(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

வேற வினையே வேண்டாம் நிலா. அவருக்கு நீ எடுத்துட்டு போய் கொடுத்தா பிடிக்காது. நீ ரெடி செய், நான் போய் கொடுக்குறேன்,” என்றாள் மிருதுளா!

  

சும்மா இருங்க! வெளியே போக வேண்டாம்னு சொல்றது எனக்கு புரியுது... ஹோட்டலுக்கு உள்ளேயே கூட போக கூடாதுன்னு சொன்னால் எப்படி? நான் தான் கொண்டு போய் தருவேன்!“ பிடிவாதத்துடன் சொன்னாள் நிலா.

  

சொன்னது போலவே லஸ்ஸி தயார் செய்து எடுத்துக் கொண்டு சென்றாள்.

  

காலடி ஓசைக் கேட்டு மனைவியை எதிர்பார்த்து பார்த்த வெற்றி, நிலா வருவதை பார்த்து கோபத்துடன் பார்த்தான்!

  

அவனை கண்டுக் கொள்ளாமல், அவளுக்கு முதுகு காட்டியபடி, தலையை இரண்டு கைகளாலும் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் அருகே சென்ற நிலா, லஸ்ஸியை மேஜை மீது வைத்தாள்.

  

மிகவும் சோர்ந்து போனவனை போல் அமர்ந்திருந்தான் அவன்...!

  

முகத்தில் மெல்லிய தாடி... முகம் முழுவதும் அலுப்பு...!

  

ஏதோ தோன்ற, “இந்தாங்க சார் லஸ்ஸி” என்றாள் நிலா!

  

அவள் குரல் கேட்டு பதறி போய் பார்த்தான் அவன்.

  

அவன் முகத்தில் திகைப்பு, ஆச்சர்யம், மகிழ்ச்சி, கேள்வி என ஏதேதோ உணர்வுகள் தோன்றின.

  

அவனின் பரபரப்புக்கான காரணம் நிலாவிற்கு புரியவில்லை...

  

அவள் திகைத்து போய் நிற்க, அவனோ,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.