கோப படுவான். நான் கீதாவை அழைச்சிட்டு வரேன்... அப்புறம் அந்த தோசை...”
“அது ரெடியா இருக்கு சார், எடுத்துட்டு போறீங்களா? இருங்க...”
“இல்லை இல்லை... கீதாவை இங்கே தானே அழைச்சிட்டு வர போறேன். அப்போ கொடுத்தா போதும்... அவ பசி தாங்க மாட்டா... பாவம்... நான் சீக்கிரமா போயிட்டு வரேன்...”
“சரிங்க சார்...”
அவன் அங்கிருந்து சென்ற பின் நிலாவின் முகத்தில் இருந்த குழப்பத்தை கவனித்த மிருதுளா,
“நிலா, அவர் பேச்சுல பொய் இருக்குறதா எனக்கு தோணலை... உண்மைன்னு தோணுது... ஆனால் உன் கழுத்துல இருந்த தாலி எங்கே போயிருக்கும்?” என்றாள் யோசனையுடன்.
“தண்ணில அடிச்சிட்டு போயிருக்கும்... இன்னுமென்ன நிலா? கிருத்திகான்னு கூப்பிடு,” என்றாள் அதுவரை ஓரமாக நின்றிருந்த ராஜம்மாள்.
“இரண்டுப் பேரும் அவளை குழப்பாமல் இருக்கீங்களா? நான் டாக்டருக்கு ஃபோன் போட்டு பேசினேன். அவர் வரேன்னு சொல்லி இருக்கார்,” என்றான் வெற்றி!
“அவர் மட்டும் வந்து என்ன சொல்லுவார்... இந்த விஜய் தம்பி சொல்றது நிஜம்... அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியுது...” என மீண்டும் சொன்னாள் ராஜம்மாள்!
“அப்போ கூட ஏன் அவ வீட்டை விட்டு வந்தா அம்மா? அந்த தியாகுவோ என்னவோ சொன்னானே அவன் கெட்டவனா இருந்தா???” வெற்றி கோபத்துடன் கை முஷ்டியை மடித்தான்!
“டேய், கொஞ்சம் நேரம் உன் கற்பனையை மூட்டை கட்டி வை... எல்லாம் கேட்டு தெரிஞ்சுப்போம்,” என அவனை அமைதியாக்க முயன்றாள் ராஜம்மாள்.