(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 09 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

கிருத்திகா மிருதுளாவைப் பார்த்து முறைத்தாள்!

  

கோபப்படாதே நிலா! உன்னோட அவருக்கு உன் வெற்றி அண்ணாவே மேல போலருக்கு! ஆனால் கல்லு என்ன, வைரம் போல இறுகி இருந்தாலும், பொண்ணுங்க நினைச்சா உருக வைக்கலாம்... எல்லாம் நம்ம கைல தான் இருக்கு! அவர் கர்மமே கண்ணா வேற பக்கம் பார்க்கும் போதே அவருக்கு உன் பக்கம் பார்க்க பயம்னு தோணுது... நீ மட்டும் கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, சார் சீக்கிரமே ஃப்ளாட் ஆகிடுவார்...”

  

மிருதுளா சொன்னதைக் கேட்டு தலையை ஆட்டிய கிருத்திகா,

   

நடக்குறது எல்லாம் நல்லதுக்குன்னு சொல்றாங்களே அது எவ்வளவு உண்மை,” என்றாள் புன்னகை மின்ன!

  

இவள் ஏன் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசுகிறாள் என்ற குழப்பத்துடன்

  

ஏன் இதை இப்போ சொல்லுற???” என்றாள் மிருதுளா!

  

இரண்டு வருஷமா இது மாதிரி ரகசியங்கள் எல்லாம் எனக்கு சொல்லி கொடுக்க யாருமே இல்லைன்னு தோணுது... அதுக்காகவே தான் இந்த ஆக்சிடன்ட்... அண்ணாவோட அறிமுகம்... அப்புறம் உங்க அறிமுகம் எல்லாம் போலருக்கு...”

  

ஓஹோ! அதுக்கு தான் உன் மண்டையிலே அடிப் பட்டதுன்னு சொல்லாம விட்டுட்டீயே!”

  

கிளம்பலாமா????”

  

குமரேசனின் குரலை தொடர்ந்து ஒவ்வொருவராக காரில் ஏற தொடங்கினார்கள்.

  

கிருத்திகாவும் பேச்சை நிறுத்தி விட்டு, ராஜம்மாளிடம் விடை பெற்றுக் கொண்டு காரின் அருகே சென்றாள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.