிலிருந்து வெளியே வந்தார்.அவரை பார்த்ததும்

"மீனாம்மா.." என்று சொல்லி கொண்டே ஹரிணி ஓடி சென்று கட்டிக்கொண்டாள்.

அந்த அம்மா நரேனை பார்த்து வர்வேர்ப்பாக பார்த்து புன்னகை புரிந்து அர்த்தமாக ஹரிணியை பார்த்தார். ஹரிணி முகம் சிவந்து பூத்தது. கண்கள் பணித்தது.

பின் அவர் அறைக்கு அழைத்து சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.அக்கறையான விசாரிப்புகள் தான். சுற்றி பார்த்து சில பல பாட்டிமார்களின் விசாரணை,கொஞ்சல்கள்  பின்பு வெளியே வந்த ஹரிணி "இங்கே  தான் நான் வளர்ந்தது,படித்தது நரேன்" என்றாள்.

ஹரிணியின் ஆங்கிள உச்சரிப்பு, அவள் பழகும் விதம், உடை என்று அந்த இடம் அதற்க்கு சிறிதும் பொருந்தாமல் இருந்தது.அவன் விசித்திர பார்வை புரிந்து விளக்கமாக

"அம்மா நான் பத்தாவது படிக்கும் போது புற்றுநோயில் இறந்தார்கள். சொந்தங்கள் எல்லாம் ஒதுங்கி போக அப்பாவும் ஒடிந்து போக மீனாம்மா தான் இங்க கொண்டு வந்து என்னை  வளர்த்தாங்க.. அம்மா அவங்களுக்கு உதவினார்களாம். எங்க அம்மா மேல இருந்த நன்றி கடனில் என்னை வளர்த்தாங்க. அப்பா அம்மா நினைவுகளில் இருந்து வெளியே வர தீவிரமாக தொழில் என்று இறங்க. பணம் சேர்ந்தது. கஷ்டத்தில் உதவாத அந்த பணம்!! அப்பறம் வாழ்கையில் எல்லாமே கிடைத்தது. ஆழமான அன்பை தவிர. அவங்க பிரான்ஸ்ல வளர்ந்த தமிழ் பெண். பெயர் பிலோமீனா. வாழ்கையின் அர்த்தம் அடுத்தவங்களுக்கு உதவியில் தான் இருக்கு என்று கொள்கை இருக்கிறவங்க. யாரோட விஷயத்திலும் அவ்வளவா தலையிட மாட்டாங்க உதவி என்று கேட்டு போகிற வரை. அவங்கள பார்த்து வளர்ந்ததால சில விஷயத்தில் நானும் அப்படியே பழகிட்டேன். உங்க கிட்ட மட்டும் எல்லாமே எதிர்பார்க்க தோணுது நரேன்!!!  அவங்க கூட பழகினதுல தான் இந்த நாகரீகம்,பார்த்து பழகும் விதம், என்று நான் கற்றுக்கொண்டதே" என்றாள் தன்னை உணர்த்தும் வகையில் . பதில் எதுவும் பேசாமல் கார் ஓட்டினான் நரேன்.அவனுக்குள் நெஞ்சம் குறுகுறுத்தது.

சிறிது நேரம் மௌனத்தின் பின் ஹரிணி உடைந்த குரலில் " எனக்கு பணம் வேண்டாம் நரேன், சொகுசான வாழ்கை வேண்டாம், புகழ் பெருமை எதுவுமே வேண்டாம் உங்ககிட்ட இருந்து அன்பு மட்டும் போதும், அக்கறையான கோபம் போதும், எனக்கு என்று தனியாக  உங்க மனதில் இடம் போதும்." அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே வண்டியை ஒதுக்கு புறமாக நிறுத்தினான் நரேன்.

 தொடர்ந்து “என் அம்மாவிற்கு அடுத்து என் முகத்துலே என் மனசை படித்தவர் நீங்க தான்” என்று சொல்லி  அவன் தோள் மீது சாய்ந்து ஹரிணி அழவும் நரேனுக்குள் காதல் விதை விருக்ஷமாக மாறியது."அன்பான அக்கறையாக  வார்த்தைக்கு நான் ஏங்கி அழுத நாட்கள் ரொம்ப அதிகம் "என்று உடைந்து சொன்னவளை அவள் கண்ணீரை அணைத்த படியே துடைத்தவன் அன்பை அணைப்பிலும் முத்தத்திலும் வெளிபடுத்தினான். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்கள், எப்படி அவரவர் வீடு போய் சேர்ந்தார்கள் என இருவருக்குமே ஆச்சர்யமே. ஒரு விதமான மோனத்திலே நிமிடங்கள் கரைந்ததால்.

வீட்டிற்க்கு வந்த நரேனுக்குள் ஹரிணியை இனி ஒருபோதும் அழ வைக்க கூடாது என்று உறுதி எழுந்தது.பொறுப்பான வீட்டின் பெரிய மகன் என்ற பொறுப்பில் வருங்கால மனைவியின் விஷயத்தில் இருந்த பயம் அகன்றது அவனுக்குள். மனைவியாகவே மனதில் புதைந்து விட்டாள் ஹரிணி அந்த ஓர் நிகழ்வில்.

ஹரிணிக்குள் புத்துணர்ச்சி பொங்கி கிளப்பியது. அவள் பெண்மை நடந்ததை நினைத்துப் பார்த்து சிவந்து போனது. அக்கறையான மாமனார், அன்பான மாமியார், அண்ணி என்று மரியாதை கொடுக்கும் கொழுந்தன், தோழமையுடன் நாத்தனார், இவை எல்லாத்திற்கு மேல் காதலில் உருகும் கணவன். கிடைத்ததை எண்ணி மனம் மகழ்ச்சி கடலில் பொங்கியது. இவ்வளவு நாள் தனிமைக்கு தனிமை கொடுக்க போகும் அந்த சுதந்திரத்திற்கான நாளை எண்ணி மனம் ஏங்கி தவிக்க தொடங்கியது.

"நீ இனி அழவே கூடாது ஹரிணிம்மா.. நான் இருக்கிறேன், நம்ப குடும்பம் உனக்கு இருக்கு, நீ தனியில்லை டா" கனிவாக சொன்ன நரேன்திரன் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது ஹரிணியுள். உலகமே எதிர்த்தாலும் போரிடும் அளவுக்கு மனம் வலுவடைந்திருந்தது அந்த அணைப்பில்.

அவன் சொன்ன அந்த "நம்ப குடும்பம் " வார்த்தை அவளுக்குள் பெரிதாய் மாற்றம் கொண்டு வந்தது. யாருக்கு என்ன பிடிக்கும், யாரு எப்படி, என்று ஆராய்ச்சியில் இறங்கிகொண்டது. பெண் மனம் மலை போன்றது அதை அசைக்க முடியாது. ஆனால்  வார்த்தையில் தகர்க்க முடியும்.சிலர் அன்பென்ற ஆயுதத்தை பயன்ப்படுத்துவர். சிலர் வன்மையை பயன்படுத்துவர். 

மீராவை பற்றி விசாரித்து விவரங்களை சேகரித்தவன் ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்டான். அவன் காதல் வளர்ந்த அழகை மனம் புரட்ட தொடங்கியது. அவளை உணர்ந்த, அந்த காதலை இதயம் அறிந்த நிமிடங்களை நினைவு புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்து புரட்ட தொடங்கினான் மகேந்திரன்.

 

ந்த பொறியியல் கல்லூரி தமிழ் நாட்டில் புகழ் வாய்ந்த கோவையில் உள்ள கல்லூரி. அங்கே படிக்கும் மாணவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். பணக்கார பிள்ளைகள், அறிவுள்ள பிள்ளைகள். பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்று அங்கே சீட் கிடைத்து மஹி ஹாஸ்டலில் சேரவென்று குடும்பமே அந்த கல்லூரியின் ஹாஸ்டலுக்கு விட வந்திருந்தது. அங்கே பல பிள்ளைகளின் பெற்றோர்கள் என பல பேர் இருந்தார்கள்.

 

மஹிக்கு சுற்றுப்புற சுழல் பிடித்து இருந்தது.சுற்றி பார்த்து ரசித்துகொண்டிருந்தான். ஒரு திட்டு அருகே சின்ன நாய்குட்டியுடன் ஒரு பெண் விளையாடிகொண்டிருந்தாள். அந்த கை குட்டி நாயிடம் அழகாய் விளையாட்டுக் காட்டி கொண்டிருந்தது.அந்த குட்டி நாய் அந்த கையை கடிக்க வருவதுப்போல் பாவனை செய்ய அந்த கை பிடிக்க வருவதுப்போல் பாவனை காட்டினால் பின்னாடி அடி எடுத்து வைக்கும் குட்டி நாய் மகேந்திரனை கவர்ந்தது. அவன் விளையாடிகொண்டிருந்த அந்த பெண்ணின் கையை மட்டும் தான் பார்த்தான். மற்றது திட்டின் பின் மறைந்து இருந்தது. ஒல்லியாக சந்தன வண்ணமான கையில் ரோஸ் நிற மணியால் செய்ய பட்டிருந்த கைவளையல். பார்த்த நிமிடம் மனதில் ஒட்டிக்கொண்டது அந்த கரம். அவன் அப்பாவிடமிருந்து அழைப்பு வர சென்றுவிட்டான் அந்த இடத்தை விட்டு.

 

ஹாஸ்டல் பணம் கட்டி அவனுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற போது அங்கே அவன் ரூம்மேட் என்று கிருஷ்ணாவை சந்தித்தான். அவனுக்கு அவன் பொருள்களை அடுக்க ஒரு பெண் உதவி செய்துகொண்டிருந்தது." டேய் கிருஷ்ணா இதை இப்படி வெச்சிக்கோ அப்போதான் வசதியா இருக்கும் அதை அங்கே மாட்டு " என்று அவனை மேயத்து கொண்டிருந்தாள்.

 

வெள்ளை நிற த்ரீ பை போர்த், பிங்க் நிற சட்டை, நீளமாக இரட்டை பின்னல்.அக்காவா?,தங்கையா!! என்ன உறவு? என்றே தெரியவில்லை. அவள் சட்டை நிறம் அந்த கையை ஞாபகப்படுத்த கையை கவனித்தவன் அந்த கையில் அந்த கைவளையல் இல்லை என்றதும் எதையோ இழந்தது போல் உணர்ந்தான். வேலையெல்லாம் முடிந்து பின் 

 

"உங்களுக்கு உதவி பண்ணட்டும்மா??" அந்த பெண் கேட்ட கேள்வி அவன் அம்மாவை நினைவுபடுத்தியது. அவன் அம்மா தெரிந்தவரோ தெரியாதவரோ உதவி செய்வார். அது அவரிடம் அவன்  பாராட்டும் குணமும் கூட..

 

வேண்டாம் என்று இங்கிதமாக சொன்னான். பதில் கேட்ட பின் பட்டாம் பூச்சி போல் பறந்து விட்டாள்.

 

அந்த பெண் சென்ற  பின் எதோ அலை ஓய்ந்ததுப்போல் உணர்ந்தார்கள்.பேசி தேவையான விவரங்களை தெரிந்துக்கொண்டனர் அந்த அறையை இனி பகிர்ந்த கொள்ளபோகும் அந்த இருவரும். ஒரே மாதிரி எண்ண அலைவரிசை அன்றே நட்புக்கு வித்தானது. ஒரே துறையில்  அடுத்த நான்கு வருடம் படிக்க போகிறார்கள்.

 

அவன் கேட்காமலே அந்த பெண் பெயர் மீரா என்றும் சிறு வயது முதல் இருவரும் நண்பர்கள் என்றும், பக்க பக்க வீட்டில் இருப்பவர்கள். மீராவும் அவர்கள் துறை தான் என்றும், கிருஷ்ணாவிற்கு எரிச்சல் தரும் ஜந்து என்றும் தெரிந்துகொண்டான். இரண்டு குடுமபத்துக்கும் சேர்ந்து ஒரே பெண் என்பதால் சுதந்திரம் அதிகம். அவள் தப்பே செய்தாலும் அது பெரிதாக எடுத்துக்கொள்ள பட மாட்டது என்றும் தெரிந்து கொண்டான்.

 

பின் வந்த நாட்கள் நட்பு வட்டம் வளர்ந்தது மஹிக்கு ,கொஞ்ச நாட்களிலே கிருஷ்ணா நல்ல நண்பனாய் மாறிவிட்டான். மீராவின் குறும்பு தனம் சில சமயம் கோபப்டுத்தினாலும் பல சமயம் ரசிக்க தூண்டியது.

 

அவர்கள் வகுப்பை நான்கு விதமாக பிரிக்கலாம். படிப்பு மட்டுமே தெரிந்த ஒரு குழு, பணம் படைத்தவர்கள் என்று ஜம்பம் கட்டும் ஒரு கூட்டம், படித்து காம்பசில் பெரிய ஐடி கம்பனியில் வேலைக்கு போக முதல் ஆண்டு முதலே தயாராகும் கும்பல். கல்யாண பத்திரிக்கையில் டிகிரி போட என்று படிக்கும் கும்பல். இதில் எதிலுமே சேராது நாட்டுக்காக படிக்கிறேன், ஆராய்ச்சிக்காக படிக்கிறேன்  என்று அறிமுகம் செய்துக்கொண்ட மீராவின் மேல்  மொத்த வகுப்பிற்கும் மரியாதை உண்டு. குறும்புதனம் நிறைந்தவள் என்றாலும் வயதுக்கு மீறி பக்குவம் உண்டு. சமார்த்தியமாக பேசி அவளுக்கு வேண்டியதை செய்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவள். பார்த்த உடனே தோழமை வளர்க்கும் வசீகரம் நிறைந்தவள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.