(Reading time: 9 - 18 minutes)

10. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

மீரா அந்த கம்பனிக்கு அடிக்கடி செல்ல வேண்டி நேர்ந்தது. கமலேஷை தவிர்க்க மஹியை நாட வேண்டியிருந்தது. அதுவுமில்லாமல் அவன் தான் டிசைன் செய்தவன் அவனிடம் தான் பேச்சுவார்த்தையும் கூட.நாளு வார்த்தை டிசைன் பற்றி இருந்தால் பத்து வார்த்தை அவளை குறும்பாக சீண்டுவதிலே இருக்கும்,

 

படிக்கும் காலத்தில் “மீ...ரா” என்று அவன் இழுத்து கூப்பிட்டு ஏதாவது சொன்னால் போதும் அதை செய்து முடித்து விட்டு தான் வேறு வேலையே செய்ய தோன்றும். அதை பற்றி பேசாமல் அதை ஞாபகப்படுத்தும் விதமாக பேசியே கொன்றான் மஹி.

 

இப்படி போக,  பிரதாப் வந்து பேச ஆரம்பித்தான் "மச்சி, வில்லியம்ஸ் அண்ட் உத்ரா கல்யாணத்திற்கு போகிறோம்தானே மீரா நீயும் வருவாய் தானே, நீ தான் ஆசை தங்கை ஆச்சே" என்றான், "எப்படி மச்சான் !! கரெக்ட் பண்ணிட்டான் டா மச்சான்" என்று புகழாரம் வேறு.

 

"மேனனுக்கும் வில்லியம்ஸ்க்கும் திருமணம்" என்று செய்தி சிரித்துகொண்டிருந்தான் பிரதாப்.

 

வீட்டிற்க்கு வந்தபோது கவிதாவின் போன்னில் அழைத்து வில்லியம்ஸ் பேசினான். பாண்டிசேரியில் திருமணமாம்.முதல் நாள் காலை ஹிந்து முறைப்படி அடுத்த நாள் சர்ச்சில் மோதிர மாற்றமாம். கேட்டதும். குதுகலம் தொற்றிக்கொண்டது. தோழிகள் அடுத்த திருமண கொண்டாட்டதிற்கு தயாராகினர். வில்லியம்ஸ் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் கடைசியாக "என் கல்யாணத்திற்கு உன் கச்சேரி தான் மீரா" என்றது தான் நெருடலாக இருந்தது.

 

ரம்பாகி விட்டது பாண்டிசேரி  நோக்கி பயணம். மூன்று கார் ஒன்றின் பின் ஒன்றாக. வில்லியம்ஸ், உத்ரா இரண்டு பேறும் அவர்கள் படித்த காலத்தில் அந்த கல்லூரியில் படித்த அவர்கள் காதலை தெரிந்த அனைவரையும் அழைத்து இருந்தனர்.  வில்லியம்ஸ் உத்ரா காதல் கதை அவர்கள் நான்காம் ஆண்டு படித்த போது மிகவும் பிரபலமாகி விட்டது. காரணம், உத்ரா உணர்ச்சிபெருக்கத்தில் வில்லியம்ஸ் அணி  கால்பந்து விளையாட்டில் ஜெய்ததும் ஓடி சென்று முத்தம் கொடுத்து விட்டாள். பதிலுக்கும் அவனும் கொடுத்தான். அது நடந்தது பாதி காலேஜ் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த பூட்பால் கிரௌண்டில்.  பாவம் வில்லியம்ஸ் அண்ணாவை சஸ்பண்ட் செய்து விட்டார்கள். இந்த நிகழ்வு கிட்டத்தட்ட அந்த ஒரு வருடமும் வெவேறு கோணத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காரிலும் பிரதாப் அதை பற்றி சுவாரசியமாக கிண்டல் செய்துக்கொண்டு பேசி வந்தான்.

 

கவியிடமும் கீர்த்தனாவிடமும் பாராமுகம் மறைந்து சிரிக்கும்,சில நேரம் பதில் பேசுவதுமாக இருந்தனர்.நம்பிக்கை பிறந்தது மஹிக்குள். வயிற்றில் சின்ன வலி உதயமானது மஹிக்கு.காலை உணவு எடுத்துக்கொள்ளாததால்.

உத்ரா மேனன் தங்க பதுமையாக ஜொலித்தாள். தங்கம் கொஞ்சம் தான் அணிந்து இருந்தாள், புடவையில் தங்க ஜரிகையும், அந்த சந்தன நிற புடவையில் எடுப்பாக தெரிய  காதலனை கைபிடிக்கும் மகிழ்ச்சியில் மிளிர்ந்தாள்.

 

என்னதான் உத்ரா அங்கே பலப்பப்பாக இருந்தாலும் மீரா எப்போதும் போல் கண்களுக்கு குளுமையாக இருந்தாள் மஹிக்கு. கேரள காட்டன் சாரீ, கஜலட்சுமி முகப்பு வைத்த சங்கலி, கண்களில் கண்மை, நீலபின்னலில் பூசரம், அந்த பூச்சரம் அவளுக்கு பிடிக்காமல் மற்றவர் சொன்னதில் வைத்திருப்பாள்  போலும் அதன் மேலே அவள் கவனம் இருந்தது. எப்போது எடுத்து போடுவோம் என்றிருந்திருக்கும் போல. அகலமான நெத்திக்கு ஏற்ப கோபுர பொட்டு. நெற்றியில் சந்தனம் மேலும் ஈர்ப்பு சேர்த்தது, கைகளில் முறுக்கு போல் வலையல்கள். பிரம்மனின் தாராளம் தெரிந்தது  அவளிடம்.

 

முதல் முறை  அவர்கள் இரண்டாம் ஆண்டு  படிக்கும் போது கல்டுரல்சிற்கு அவள் புடவையில் வந்தப்போது கிருஷ்ணா சிரித்து  கேலி செய்தான். மஹிக்குமே சிரிப்பாக தான் இருந்தது, அவள் புடவையில் நெளிந்தப்போது.  அவளுக்கு புடவை பொருந்தவே இல்லை. அதுவும் அவள் ஆன்டி கிருஷ்ணாவின் அம்மா பெண் முதல் முறை புடவை கட்டப்போகிறாள் என்று தெரிந்த கைவண்ணம் எல்லாம் அதில் காட்டியிருந்தார். அவள் அசையும் போது முந்தானையில் கோர்த்து  இருந்த சின்ன சலங்கைகள் ஒலி எழுப்ப சங்கடத்தில் அவள் நெளிந்தது நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான் மஹி.

 

மஹியை கவனித்த கவிக்கு பாவமாக தெரிந்தது. மீராவால் தன்னை  யாரோ உற்றுப் பார்ப்பது.சுற்றி பார்த்தாள் யுகேஷ் கவியை பார்த்துக்கொண்டிருந்தான். "இவன் இன்னும் திருந்தவில்லை , வெறும் நாடக கூட்டம்" என்று  நினைத்துக்கொண்டாள். வில்லியம்ஸ் ஐயர் சொல்வதை மிகவும் மரியாதையுடன் சொல்லிகொண்டிருந்தான். பார்க்கவே வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

அடுத்த நாள் மதியம் சர்ச்சில் மோதிரம் மாற்றினார்கள். வில்லியம்ஸ் கோட் சூட்டில் உத்ரா வெள்ளை நிற சேலையும் பின் தலையில் அந்த க்ரிடமும் வைத்திருந்தாள். மனமார நேசிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டனர். 

பின் நண்பர்கள் கூடி கிண்டல் கேலி  என்று இறங்கினர். 

ஹிந்து முறை மட்டும் சரியாக செஞ்சீங்க, கிறிஸ்துவ முறை எங்கே????" என்றான் ஒருவன்.

 

எல்லாரும் முழிக்க 

 

கன்னம் சிவக்க "அவங்க அம்மா அப்பா கொஞ்சம் வைதீகமானவர்கள் அதனால் வேண்டாம் என்று விட்டுவிட்டோம் என்றான்"

 

உத்ரா கன்னம் சிவந்தாள். “மச்சி நான் வேணா மறைச்சி நின்று கொள்ளட்டா “ என்று கலாயத்தான் குண்டாக இருந்த ஒருவன். 

 

புரியாத மீரா பக்கத்தில் இருப்போரிடம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் மஹி என்று உணராமல் "என்ன பேசறாங்க இவங்க??" என்றாள்.

 

"அதுவா.... மோதிரம் மாத்தியதிர்க்கு அப்பறம் முத்தம் கொடுப்பாங்க.அதை பற்றி பேசி கிண்டல் பண்றாங்க” என்று விளக்கும் தோரணையில் ஆரம்பித்து குறும்பாக முடித்தான்.

 

மீராவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது."ஐயோ மீரா!! இந்த மாதிரி டவுடெல்லாம் இவன் கிட்டே கேட்கணுமா நீ" 

 

திரும்புகையில் எல்லாருக்குமே அசதி. மறக்க முடியாத தருணங்கள் நிறைந்ததாக இருந்தது. மீராவை  கேள்விகள் கணைகள் நிறைய தாக்கியது.

 

உன் போன் நம்பர் வேண்டும்? நீ ஏன் என் மெயில் எதற்கும் பதில் சொல்லவில்லை?? முகம் கலை இழந்து போயிருக்கே மீராம்மா? என்ன மீரா பேபி பேசவே மாட்டேங்கற?? எந்தே மோளே எந்தா செய்தி?? எல்லா வகையான கேள்விகளுக்கும் சிரிப்பு, இல்லை பேச்சை மாற்றி சமாளித்தல். "ஹப்ப்பா நாள் முடிந்தது" என்று ஒரு பாதி  மனம் சொல்ல ஒரு சில விஷயங்கள் தவிர்த்து மித்ததெல்லாம் அந்த கல்லூரி சூழ்நிலையில் மீண்டும்  நின்றது போல் இருக்க "ஐயோ நாள் முடிகிறதே" என்று இருந்தது. 

 

முடியும் "தின்" வயதும் தொடங்கும் "த்தி" வயதும் அங்கே தானே நிகழ்ந்தது. மறக்க முடியுமா என்ன? கோவையில் சுற்றாத இடம் உண்டா?? வாழ்வின் பல வர்ணங்களை முதல் முறையாக பார்த்த, பார்க்க வைத்த இடமல்லவோ. அந்த ஊரை அங்கே நடந்த நிகழ்வுகள் அனல் மேல் நின்றாலும் குளுமை தரும் இனிப்பான நினைவுகள் ஆயிற்றே.  எண்ணங்களின் ஊடே தூங்கி போனால் மீரா.

 

பாண்டியிலிருந்து திரும்பி மூன்று நாட்களாகி விட்டது மஹிக்கு மீரா கம்பனிக்கும்வரவில்லை அவள் பற்றி விபரமும் தெரியவில்லை. கிருஷ்ணாவிடம் பேசிய போது அவள் தீசிஸ் வேலையில் இருக்கிறாள் போல என்று பட்டும் படாமலும் பேசியது திகில் கிளப்பியது.

 

அண்ணியிடம் கேட்கலாம் அவர்களே கல்லூரிக்களுகாக ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் அமைப்பிடம் காசுகொடுத்து செய்து கொடுக்க சொல்லிவிட்டு வீட்டில் அண்ணனே கதியென்று இருக்கிறார்கள். இருந்தாலும்  விசாரிக்கலாம் தான் ,விவரம் அறிந்து  இவ்வளவு நாள் என்கிட்டே ஏன் மறைத்தாய் மீரா என்று சண்டைபோட்டால்!! இவனால் அவர்களுக்குள் பிரச்சனை வந்துவிட கூடாதே.அவர்களை இவன் பயன்ப்படுத்திக் கொண்டான் என்று வேறு விதமாக எடுத்துக்கொண்டு குடும்பத்திலும் பிரச்சனை வந்து விட கூடாதே.இது என்ன போர்க்களம் உணர்ச்சிகள் போரிட மனம் தோற்கிறது.

 

சாப்ட்வேரில் தன்னை மறந்து டிசைன் செய்து பார்த்துக்கொண்டிருந்தவன் எதிரில் வந்து நின்றாள் மீரா. மஞ்சள் நிற காட்டன் சேலை அனால் எதோ மாற்றம். கட்டிருந்த புடவை அவளை பெரிய மனுஷி போல் காட்டியது. முப்பது வயது பெண் போல் தெரிந்தாள். அவள் நெளிந்துக்கொண்டே இருந்ததில் தெரிந்தது அவளுக்கு எதோ ஒன்று வசதியாக இல்லை. 

 

"ஏன் சாரீ ...?"

 

தேவையற்ற கேள்வி இது என்பதுப்போல் பார்த்து விட்டு 

மீரா,"பாப்ரிகேசன் எப்போ முடியும்?,எனக்கு இன்னும் இருபது நாளில் பைனல் ரெவியு, அன்னைக்கு இதன் செயல்பாடு காட்டனும்"

 

"அதுக்குள்ளே முடிச்சரலாம்"

 

"மத்த வேலையே முடித்து வைத்துகொள்" பேசிய படியே கவனித்தான் நெளிந்தாள், அவள் முகத்தில் ஒரு ஓரத்தில் வலி வேதனை. 

 

எரிச்சலாக,"என்ன மீரா?? உனக்கு என்ன தான் பிரச்சன்னை" என்றான் 

 

தயக்கதுடன் சின்ன குரலில் தலை குனிந்து கொண்டு  "சாரீ பின் கழண்டுபோச்சி உள்ளே குத்துது" என்றாள்.

 

பின் தான் கவனித்தான் ஹான்ட் பாக் கழுட்டாமல் மாட்டியபடியே தான் அமர்ந்திருந்தாள். சாரீ பல்லோ அகலமாக இருந்ததால் அப்படி தெரிகிறாள் என்று.

 

சிரித்துக்கொண்டே "உனகெதுக்கு இந்த சாரீ எல்லாம், ஜீன் அண்ட் டாப் இல்லேன்னா சுடிதார் போதும்"

 

குனிந்துக்கொண்டே "பெண்கள் ஆடை பற்றி பேசறது  அதுவும் அவங்க கிட்டேயே கம்மென்ட் பண்ணறது நாகரீகம் இல்லை" என்றாள்.

 

"சரிங்க மேடம், நாம்ப வேலையே கவனிக்கலாம் " சொல்லிவிட்டு டிசைன் பற்றியே பேசி கொண்டிருந்தார்கள். அவள் முக மாறுதல்களை கவனித்தும் கவனிக்காமலும்.

 

கேட்கலாம் என்னவென்று, வார்த்தையிலே கொன்று விடுவாளே, அவன் சுழல் நாற்காலியில் பக்கத்துக்கு டேபிளில் இருக்கும் மார்கர் எடுக்க போனவன் கவனித்தான் கழன்ற பின் உள்ளே குத்தி நிற்கிறது, அதுவும் அவள் கைக்கு எட்டாத முதுகு புறத்தில். கொஞ்சம் இரத்தம் வெளியேறிருக்கிறது.  அவனுக்குள் பாவமாக தோன்ற 

 

"ரொம்ப வலிக்கிறதா மீரா, எந்த வகையில் உதவி பண்ணட்டும்" வருத்தம் தீர்க்கிறேன் என்ற தொனியில் தான் கேட்டான்.

 

அவள் முழிக்கவும். ஸ்கேல் எடுத்து கொடுத்து இதில் வெளியே தள்ளி கொண்டு வந்திரலாம் என்றான். முயற்சியும் செய்தான்.அவளுக்கு கூச்சமாக இருந்தாலும் வலி எரிச்சல் அதிகமாக இருந்தது.அதனால் பொருதுக்கொண்டாள்.

 

       சிறிது நேர போராட்டத்துக்கு அப்பறம் அது வெளியே வந்து விட நெருக்கமாக இருப்பதை அப்போது தான் உணர்ந்தான் மஹி.

இரசாயன மாற்றத்தில் தவித்து கொண்டிருந்தவன் அவள் திரும்பி “ஹப்பா தேங்க்ஸ் மஹி”  என்றதும், நிலை மறந்து போனான். இரண்டு நிமிடங்கள் மறந்து கட்டி பிடித்து கொண்டிருந்தனர். அவன் கைகள் அவன் வசம் இல்லை.

 

ச்சரிக்கை மணி அடிக்க சட்டென அவனை தள்ளி விட்டு வெளியே வந்து வண்டியை எடுதுக்கொண்டு பிளாட் வந்து சேர்ந்தாள். அவள் சென்ற பின்னே இவனும் வண்டியை எடுத்துக்கொண்டு பின்னே விரைந்தான்.

 

அழுதுக்கொண்டே அவள் அறை படுக்கையில் விழுந்தாள்.  பின்னே அவனும் மீரா  என்று உள்ளே  வந்தான். 

 

"பக்கத்தில் வராதே"

 

"...."

 

"என் பலவீணத்தை பயன்படுத்துகிறாயே, நீயெல்லாம் ஆம்பளையா "

 

"அதிகமா பேசுற" சீறினான் அவன் 

 

"ச்சீசீ  வெளியே போ"

 

"போறேன்... போறேன்" என்று சொல்லி நெருங்கி இழுத்து அணைத்து இதழில் இதழ் பதித்தான். மூச்சு திணறி அவள் விடுவித்துக்கொள்ள விடாது திரும்ப இழுத்து பிடித்து அழுத்த முத்தமிட்டான். பின் அவளை படுக்கையில் தள்ளி விட்டு "போடீ" என்று கர்வமாக சொல்லி விட்டு சென்று விட்டான்.

மீரா கதறி அழும் சத்தம் காதில் விழுந்தது.கண்டுக்கொள்ளாமல் உடைந்து சிதறிய இதயம் சேர்ந்த திருப்தியுடன் சென்றான்.   

 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 09

Go to Ninaikkatha naal illai rathiye 11

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.