(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

சென்றாள் கிருத்திகா.

  

அவள் சென்ற பின் மற்றவர்கள் தங்கள் பேச்சை தொடர்ந்தார்கள்.

  

எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு மாசம் தான் ஆகுது. ஆனாலும், என் கிட்ட அவ்வளவு சுலபமா ஒட்டிக் கிட்டா நிலா... நான் கூட மனசுக்குள்ள அதை நினைச்சு ஆச்சர்யப்படுவேன்... இப்போ தான் தெரியுது அதுக்கு காரணம் உங்க குடும்பம்ன்னு,” என்றாள் மிருதுளா.

  

இல்லை... நீங்க நினைக்குறது தப்பு... எனக்கு தெரிஞ்ச கிருத்திகா இப்படி இல்லை... இவ்வளவு அமைதியா, பொறுமையா அவளை நான் பார்த்ததே இல்லை... என்னோட அவளுக்கு ரொம்ப ஒட்டுதல் எல்லாம் இல்லை,” என்றாள் கீதா தயக்கத்துடன்.

  

மிருதுளா நம்ப இயலாதவளைப் போல் அவளை பார்த்தாள். அந்த பார்வைக்கான காரணத்தைப் புரிந்துக் கொண்டு,

  

சாரி, உங்க கிட்ட சும்மா பொய் சொல்ல எனக்கு இஷ்டமில்லை,” என்றாள் கீதா!

  

புரியுதுங்க கீதா... ஆனால்...”

  

அவ அவங்க அண்ணாவோட ரொம்ப க்ளோஸ்... பாசமலர் சிவாஜி, சாவித்திரிக்கு அப்புறம் இவங்க இரண்டு பேரும் தான்னு வச்சுக்கோங்களேன்...”

  

மிருதுளா முகத்தில் மீண்டும் புன்னகை தோன்றியது. கீதா பேச்சை மாற்ற விரும்புவது அவளுக்கு புரிந்தது... என்ன காரணம் என்று தெரியா விட்டாலும், கண்டுக் கொள்ளாமல் மிருதுளாவும் தொடர்ந்து விஜய் பற்றியே பேச தொடங்கினாள்.

  

🌼🌸❀✿🌷

  

நேரம் மெல்ல நகர்ந்து செல்ல, வெற்றி பவனின் முன் இரண்டு கார்கள் வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்றன... வெற்றி, டாக்டர் மோகன், விஜய் மூவரும் வெளியே சென்று பார்த்தார்கள். காரில் இருந்து இரண்டு வயதான தம்பதியினரும், மூன்று இளைஞர்களும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.