(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 06 - Chillzee Story

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

தவோரம் இருந்த ஹை ஹீல்ஸ் செருப்பை பார்த்த ப்ரியம்வதாவின் முகம் சுருங்கியது.

  

“ஐஸ்வர்யாவும் வந்திருக்கா போல இருக்கு,” என்றாள் ப்ரியம்வதா கசப்புடன்!

  

“யாரு அது ஐஸ்வர்யா?” ப்ரியம்வதாவுடன் வந்திருந்த வினாயக், தலை கால் எதுவும் புரியாமல் கேட்டான்.

  

“என் அண்ணா ராகுல் லவ் செய்றவ!”

  

“ஓ, அப்போ உன் வருங்கால அண்ணியா? அவங்களை ஏன் இப்படி சொல்ற ப்ரியம்வதா? உனக்கு ஐஸ்வர்யாவை பிடிக்காதா?”

  

ப்ரியம்வதா தோள்களை குலுக்கிக் கொண்டாள்.

  

“கல்யாணம் செய்துக்க போறவன் ராகுல். பிடிக்குறது பிடிக்காதது எல்லாம் அவன் தலைவலி.”

  

இருவரும் வீட்டினுள் செல்ல, கலைவாணி வினாயக்கை ஆர்வத்துடன் வரவேற்றாள்.

  

“என்னப்பா வினாயக் இவ்வளவு நேரம்? நீ வருவேன்னு நான் நாலு மணில இருந்தே பார்த்துட்டு இருக்கேன்!” தன் மகன் ராகுல் பக்கம் பார்த்த கலைவாணி, “ராகுல், நான் சொன்னேனே வினாயக். பெரிய சைன்டிஸ்ட்,” என ராகுலுக்கும் அவனை அறிமுகம் செய்தாள்.

  

வினாயக்கை பார்த்து நட்புடன் புன்னகை செய்த ராகுல் ஸ்மார்ட் அன்ட் ஹான்ட்சம் ஆக இருந்தான்! வெளீர் ஜீன்ஸும், டார்க் ப்ளூ டீ ஷர்ட்டும் அணிந்திருந்தவன், புன்னகை செய்தப்போது அவனிடம் தெரிந்த ப்ரியம்வதாவின் சாயல் வினாயக்கிற்கு வியப்பை கொடுத்தது!

   

ராகுல் வினாயக்கிடம் அன்பாக பேசினான். அவனின் வருங்கால மனைவி ஐஸ்வர்யாவையும் வினாயக்கிற்கு அறிமுகம் செய்து வைத்தான். சில நிமிடங்களுக்கு முன் ப்ரியம்வதாவிடம் பார்த்திருந்த ‘ரியாக்ஷன்’ காரணமாக ஐஸ்வர்யாவை ஆவலுடன் கவனித்தான் வினாயக்!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.