(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

தொடர்கதை - சின்ன மருமகள் - 06 - சசிரேகா

மாலை நேரத்தில் முற்றத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்த மஹதியிடம் வந்து நின்றான் மூர்த்தி, அவனைக்கண்டதும் மஹதி அச்சமுற்றாள், ஆனால் அடுத்த நொடியே அவளின் முகம் பிரகாசமானது, அவளின் முகம் பிரகாசமானது தனக்குதான் என எண்ணி சிரித்தபடியே அவளிடம் பேச வர அதற்குள் வேங்கையன் உள்நுழைந்தான்

  

”நீ இங்கதான் இருக்கியா உன்னை தேடிக்கிட்டு இருந்தேன்” என சொல்ல அதைக்கேட்ட மஹதியோ

  

”நான் எங்கயும் போகலை, நீங்களே என்னை போக சொன்னாலும் போக மாட்டேன் உங்க பக்கத்திலேயே நிழல் போல இருப்பேன்” என சொல்ல அதைக்கேட்டு முதலில் குழம்பிய வேங்கையனோ அங்கு மூர்த்தியிருப்பதைக் கண்டு மஹதி நடிக்கிறாள் என புரிந்துக் கொண்டு தானும் நடிக்கலானான்

  

”எனக்கு நீ நிழலானா நான் உனக்கு உயிராவேன்” என சொல்ல மஹதிக்கு மகிழ்ச்சி எல்லை மீறியது, ஆனால் வேங்கையனோ சட்டென கண்ணடித்து மூர்த்தியிருப்பதை சைகையில் காட்டவும் அவளுக்கு சலிப்பே வந்தது, ஓ வேங்கையன் நடிக்கறான் என புரிந்துக் கொண்டவள் சிரித்த முகத்துடன்

  

”வாங்க வந்து என் பக்கத்தில உட்காருங்க இங்க தென்றல் காற்று வீசுது சுகமா இருக்கு” என சொல்ல அவனும் தயக்கமின்றி அவளின் பக்கத்தில் சின்ன இடைவெளி விட்டு அமர்ந்தான்.

  

நடப்பதைக்கண்ட மூர்த்திக்கு எரிச்சலாக இருந்தது, அவர்களை பார்த்தபடியே எதிர்புறம் அமர்ந்துக் கொண்டான், மூர்த்திக்கு பிடிக்கும் என ஜானகியோ பலகாரங்களை வெகு ஆர்வத்துடன் செய்துக் கொண்டிருந்தாள்.

  

”நான் வந்ததும் என்னைப் பார்த்து நீங்க ஒரு பாட்டு பாடினீங்களே அது ரொம்ப நல்லாயிருந்தது, நீங்க இவ்ளோ அழகா பாடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை” என்றாள் மஹதி

  

”அது சும்மா பொழுது போகாம இருக்கறப்ப பாடுவேன் என்னவோ தெரியலை உன்னைப் பார்த்ததும் சட்டுன்னு அந்த பாட்டு என் மனசுல உதயமாகி அது அப்படியே பாட்டா பாடிடுச்சி

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.