(Reading time: 30 - 60 minutes)

12. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

கார்த்திக், “ஹே...ஆர் யு ஓகே?” சந்தியாவின் குரலை கேட்டு மனதில் ஏற்பட்ட பதட்டம் அவனின் அந்த கேள்வியிலும் வெளிப்பட்டது.

“கார்த்திக், ஆட்டோ சத்தத்தில் நீங்க பேசுறது சரியா கேக்கலை. நான் அங்க வந்து சேருறதுக்குள்ள கால் ஆரம்பிச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன்.  நான் ரெடி பண்ண ப்ரெசென்டேஷன உங்களுக்கு ஈமெயில் பண்ணி இருக்கேன். அதை “ என்று சொல்ல வந்தவளை “சந்தியா, ஆர் யு ஓகே? எஸ் ஆர் நோ” - இப்போது மனதில் இருந்த பதட்டம் மறைந்து அவள்  பொய் சொல்லுகிறாள் என சினம் வர சற்று குரலை உயர்த்தி கேட்டான்.

கவலையை மனதில் புதைத்தவள் அவன் கேட்ட கேள்வியில் “இவனுக்கு தெரியுமா...” - யோசனையுடன்  ஒரு நொடி தயங்கி விட்டு இயல்பாக சொல்வது போல “ம்...எஸ் எஸ்...ஓகே தான் கார்த்திக்” என்றாள். அவள் பதில் கார்த்திக்கின் கோபத்தை மேலும் கூட்ட சட்டென்று இணைப்பை துண்டித்தான். குழப்பமும் கோபமும் மாறி மாறி அவனை வதைக்க, அவனுக்கு அவள் மீது எரிச்சலாக வந்தது. “சோ அடமன்ட்...ஏதோ ப்ராப்ளம்...ஏன் லேட்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன்றா” என மனதிற்குள் புழுங்கினான்.

ரிக்குடன் தொலைபேசியில் பேச மஹா, மது, கார்த்திக், மற்றும் அந்த சிக்மா ப்ராஜெக்ட் குழு தலைவர் அனைவரும் அந்த கலந்தாய்வு அறையில் குழுமியிருந்த பொழுது உள்ளே புயலென சந்தியா நுழைந்தாள். பின், மது சந்தியாவை ரிக்கிடம் அறிமுக படுத்த, அவளும்  “ஹாய் ரிக், நைஸ் டு  மீட் யு. கால் மீ ஸ்ஸான்டி” என்ற படியே புன்முறுவலுடன் அவள் ஏதிரில் அமர்ந்திருந்த கார்த்திக்கை பார்க்க அவனோ உணர்ச்சியை துடைத்த முகமாய் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த ரிக் பல்வேறு குறைகளை முன் வைக்க அவன் சொல்வதை பொறுமையாக கேட்ட பின் சந்தியா ஆரம்பித்தாள், “நீங்க சொல்ற எல்லா குறைகளும் நியாமானது தான் ஒத்துக்கிறேன்.” என அவள் சொல்லும் போது மஹா திடுக்கிட்டு “அப்படி எல்லாம் இல்லை...இவ இப்படி பேசுறா” என கண்களால் மதுவிடம் சைகை செய்தாள். மது கார்த்திக்கை பார்க்க அவனோ சந்தியாவின் மீது படிந்திருந்த கண்களை இமியளுவும் அகற்றவில்லை. சந்தியா ரிக்கிடம் தனது பேச்சை தொடர்ந்தாள். (ஆங்கிலத்தில் பேசியது பேச்சு தமிழில்)

“சரி நீங்க சொல்லும் ப்ரிச்சனைகளுக்கு மூல காரணங்கள் தெரிஞ்சா தான் நாம இதை சரி செய்ய முடியும். முதல் ப்ரிச்சனை சரியான தகவல் பரிமாற்றம் இல்லாதது, இரண்டாவது குறித்த நேரத்தில வேலையை முடிக்க முடியாதது, மூன்றாவது நீங்க எதிர்பார்த்த தரத்தில் நாங்க முடிச்சு கொடுக்காதது...பொதுவா நமக்கு வேலை கொடுப்பவரின்  நேரடி பார்வையில் இல்லையானால் வரும் பிரச்சனைகள் தான். இதை எப்படி தவிர்க்கலாம்? எங்களோட திட்டம்  - தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்த முதலில் தினசரி நீங்க டீம் கூட  பேசலாம்...வாரத்திற்கு இப்படி அரை மணி நேரம் பேசுவதை தினமும் பத்து நிமிடங்கள் பேசலாம். இன்னைக்கு என்ன செய்ய போறாங்க, அதில் அவர்களுக்கு சந்தேகங்கள் இருகிறதா, முந்தைய நாள் வேலை முடிந்ததா, உங்களோட எதிர்ப்பார்ப்புகள் இந்த மாதிரி. ….”

இப்படி தனது திட்டத்தை தெளிவாக விளக்க  விளக்க ரிக் தடாலடியாக மனதை மாற்றாவிட்டாலும் சந்தியாவின் பேச்சு அவனுக்கு அவள் சொல்லும் திட்டங்களை செயல்படுத்தி பார்ப்பதில் தப்பில்லை என தோன்ற அவனும் அதற்கு சம்மதித்தான்.  ஆனால் தனது எதிர்ப்பார்ப்பு நிறைவேறாவிட்டால் அவர்கள் நிறுவனத்தோட தனது ஒப்பந்தத்தை முறித்துக்  கொள்ள வேண்டி வரும் என மிரட்டலுடன் முடித்தான்.  அந்த பேச்சு முடிந்த பின், அனைவர் முகத்திலும் தற்காலிகமாக அவனை சமாளித்த திருப்தி ஏற்பட  இருவர் முகம் மட்டும் உணர்ச்சியின்றி இருந்தது. ஒன்று கார்த்திக், மற்றொன்று மஹா. சந்தியா  இயல்பாக இருப்பது போல நடிக்கிறாள் என   அவள் முகத்தை பார்த்தவுடன் படித்து விட்டான் கார்த்திக்.  

தொலைபேசி அழைப்பு முடிந்தவுடன், அனைவரும்  அந்த அறையை விட்டு கிளம்ப தயாராக, எப்படா அந்த அழைப்பு முடியும் என காத்திருந்தது போல, சந்தியா வேகமாக தனது ஊமையான போனை உயிர்ப்பிக்க அவளை போலவே காத்திருந்த கார்த்திக்கும் நாற்காலியை விட்டு எழுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவளருகில் வந்தான். அவள் உட்கார்ந்திருந்த நாற்காலியில் ஒரு கையும் மேஜையில் ஒரு கையும் வைத்தவாறு அவளிடம் குனிந்து, “ஹே...என்ன பிரச்சனை சந்தியா..ஏன் டல்லா இருக்க?” என அவளை ஊடுருவும் பார்வை பார்த்த படியே, அக்கறையுடன் கேட்டான்.

ஒரு நொடி பதில் சொல்ல அவனை ஏறிட்டவள் போனில் குறுஞ்செய்தி வந்ததை தெரிவிக்க மணி அடித்தவுடன் வேகமாக அதன்  மீது பார்வையை செலுத்த தன் அக்கறையை அலட்சியபடுத்தும் சந்தியாவிடம் “சந்தியா” என அழைத்தான் குரலில் அழுத்தத்துடன். அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் “ஒன் மினிட் கார்த்திக்” என்று முணுமுணுத்துக் கொண்டே மும்முரமாக குறுஞ்செய்தியை வாசித்துக் கொண்டிருந்தாள். அதற்கு மேல் பொறுமை இழந்தவன், அவள் தாடையை பற்றி தன் புறம் திருப்பி கடுமையான முகத்துடன் “ஜஸ்ட் கெட் லாஸ்ட் சந்தியா” என சொல்லிவிட்டு நிமிர்ந்தவன்  ஆள்காட்டி விரலை கதவின் புறம் நீட்டியவாறே அந்த இடத்தை விட்டு போக குறிப்பு  காட்டினான். அந்த கலந்தாய்வு அழைப்புக்கு வந்தவர்கள் அனைவரும் அங்கு நடந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

அவனை  வெறும் பார்வை பார்த்து விட்டு மீண்டும் தனது போனில் கவனத்தை திருப்பி வந்த செய்தியை முழுவதுமாக படித்து கொண்டே கைப்பையை எடுத்து வெளியேறினாள் சந்தியா. எப்பொழுதும் அவன் கோபத்தை பார்த்து அஞ்சி ஒதுங்கும் மது இன்று நியாயம் இல்லாமல் அவன் ஆத்திர பட்டதை பார்த்து, கார்த்திக்கிடம் வந்து, “அவ நல்லா தான ப்ரெசென்ட் பண்ணா. அவகிட்ட ஏன் இப்படி ஹார்ஷ்ஷா நடந்துக்கிற...எனக்கு தெரிஞ்சு யார்கிட்டயும் இந்தளவுக்கு கோபப்பட்டதே கிடையாதே காதி..நேத்து அத்தை பண்ண அட்வைஸ் எல்லாம் மறந்து போச்சா? ஆர் யு அவுட் ஆப் யூவர் மைன்ட்?” என படபடத்தாள். அதே  நேரம் சந்தியா அறையை விட்டு வெளியேறுவதை பார்த்த அவள், அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டு வேகமாக  சந்தியாவிடம் வந்தாள். அலுவலக வாயிலை நோக்கி சென்ற சந்தியாவை வேகமா பின் தொடர்ந்து வந்த மது  “சந்தியா ...போகாத ..நில்லு” என அவளை அழைக்க, அவள் திரும்பி மதுவை பார்க்க, “கார்த்திக் கோபத்தில சொல்றது கண்டுக்காத. கொஞ்ச நேரத்தில உன்னை தேடிட்டு வருவான் பாரு. அப்புறம், இன்னக்கு கால் ரெம்ப நல்லா பண்ணா. நிறைய இபர்ட் போட்டு இருக்கிறது நல்லா தெரியுது. நீ போக வேண்டாம்”, கனிவாக  சொன்னாள்  மது. “இல்ல...நான் கிளம்பு” என்று சொல்ல வந்த சந்தியா  “ஆபிஸ்ல யாருக்காவது  AB -ve ப்ளட் குரூப் இருக்கா?ஒரு பையனுக்கு அவசரமா தேவைப்படுது.” என கேட்க,

“எனக்கும் அந்த ப்ளட் குரூப் தான். யாருக்கு என்ன ஆச்சு?” மது சொல்லி முடித்தது தான் தாமதம், அடுத்த சில நொடிகளில்  மதுவை  கடத்தி  அந்த அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள்  சந்தியா.

மருத்துவமனை முன் பெருங்கூட்டம், புகைப்பட கருவிகளுடன் ஒரு சில தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் செய்தி சேகரித்தும் படம் பிடித்துக் கொண்டும் இருக்க, மருத்துவமனைக்குள் அதை விடு கொடுமை... அழுகை குரல், ஓ வேன அவல  சத்தம்...அடுத்தடுத்த கட்டில்களில் பிஞ்சு குழந்தைகள் கை கால், தலையென வெவ்வேறு கட்டுகளுடன்  ஒவ்வொன்றும் வேதனையில் கசங்கி கிடக்க, அதை பார்த்த மது மயங்கி சந்தியா மீது சரிந்தாள்.

இடியே விழுந்ததாலும் கருமமே கண்ணென இருக்கும் கார்த்திக்கை இரண்டாம் முறையாக அசைத்தாள் சந்தியா. “நேத்து பட்ட அடியையும் மறந்துட்டு அவ மேல பரிதாப படுறியே.....அக்கறையா கேட்டாலும் சரி கோபமா திட்டுனாலும் சரி எல்லாத்தையும் இக்னோர் பண்ற அவளுக்கு எவ்வளோ திமிர் இருக்கும்...அந்த திமிரை அடக்கணும். அவ என்கிட்ட விழணும்.. எனக்காக ஏங்கணும்...ஏங்க வைப்பேன்” மனதில் தீர்மானம் போட்டான். ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி அந்த நேரம் அவன் நண்பன் நிரஞ்சன் மலேசியாவில் இருந்து அழைக்க அதன் பின் கவனம் எல்லாம் அதில் லயிக்க  அவனுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை மது அழைக்கும் வரை.  

“காதி, நான் GHல இருக்கேன். ப்ளட் டொனேட் பண்ண சந்தியா கூட்டிட்டு வந்தா. ஸ்கௌட் கேம்ப் போன வேன் பிரேக் பைலியர் ஆகி அக்கிசிடென்ட் ” சொல்லும் போதே மதுவின் குரல்  குரல் உடைந்து கண்ணீரும், விம்மலுமாக “அடிபட்டது எல்லாம் சின்ன பிள்ளங்க...... ஏழு , எட்டு வயசு பிள்ளங்க....பாக்கவே முடியல...காதி  ” அழுத படி சொன்ன மதுவை மேலும் பேசவிடாத கார்த்திக்,  “மது, அழாத. நான் அங்க உடனே வர்றேன்” என அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவசரமாக கிளம்பினான்.

மதுவிற்கு மன தைரியம் குறைவு தான். சட்டென உடைந்து விடுவாள். அதனால் தான் அழுகிறாள் என்றெண்ணிய கார்த்திக்கே அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை கண்டு கண் கலங்கினான். காலையில் சந்தியா கண் முன் நடந்த விபத்து. போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகும் என எண்ணி, அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர்களை திரட்டி குழந்தைகளை துரிதமாக மருத்துவமனையில் சேர்த்து, சக்தி உட்பட தன்  நண்பர்கள், வீட்டிலிருந்து ஸ்ரீ, அன்பு இல்லத்தில் அர்ஜுன் மற்றும்  அவனது  நண்பர்கள்  என அனைவரையும் உதவிக்கு வரவழைத்திருந்தாள். அங்கு அத்தனை உதவி தேவைப்பட்டது.

கார்த்திக்கை பார்த்த சக்தி, அவனை மதுவிடம் அழைத்து சென்றாள். அழுது அழுது முகம் வீங்கி இருந்தது. “இன்னும் இங்க ஏன் நிக்கிற கிளம்பு” என அவளை அவசரபடுத்தி காரில் உட்கார வைத்து விட்டு, சந்தியாவை பார்க்க மீண்டும் உள்ளே சென்றான். அவள் அவசர சிகிச்சை பிரிவில் கண்ணாடி வழியே பார்த்து கொண்டிருந்தாள். கார்த்திக் அவள் அருகில் வரவும் கோள் சொல்லும் குழந்தை போல கண்ணாடி வழியே படுக்கையில் இருந்த சிறுவனை கைகாட்டி “கார்த்திக், நான் ஆட்டோல ஆபிஸ்க்கு வர்றப்போ நான் டாட்டா சொன்னதுக்கு வேன் ஜன்னல் பக்கத்தில உக்காந்துகிட்டு எனக்கு பளையிங் கிஸ் கொடுத்து சிரிச்ச வாலு இப்போ .....” என்றாள் குரல் தழுதழுக்க.  பின் பேச்சு வராமல் முட்டி கொண்டு வரும் அழுகையை அடக்கி அந்த சிறுவனை பார்த்த படி நிற்க, கார்த்திக்கோ அதை சட்டை செய்யாமல்“ மதுவை இங்க எதுக்கு கூட்டிக்கிட்டு வந்த சந்தியா ? மறுபடியும் அவளுக்கு டிப்ரஷன் வரவா? மொத வேளையா அவ மூடை மாத்தணும். அவள அன்பு இல்லத்துக்கு கூட்டிகிட்டு போ ” என கட்டளையிட்டான்.  சட்டென மாறிய அவள் முகம் “மதுக்கு என்ன?....நான் கூட்டிகிட்டு போறேன்...ஆனா இங்க ” என ஆரம்பித்த அவளை  இடைமறித்த கார்த்திக் “லீவ் இட். அதை நான் பாத்துக்கிறேன். நீ பர்ஸ்ட் மதுவை கூட்டிகிட்டு கிளம்பு” என்று அவளை கிளப்பினான்.

மாலை மணி ஐந்து. சந்தியாவும் மதுவும் பேசிக்கொண்டே கார்த்திக்கின் அறைக்குள் நுழைய அவர்களின் தெளிந்த முகத்தை பார்த்தவனுக்கு ஒரு நிம்மதி. அதை கவனித்தவளாய் சந்தியா “உங்க அத்தை மகள் இரத்தினத்தோட மூடை மாத்தியாச்சு. உங்களுக்கு இப்போ சந்தோஷம் தான” என கேட்க, மது சந்தியாவிடம் “நீ அப்செட்டா இருக்கன்னு தானே என்னை ஹெல்ப் பண்ண சொன்னான் காதி”  என்றாள் மது. இருவரும் புரியாமல் கார்த்திக்கை பார்க்க, அவன் தனது நாற்காலில் இருந்து எழுந்து அவர்கள் அருகில் வந்து, “தாய்குலங்களே உங்களை சமாதன படுத்த உக்காந்தா என் வேலைய யாரு பாக்கிறது. அதான் தியாக செம்மல் சந்தியாகிட்ட அப்படி சொன்னேன். பாசமலர் மதுக்கிட்ட இப்படி சொன்னேன். சந்தியா மதுவை ஹேப்பி ஆக்கிடுவா ...அவளை அன்பு இல்லம் ஹேப்பி ஆக்கிடும்ன்னு எனக்கு தெரியாதா ?” என்று  சாவகசாமாக இருவரையும் பார்த்து குறும்பாக சிரித்தபடி சொன்னான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.