(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

என் கணவரோட சித்தப்பா கம்பெனி கூட இவ பேருல தான் இருக்கு... ஆனால் தானே சொந்தமா எல்லாத்தையும் செய்யனும்னு இவளுக்கு ஆசை. அதனால தான் எம்.பி.ஏ படிச்சுட்டு அந்த கம்பெனியில சேர்ந்தா. எங்க குடும்பம் மட்டுமில்லை, அந்த கம்பெனிக்காரங்க கூட இவ காணாமல் போனதில் ஆடி தான் போயிட்டாங்க...”

  

நான் அப்போவே சொன்னேன்! இவ பேசுறதை பார்க்கும் போதே எனக்கு இந்த சந்தேகம் இருந்தது... ஆமாம் கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க கீதா, அப்படி என்ன இவளுக்கு இவ கணவருக்கும் சண்டை? எதுக்காக இவ வீட்டை விட்டு வந்தா?” மிருதுளா அடுத்த கேள்விகளை அடுக்கினாள்!

  

கிருத்திகாவும் ஆர்வத்துடன் கீதாவைப் பார்த்தாள்.

  

கீதாவின் முகத்தில் முதல் முறையாக தயக்கம் தெரிந்தது...

   

அது... அதை எல்லாம் நான் சொன்னா சரியா இருக்காது... அவங்க இரண்டு பேர் சண்டை... தியாகு வந்ததும் நேரா அவர் கிட்டேயே கேட்டுப் பாருங்களேன்...”

  

கீதாவின் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டு,

  

அதுவும் சரி தான்,” என ஏற்றுக் கொண்ட மிருதுளா, அவளின் அருகே இருந்த கிருத்திகாவை பார்த்து,

  

இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லோரும் வந்திருவாங்க, நீ போய் முகம் கழுவி, வேற நல்ல சாரீ எடுத்து கட்டிட்டு வா...” என்றாள்!

  

கிருத்திகா தயங்கவும்,

  

ஆமாம் நிலாம்மா, போய் புடவை மாத்திட்டு வா...” என்று ராஜம்மாளும் சொன்னாள்.

  

வேறு வழி இல்லாமல் கீதாவை பார்த்து சின்ன புன்னகையை கொடுத்து விட்டு எழுந்து

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.