“என்னம்மா, என்ன விஷயம்? விவேக் பத்தி யோசிக்குறீயா?” என வினவினார்.
“ஆமாம் நரேன்... அவன் ஏன் கொஞ்ச நாளாவே இப்படி நடந்துக்குறான்?”
“எப்படி நடந்துக்கிறான்?”
“உங்களுக்கு தெரியாதா என்ன? வீட்டுக்கு சரியா வரதில்லை, சரியா சாப்பிடுறதில்லை... பாரதி கிட்ட சரியா நடந்துக்குறது இல்லை...”
“கடைசி விஷயம் உன்னை அப்சட் செய்யுதா என்ன?”
“என்னங்க நீங்களும் இப்படி சொல்றீங்க? நானே, நான் தான் அவன் இப்படி மாறினதுக்கு காரணமான்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன்...”
அழாத குறையாக மனைவி சொல்லவும், நரேந்திரன் அவசரமாக அவளை சமாதானப்படுத்தினார்.
“இல்லைம்மா, அதுக்கு நீ காரணமா இருக்க முடியாது... அவங்களுக்கு நடுவுல வேற ஏதோ சண்டைன்னு நினைக்குறேன்... சின்ன விஷயமா தான் இருக்கும்... இப்போ கூட பாரதி விவேக்கை விட்டுக் கொடுக்காம தான் பேசினா பார்த்தீயா?”
“ம்ம்ம்... பாரதி ரொம்ப நல்ல மாதிரி தான் நரேன்... எனக்கு தான்...”
“உனக்கு என்ன? உனக்கு ஒண்ணுமில்லை... நீ நடந்துக் கிட்டது எல்லாம் எல்லோரும் செய்றது தான்... இது எல்லா வீட்டிலேயும் நடக்குறது தான்... விவேக் உன்னால தான் இப்படி நடந்துக்குறானான்னு நீ கில்ட்டியா ஃபீல் செய்ய தேவையே இல்லை... பாரதி மேல அவனுக்கு அன்பு இருந்தா, யார் என்ன சொன்னாலும் அவன் மாற மாட்டான்...”
“எனக்கு என்னவோ கவலையா இருக்குங்க...”