(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 11 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

யோசித்துக் கொண்டே இருந்த கிருத்திகாவிற்கு, விஜய் இப்போது அவனாகவே வந்து காரை நிறுத்தி அவர்களிடம் பேசி விட்டு போனது ஞாபகம் வந்தது!

  

இப்படியும் இருக்குமோ??? மீண்டும் ராஜ் பக்கம் பார்த்தாள்!

  

என்ன?” அவள் பக்கம் திரும்பாமலே கேட்டான் அவன்!

  

நான் வீட்டுல எல்லோருக்கும் ரொம்ப செல்லம்னு சொன்னாங்களே... அதனால அவங்க நமக்குள்ள எல்லா விஷயத்துலேயும் மூக்கை நுழைச்சாங்களோ??? அதனால தான் நமக்குள்ளே சண்டை வந்துச்சோ?”

  

உன் டாக்டர் நீ ரொம்ப யோசிச்சா உனக்கு தலைவலி வரும்ன்னு சொல்லி இருக்காருல! அப்புறம் ஏன் இல்லாத மூளையை கஷ்டப்படுத்திட்டு இருக்க?”

  

அவன் சாதாரணமாக, கேலி கலக்க தான் சொன்னான்... ஆனால் அவளுக்கு கோபம் வந்தது.

  

இங்கே பாருங்க, கல்யாணம்ன்றது சின்ன பசங்க விளையாட்டு இல்லை. இந்த டிவோர்ஸ் விஷயம் நம்ம அம்மா அப்பாக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப் படுவாங்க? எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசி சமாதானமாகலாம்... இந்த விளையாட்டு பேச்சை எல்லாம் விட்டுட்டு என்ன நடந்ததுன்னு சொல்லுங்க, ப்ளீஸ்...”

  

அப்படி எல்லாம் பழைய விஷயங்களை நானா உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்...”

  

வேற எதையும் சொல்ல வேண்டாம்... இதை மட்டும் சொல்லுங்களேன் ப்ளீஸ்...”

  

நீ வேற எதையாவது கேள் சொல்றேன்... ஆனால் இதைப் பத்தி இப்போ கேட்காதே...”

  

அப்போ டிவோர்ஸ் விஷயத்தை பத்தி மட்டும் ஏன் சொன்னீங்க????”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.