(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

அவர்களின் பேச்சு காதில் விழுந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே நின்றிருந்தாள் 'கிருத்திகா'!

   

🌼🌸❀✿🌷

   

கால் மணி நேரத்தில் திரும்பி வந்த விஜய் அவன் மனைவியுடன் வந்தான்.

  

கீதா போட்டோவில் பார்த்தது போலவே அழகாக இருந்தாள். ஆனால் சற்று அசதியாக தெரிந்தாள்.

  

கிருத்திகாவை பார்த்த உடனே ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டாள்.

  

கிருத்திகா!!!!”

  

கிருத்திகா என்ன செய்வது சொல்வது என்று புரியாமல், “நான்,” என்றாள் தடுமாற்றத்துடன்!

  

இப்படி பயமுறுத்திட்டீயே! தியாகு அண்ணாவும், அத்தையும் ரொம்ப பயந்துப் போயிட்டாங்க. ஆறு மாசமா வீடு வீடு போலவே இல்லை...”

  

கீதாவிற்கு என்ன பதில் சொல்வது என்று கிருத்திகாவிற்கு இப்போதும் புரியவில்லை!

  

அவள் குழப்பத்துடன் அமைதியாக நிற்கவும், கீதா புரியாமல் பார்த்தாள்.

  

அவ இருக்க நிலமையில இன்னும் குழப்பமா தான் இருக்கும்... நீங்க வாங்க சாப்பிடுங்க,” என்று கீதாவை அழைத்தாள் மிருதுளா.

  

இல்லை... நான் பொறுமையா சாப்பிடுறேன்... அவரும் இன்னும் சாப்பிடலை...”

  

அவர் நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு கவலைப் படுறார், நீங்க அவர் சாப்பிடலைன்னு கவலை படுறீங்க! இரண்டு பேரும் ஒன்னாவே சாப்பிடுங்க... உட்காருங்க... நான் அவரை

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.