(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

வெற்றி இப்போதும் அவனை சந்தேகமாக பார்த்து விட்டு, மேஜை மீதிருந்த தொலைப்பேசியை நோக்கி சென்றான்.

  

🌼🌸❀✿🌷

     

நிலாவின் மனதினுள் சுனாமி போல பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன... அந்த விஜய் சொன்ன தியாகுவும், கல்யாணமும் அவளை முழுவதுமாக திகைக்க வைத்திருந்தது!

  

அவளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டதா???

  

நம்ப தான் முடியவில்லை...

  

அவள் நினைவில் வந்த அந்த நிழலான உருவம் தான் அவளுடைய கணவனா???

  

நிழலாய் தெரிந்தாலும் அந்த முகமும், அந்த குரலும், காலை முதலே அவளை ஏதோ செய்துக் கொண்டு தான் இருந்தது...

  

பிரின்சஸ், உன் அண்ணி உன்னை பார்த்தே ஆகணும்னு அடம் பிடிக்குறா, நான் அவளை அழைச்சிட்டு வரேன். சித்தப்பா கிட்ட சொல்லிட்டேன், அவரே தியாகுக்கும் சொல்றேன்னு சொல்லிட்டார்...”

  

பரபரப்பாக நிலாவிடம் பேசிய விஜய், மிருதுளாவிடம்,

  

உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர். எப்படி என்ன கைமாறு செய்ய முடியும்னு எனக்கு தெரியலை,” என்று பேச்சை முடித்தான்.

  

அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம் சார்... இந்த போட்டோல இருக்கவங்க எல்லோரும் யாருன்னு சொல்லுங்களேன்...”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.