(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

விவேக்குடனும் மட்டும் அது போல் இயல்பாக இருக்க முடியவில்லை!

  

அதைப் பற்றி எல்லாம் அவள் அதிகம் யோசிக்க முடியாத விதத்தில், மறுநாளே நகைக் கடைக்கு செல்ல கற்பகம், உமா, விவேக் வரவும், பவித்ராவும், பாரதியும் அவர்களுடன் சென்றார்கள். திருமணம் முடிவான மணமகனுக்கே உரிய ஆர்வக் கோளாறுடன் விவேக், பாரதியை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சைட் அடிக்கவும், பாரதி மனதுள் நெளிந்தாள். அவனைப் போல் அவளால் இயல்பாக இருக்க இயலவில்லை.

  

பாரதிக்கு நகைகளின் மீது விருப்பம் இல்லை என்று எவ்வளவு சொல்லியும் கேட்காது, கற்பகம்,

  

"பாரதி, இதை எல்லாம் தினமும் போட்டுக்கணும்னு இல்லை... ஆனால், கல்யாணத்துக்கு நீ போட்டு தான் ஆகணும்... அது உனக்கு மட்டும் இல்லை, நீ வாழப் போகும் எங்க குடும்ப கௌரவத்திற்காகவும் கூட...." என்று கிட்டத்தட்ட கட்டளையிடும் தோரணையில் சொல்லவும், பாரதி அமைதியானாள்.

  

உமா அவளை மற்றவர் அறியாமல் சாமாதானம் செய்தாள்.

  

"பாரதி, அத்தை பணக்கார வீட்டில் பிறந்து வளர்ந்தவங்க. அந்தக் காலத்து மனுஷி... அவங்களை பொறுத்த வரை கல்யாணம்ன்னாலே நகைக்கும் முக்கிய பங்கு உண்டு... ரொம்ப எல்லாம் யோசித்து மனதை குழப்பிக்காதே... அவங்க நம் அம்மா போல தான்... "

  

உமாவின் பேச்சை ஏற்றுக் கொண்டதாக காட்டிக் கொண்டு பாரதி தலை அசைத்தப் போதும் அவளின் மனதில் சஞ்சலம் இருந்துக் கொண்டே தான் இருந்தது. இருந்தாலும், கற்பகம் அவளுக்காக தேர்வு செய்த வைர நெக்லஸை தன் கழுத்தில் போட்டு கண்ணாடியில் பார்த்து, நன்றாக இருக்கிறதா என்று உமாவிடமும், பவித்ராவிடமும் கேட்க திரும்பியவள்... உமா, பவித்ராவின் பின் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த விவேக்கை பார்த்து மற்றவற்றை எல்லாம் மொத்தமாக மறந்துப் போனாள்!

  

திருமணத்திற்கு வாங்க வேண்டியவற்றை எல்லாம் வாங்கி முடித்து வீடு திரும்பியவர்களுக்கு உதவியாக பொருட்களை உள்ளே எடுத்து வந்து வைத்த விவேக், புன்னகை மின்ன

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.