(Reading time: 14 - 27 minutes)

12. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ளவரசனின் அந்த பாடலை கேட்டு இனியா நெற்றிக் கண்ணை திறந்து எரித்துவிடுபவளை போல் பார்க்க சந்துருவோ தன் அண்ணனை கேள்விக் குறியாக பார்த்தான்.

இளவரசனுக்கு அப்போது தான் அவன் செய்த தவறு புரிந்ததது. “ஓ இவன் முன்னாடி இந்த சாங் போட்டு காண்பிச்சிட்டேனா, அதான் இவ என்ன இப்படி எரிக்கற மாதிரி பார்க்கறாளா, (இவ என் கிட்ட பேசவே இல்லன்னா நான் வேற யாரையாச்சும் யூஸ் பண்ணி தானே இவ கிட்ட ஏதாச்சும் சொல்ல முடியும், ஆனா இவ வேற இப்படி முறைக்கிறாளே, கூட இவன் வேற) ம்ம்ம் சமாளிப்போம்”

“என்னடா என்ன இப்படி முழிக்கற”

“இல்லண்ணே நீ எப்ப இருந்து இப்படி எல்லாம் சாங் டீப்பா கேட்க ஆரம்பிச்சன்னு பார்க்கறேன். தெரியுமா இனியா என் அண்ணனுக்கு எப்பவுமே இந்த சாங்ஸ் எல்லாம் கேட்கற பழக்கமே கிடையாது. எந்த சாங்கும் அதோட பர்ஸ்ட் லைன்க்கு மேல தெரியாது. இப்ப பார்த்தா என் அண்ணன் கிட்ட டோடல் சேன்ஜ் தெரியுது.”

“டேய் உன் கிட்ட ஒரு சாங் நல்லாருக்குன்னு சொன்னது ஒரு குத்தமா. அதை விடு டா”

ஆனால் இன்னமும் இனியா இளவரசனை முறைப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

(ஐயய்யோ இன்னைக்கு இவளை சமாதானபடுத்த முடியாது போலருக்கே. இப்ப ஒன்னும் பண்ண முடியாது போலருக்கு. சோ நான் எஸ்கேப் ஆகறது தான் நல்லது)

“சரி டா. எனக்கு ஒரு போன் பண்ணணும். நான் இதோ வந்துடறேன்”

அவன் அங்கிருந்து கிளம்புவதற்க்குள் அங்கு வந்த ஜோதி, “எங்க போறீங்க”

“என் அசிஸ்டென்ட்க்கு ஒரு போன் பண்ணணும். இதோ போன் மட்டும் பண்ணிட்டு வந்துடறேன்”

“என்ன இன்னைக்கும் வொர்க் தானா. இன்னைக்கு நீங்க எங்க கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ணணும்” என்றாள்.

“இல்ல” என்று இளவரசன் தயங்கும் போதே,

சந்துரு இடையிட்டு “போன் தானே அண்ணா. நான் போய் உங்க மொபைல் எடுத்துட்டு வரேன்.” என்று கூறிவிட்டு கண்ணடித்தான்.

(ம்ம்ம். இன்னைக்கு எல்லாம் சேர்ந்து என்ன அட்டாக் பண்றாங்க போல. கடவுளே! ஒன்னும் பண்ண முடியாது)

“ம்ம்ம். எடுத்துட்டு வாடா”

அதற்குள் அவனின் தாயும் வந்து விடவே இனியாவால் அதற்கு மேலும் அவள் முகத்தை கடுமையாக வைத்துக் கொள்ள முடியவில்லை.

அப்படியே அவர்கள் மதிய உணவு நேரம் வரும் வரையில் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

“அம்மா டைம் ஒரு மணி ஆகிடுச்சி. பசிக்குதும்மா சாப்பிடலாமா” என்றான் சந்துரு.

“கொஞ்சம் வெயிட் பண்ணு டா. எங்க அண்ணன் மதியம் சாப்பிடற டைம்க்கு கரெக்ட்டா வரேன்னு சொன்னாரு. அவரும் வந்திடட்டும், பாலு தம்பியும் வந்துடறேன்னு சொன்னாரு” என்றார் ராஜலக்ஷ்மி.

“இருங்க அத்தை நான் அப்பாக்கு போன் பண்ணி பார்க்கறேன்” என்றாள் ஜோதி.

ஜோதி போனில் பேசிவிட்டு ஒரு அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொன்னாரு அத்தை என்றாள்.

“சந்துரு நீங்க சாப்பிடறதுன்னா இப்பவே சாப்பிட்டுடுங்க. எங்கப்பா 5 நிமிசத்துல வரேன்னு சொன்னாலே அட்லீஸ்ட் ஒரு ஒன் ஹவர் ஆகும். இப்ப அரை மணி நேரம் ஆகும்னு சொல்லியிருக்காரு. நீங்களே டைம் கால்குலேட் பண்ணிக்கோங்க” என்று சிரித்தாள் இனியா.

“ஐய்யையோ இன்னைக்கு சாப்பிட்ட மாதிரி தான் போல இருக்கே” என்று பொய்யாக பொலம்பினான் சந்துரு.

“டேய் என்னடா மாமா வர வரைக்கும் வெயிட் பண்ண மாட்டியா. சந்துரு நீ செய்றது சரி இல்லை” என்று கண்டித்தார் ராஜலக்ஷ்மி.

“ஐயோ என்ன அத்தை சந்துருவை போய் திட்றீங்க. அவருக்கு பசிக்குதுன்னா சாப்பிடட்டும். நோ பார்மாலிட்டீஸ் அத்தை” என்றாள் ஜோதி.

“இல்லை அண்ணி. மாமா வந்த உடனேயே சாப்பிடலாம் நோ ப்ராப்ளம்.”

அதற்குள் ஜோதி “ஏன்டீ அப்பாவை கிண்டல் பண்றியா. இரு இரு உன்ன அம்மா கிட்ட சொல்லி வைக்கறேன்” என்று அவளை மிரட்டி விட்டு

“இல்லை சந்துரு, நீங்க பசிக்குதுன்னு சொன்னீங்க இல்ல, அதனால நீங்க சாப்பிடுங்க”

“ஐயோ உண்மையா சொல்லாம நீங்க விட மாட்டீங்க போல இருக்கு. பசிக்க எல்லாம் இல்லப்பா. நீங்க எல்லாம் காலைல இருந்து பேசி பேசி காதுல இருந்து ரத்தம் வர வைக்கறீங்க. பாருங்க உங்க கொடுமைய தாங்காம அபி தூங்கிட்டா. அந்த மாதிரி சாப்பாட்டு பேரை சொல்லியாவது நானும் தப்பிக்கலாம்னு பார்த்தேன். பட் என் அதிர்ஷ்டம் எனக்கு முன்ன போகுது. சரி விடுங்க. என்ன பண்றது” என்றான்.

ஜோதியோ அவனை கோபமாக முறைக்க,

ராஜலக்ஷ்மியோ நெகிழ்ந்து போனார்.

தன் அத்தையை கவனித்த இனியா “என்ன அத்தை” என்று வினவினாள்.

“இல்லம்மா. இவங்க அப்பா இருந்த வரைக்கும் எப்படியோ, ஆனா அவர் போனதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் சந்தோசமா பேசி சிரிக்க கூட ஆள் இல்லாத மாதிரி இந்த வீடே வெறுமையா இருந்துச்சி. இப்போ நீங்க ரெண்டு பேரு தான் வந்திருக்கீங்க. ஆனா வீடே கலகலப்பா இருக்கு” என்றார்.

அதற்குள் தூங்கி விழித்த அபி குறிக்கிட்டு “பாட்டி. நான் ஒரு பெரிய மனுசி உங்களுக்கு தெரியறேனா இல்லையா. உங்க வீட்டுக்கு ரெண்டு பேரு தான் வந்திருக்கங்கான்னு சொல்றீங்க.” என்றாள்.

“ஐயய்யோ சாரி டா குட்டி. நீங்க தூங்கிட்டிருந்தீங்களா, அதனால பாட்டி வாய் தவறி சொல்லிட்டேண்டா. பாட்டிக்கு வயசாயிடுச்சி இல்லை. அதனால தான். சரியா. சாரி குட்டி” என்றார்.

“ம்ம்ம். என்று தனது குட்டி விரலை தவடையில் வைத்தவாறே யோசிக்கும்படி செய்துவிட்டு “ஓகே. பாவம் நீங்க. அதனால நான் உங்களை எக்ஸ்கியூஸ் செய்யறேன்” என்று கூறி அங்கு சிரிப்பலையை உருவாக்கினாள்.

“அப்படியே பாலு தம்பிக்கும் போன் பண்ணும்மா” என்று ராஜலக்ஷ்மி ஜோதியிடம் கூறினார்.

சொன்ன அரை மணி நேரத்திலேயே ராஜகோபாலும் லக்ஷ்மியும் வந்து இனியாவிற்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தனர். பின்பு பாலுவும் வந்து இணைந்து கொண்டான்.

ஜோதி இனியாவை “பார்த்தியா டீ. எங்கப்பாவை கிண்டல் பண்ண இல்ல. எங்கப்பா கரெக்ட் டைம்க்கு வந்துட்டார் பார்த்தியா” என்றாள்.

இனியா பதிலுக்கு “வவ்வ வவ்வ” என்று ஒழுங்கி காண்பித்து விட்டு தன் அத்தையுடன் சமயலறைக்கு சென்றாள்.

இளவரசனும் சந்துருவும் அக்காட்சியை ஏதோ அதிசயத்தை போல் பார்த்தார்கள்.

லக்ஷ்மி “என்னடி அவ என்ன சொன்னா, என்ன சண்டை உங்களுக்கு” என்றார்.

“இல்லம்மா. அப்பா போன்ல அரை மணி நேரத்துல வரேன்னு சொன்னார்ன்னு சொன்னா அவ அப்பா கரெக்ட் டைம்க்கு எப்பவும் வர மாட்டார்ன்னு சொல்லி கிண்டல் பண்றா” என்று கூறினாள்.

“இனியா சொல்றது கரெக்ட் தானே ஜோதி. நான் எப்பவும் அப்படி தானே பண்ணுவேன். அதான் அவ அப்படி சொல்றா.” என்றார் ராஜகோபால்.

“என்னப்பா நீங்க. நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணா நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க” என்று சிணுங்கினாள்.

அதற்குள் சமயலறையில் இருந்து வந்த இனியாவும் அப்பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அதற்கு ஏதும் கூறவில்லை.

பின்பு அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அவர்களின் பேச்சும் எங்கெங்கோ சென்றுக் கொண்டிருந்தது. சிறு வயது முதல் அனைத்தையும் அந்த அண்ணன் தங்கை பேசிக் கொண்டிருந்தனர்.

ராஜகோபால் “ராஜீ சின்ன வயசுல எப்படி இருப்பா தெரியுமா லக்ஷ்மி. எல்லாத்துக்கும் ஒரே பயம் தான். இருட்டுல கொஞ்சம் போக சொன்னா போதும். அழுதுடுவா. இவ பயப்படறதே எங்களுக்கு எல்லாம் சிரிப்பா வரும். வேணும்னே திடீர்ன்னு இவ முன்னாடி வந்து நிப்போம். இவ பயப்படறதை பார்த்து சிரிப்போம். நாங்க எல்லாம் சேர்ந்து சிரிச்சா உடனே அழ ஆரம்பிச்சிடுவா, ஆனா இவ அழா ஆரம்பிச்சிட்ட என் மனசு தாங்காது. எதாவது சொல்லி சிரிக்க வச்சிடுவேன்”

“அண்ணா ஏன் இப்படி சின்ன பசங்களை எதிர்ல வச்சிக்கிட்டு இப்படி சொல்லி என்னை கிண்டல் பண்றீங்க” என்றார் ராஜலக்ஷ்மி.

சந்துரு இடையிட்டு “மாமா மாமா சொல்லுங்க சொல்லுங்க என்று அவரை ஊக்குவித்தான்.”

“ம்ம்ம் என்றவாறே இருட்டுல வெளியே போறதுக்கு கூட ராஜாண்ணா ராஜாண்ணா என் கூட கொஞ்சம் வாயேன்னு சொல்லி கெஞ்சுவா” என்று சொல்லி சிரித்தார்.

“ராஜீ என்னை அப்பல்லாம் ராஜாண்ணான்னு தான் கூப்பிடுவா.”

“அதெல்லாம் ஒரு காலம் இல்லை ராஜீ. எல்லாம் திடீர்ன்னு மாறிடுச்சி.” என்று வருத்தப்பட்டார்.

“விடுங்கண்ணே ஏதோ கேட்ட நேரம். திரும்ப நாம எல்லாம் சேர்ந்ததே எனக்கு ரொம்ப சந்தோசம்” என்றார் ராஜலக்ஷ்மி.

“ம்ம்ம். ஆமாம். ஆனா நான் உன்னை எவ்வளவோ தேடி பார்த்தேன். அப்புறம் மாப்பிள்ளை திருநெல்வேலின்னு தெரிஞ்சி அவங்க வீட்டு வரைக்கும் போய் விசாரிச்சேன். ஆனா அவங்க ஏதும் விவரம் சொல்லல. என்ன திட்டி தான் அனுப்சாங்க” என்றார் வருத்தத்துடன்.

“விடுங்கண்ணே. போனது போகட்டும். அதெல்லாம் பேச வேண்டாம்.”

“அது சரிண்ணே. செல்வி அக்காவும், சுதா அக்காவும் எப்படி இருக்காங்க”

“ம்ம். எல்லாரும் நல்லாருக்காங்க”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.