(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

ராஜ் இப்போது மௌனமாக இருந்தான்!

  

“சரி, எதுக்காக வேணா இருந்துட்டு போகட்டும். ஆனால் இங்கே பாருங்க, என்னை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை... அப்படி ஈசியா எல்லாம் உங்களுக்கு நான் சைன் போட்டு கொடுத்துற மாட்டேன்... நீங்க இப்படி அடம் பிடிச்சா என் கூடவே இருந்து கஷ்டப் பட வேண்டியது தான்...”

  

மிரட்டுவதுப் போல கிருத்திகா சொல்ல, பக்கவாட்டில் அவளுக்கு தெரிந்துக் கொண்டிருந்த ராஜின் முகம் இளகுவது போல தோன்றியது...

  

சிரிக்கிறானோ????

  

சற்றே முன்னே நகர்ந்து அவனின் முகத்தை ஆராய்ந்தாள்...!

  

அந்த முகம் இப்போதும் கல்லாகவே தான் இருந்தது... ஆனால், அந்த கண்களில் ஏதோ இருக்கிறதோ???

  

அவள் மும்முரமாக ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க, ராஜ் பேசினான்!

  

இங்கே பார் கீர்த்தி, எனக்கும் உன் மேல அக்கறை இருக்கு... உனக்கு இந்த நோய் சரியாகி எல்லாம் ஞாபகம் வர வரைக்கும் நான் இந்த விவாகரத்து பேப்பரை கையில எடுக்க மாட்டேன்... அதை பத்தி பேச மாட்டேன்... ஐ ப்ராமிஸ் யூ... மத்தவங்க சொல்றதை கேட்டு நீ ஏதோ நாம இரண்டு பேரும் ரோமியோ ஜூலியட் மாதிரின்னு நினைச்சிட கூடாதேன்னு தான் இதை பத்தி உன் கிட்ட சொன்னேன். இப்போ அமைதியா ரெஸ்ட் எடு...”

  

அவள் பதில் சொல்லவில்லை...! ஆனால் மனதினுள் புகைந்தாள்.

  

சொல்றது எல்லாத்தையும் சொல்லிட்டு அமைதியா வேற ரெஸ்ட் எடுக்கணுமாம்... சரியான ஸ்டோன் ஸ்டாச்யூ...!

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.