(Reading time: 14 - 27 minutes)

டையில் புகுந்த இனியா “அத்தை நீங்க சொல்றதை பார்த்தா அப்பாவும் நீங்களும் ப்ரண்டு மாதிரி தான் இருந்திருக்கீங்க. ஆனா ஏன் அத்தை அப்பா கிட்ட கூட உங்க லவ் பத்தி சொல்லலை. இல்லை உங்க கல்யாணத்துக்கு அப்புறமும் அப்பாவை வந்து பார்க்கலை” என்றாள்.

“அப்படி இல்லம்மா. நான் +2 படிக்கற வரைக்கும் எங்க ஊருல தான் இருந்தேன். அதுக்கு அப்புறம் தான் அப்பாவுக்கு திருநெல்வேலிக்கு மாறுதல் வந்து அங்க போனோம். அங்கேயே காலேஜ் நல்ல காலேஜ்ன்னு சொல்லி சேர்த்து விட்டாங்க. ஒரு வருஷம் முடியும் போதே அப்பாவுக்கு திரும்ப மாத்தல் வந்துடுச்சி. அந்த ஒரு வருசத்துலயாவது அண்ணனை வீட்டுக்கு வரும் போது பார்க்க முடியும். அப்புறம் ஹாஸ்டல் தான். அதுக்கு அப்புறம் எக்ஸாம் லீவ்க்கு ஊருக்கு போனா தான் அண்ணனை பார்க்க முடியும்.”

“கொஞ்சம் டிஸ்டன்ஸ் வந்துடுச்சின்னு வச்சுக்கயேன். ஆனா அந்த அபெக்ஸன் மட்டும் மாறலை. அப்புறம் என் காலேஜ் கடைசி வருசத்துல எனக்கு வரன் வந்திருக்குன்னு சொல்லி ஒரே பிரச்சனை. நான் வீட்டுல தைரியமா சொல்லிட்டேன். ஏன் எனக்கு அந்த தைரியம்ன்னா அவரும் நம்ம காஸ்ட் தான். ஆனாலும் அப்பா ரெண்டு அக்காங்களுக்கும் அவங்க வீட்டுல பிரச்சனை வரும்ன்னு சொல்லி திடீர்ன்னு கல்யாணம் பண்ணணும்ன்னு நிக்கறாங்க. நான் வேற என்ன பண்றது. நாங்களே போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.”

“அப்புறம் வீட்டுக்கு நாங்க போகவே தேவை இல்லாத மாதிரி அவங்களே வந்து எங்களை திட்டிட்டு சபிச்சிட்டு போய்ட்டாங்க. அந்த நிலைமைல அண்ணனை போய் பார்க்க முடியாத சூழ்நிலை.”

“அப்புறம் ஒரு வருசத்துக்கு அப்புறம் என் தம்பி மோகனை பார்த்தேன். நான் பார்த்து வளர்ந்த பையன். அவன் ஏதோ நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்னு ஒரே அடியா நடுரோடுல குதிச்சான். நடுரோடுல எவ்வளவு பெரிய பிரச்சனை தெரியுமா. அது வரைக்கும் என் வீடு என் வீடுன்னு ரொம்ப ஏங்கி இருக்கேன். அதுக்கு அப்புறம் எல்லாம் விட்டு போன மாதிரி ஆகிடுச்சி. அப்புறம் நாங்க ரெண்டு பெரும் எந்த வீட்டு சொந்தமும் வேணாம்ன்னு முடிவு பண்ணி சென்னைக்கு வந்துட்டோம்.”

“என்ன ராஜீ சொல்ற. மோகன் உன்ன பார்த்தானா. நான் எத்தனை தடவை அவன் கிட்ட கேட்டிருக்கேன் தெரியுமா. அவன் ஏதும் சொல்லலையேம்மா.” என்றார் ராஜகோபால்.

“எப்படிண்ணே சொல்லுவான். உங்களுக்கு என் மேல பிரியம் அதிகம்ன்னு அவனுக்கு தெரியும். அதனால அவன் சொல்லியிருக்க மாட்டான்”

“அப்பா மோகன் சித்தப்பாவா அப்பா இப்படி பண்ணிருக்கார். அவரை எவ்வளவு நல்லவருன்னு நான் நினைச்சிருந்தேன். அவரு எப்படிப்பா இப்படி” என்றாள் ஜோதி.

“என்னம்மா சொல்றது. இப்ப எல்லாம் எல்லாரும் படிக்கறாங்க. ஆனா இந்த காலத்துலேயே இந்த லவ் அப்படிங்கற விஷயம் அவ்வளவு ஏத்துக்க கூடியதா இல்லை. லவ் பண்றவங்க எல்லாம் ஸ்ட்ரகில் பண்ணி தான் வர வேண்டி இருக்கு. அந்த காலத்துல கேட்கவா வேணும்.”

“அதுவும் மோகன் எல்லாம் சரியா படிக்காதவன். அவனுக்கு என்ன மென்டாலிட்டி இருக்கும். படிச்சி இருக்கறவங்கலாலேயே இந்த விஷயத்தை சரியா ஹான்டில் பண்ண முடியாம இருக்கும் போது படிக்காதவன் எப்படி தின்க் பண்ணுவான். அதுவும் எங்க ஊரு ஒரு கிராமம். அங்க எல்லாம் இதை ஏத்துக்க மாட்டாங்க.”

“பொண்ணுக்கு அவளோட மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கற உரிமை இருக்கு அப்படின்னு சொன்னா அவங்க எல்லாம் சிரிப்பாங்க. சொல்ற நம்மளை ஏதோ பைத்தியத்தை பார்க்கற மாதிரி பார்ப்பாங்க”

“அதுக்குன்னு இப்படியாப்பா. அத்தை பாவம்ல. பாமிலியை விட்டு எவ்வளவு நாள் பிரிஞ்சி இருக்காங்க. லவ் பண்றது என்ன அவ்வளவு பெரிய குத்தமா”

“நான் சொல்றதை நல்லா கேளுடா. முதல்ல பொண்ணுங்க வெளிய வரவே கூடாது. அது பெரிய தப்புங்கற காலம் இருந்துச்சி. அப்புறம் அவங்க எப்படியோ கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்தாங்க. இருந்தாலும் பொண்ணுங்களுக்குன்னா சமையல்கட்டு தான் லாயக்கு அப்படிங்கற எண்ணம் மாறலை. அதுல இருந்தும் வெளிய வந்து அவங்க படிக்க ஆரம்பிச்சது எல்லாம் பெரிய மாற்றம். நான் இப்ப சொல்றது எல்லாம் ஏதோ ஒரு சில நாள்ல நடக்கலை. இதுக்கெல்லாம் நடக்க ரொம்ப நிறைய  வருசங்கள் எடுத்தது.”

“அப்படி வெளியே வந்தாலும் அவங்களுக்கு அவங்களோட உரிமைகள் அவ்வளவு சீக்கிரம் கிடைக்கலை. இன்னைக்கு வரைக்கும் பொண்ணுங்க அவங்களோட உரிமைக்காக போராடிட்டு தான் இருக்காங்க.”

“இதுல நாங்க இருந்தது அந்த காலம். அப்ப பொண்ணுங்களை அவ்வளவா படிக்க வைக்க மாட்டங்க. ராஜீயோட அக்காங்க ரெண்டு பேரும் படிக்கலை. உங்க அத்தைங்க சுதா, செல்வி ரெண்டு பெரும் படிக்கலை. ஆனா இவளுக்கு படிப்புன்னா ரொம்ப ஆர்வம். எங்க சித்தப்பாவும் ஒரு கவர்ன்மன்ட் வேலைல இருந்ததால படிப்பு நல்லா வர பொண்ணை நிறுத்தக் கூடாதுன்னு ஒரு அறிவு இருந்ததால தான் ராஜீயை படிக்க வச்சாரு. அந்த காலத்துக்கு அதுவே பெரிசு தான்.”

“இதுல யாரை குறை சொல்றது. அப்ப பசங்க லவ் பண்றதே ரொம்ப பெரிய தப்பு. பொண்ணுங்க லவ் பண்றதை எப்படிம்மா ஏத்துப்பாங்க. என்ன. இப்ப எங்க சித்தி, இதோ மோகன், அவங்க ரெண்டு அக்காங்கன்னு எல்லாரும் சேர்ந்து ராஜீக்காக பேசி இருந்தா கல்லும் கரையற மாதிரி கொஞ்ச நாள் கழிச்சாச்சும் எங்க சித்தப்பாவும் ஏத்துக்கிட்டு இருந்திருப்பாரு. என்ன பண்றது. எல்லாம் நேரம். யாரும் அதை ஒன்னும் பண்ண முடியாது.”

“என்ன சொல்லுங்க மாமா. என்னால இதை எல்லாம் ஏத்துக்கவே முடியலை. எப்படி அத்தனை வருஷம் வளர்த்த பொண்ணை அப்படியே தலை முழுகிட்டு அவங்களால இருக்க முடிஞ்சது. நாங்க யாருமே இல்லாம எவ்வளவு கஷ்ட பட்டிருக்கோம் தெரியுமா. எல்லாருக்கும் இருக்கற தாத்தா பாட்டி ஏன் நமக்கு இல்லைன்னு நான் சின்ன வயசுல எப்படி குழம்பியிருக்கேன் தெரியுமா” என்று சோகமாக கூறினான் சந்துரு.

“சரி விடுப்பா. அந்த ஜெனரேஸன் எப்படியோ போயிடுச்சி. இனிமே இருக்கரவங்களாச்சும் இருக்கற நிதர்சனத்தை ஏத்துகிட்டு நடந்துகிட்ட சரி தான்” என்றார் ராஜகோபால்.

“அப்படின்னா நீங்க லவ்க்கு எனிமி கிடையாதா மாமா.” என்றான் சந்துரு இளவரசனை பார்த்தவாறே.

“ம்ம்ம். நான் லவ்க்கு எனிமி எல்லாம் கிடையாதுப்பா. ஆனா இந்த காலத்து பசங்களுக்கு அவங்களுக்கு என்ன வேணும்ன்னே தெரிய மாட்டுது. அவங்களுக்கு வர லைப் பார்ட்னர் எப்படி இருக்கணும்னு இந்த சினிமா பார்த்து ஏதோ கற்பனையை வளர்த்துக்கறாங்க. ஏதோ அவங்களுக்கு லவ் பண்ற சான்ஸ் வந்த உடனே அவங்க பார்ட்னர் கிட்ட அந்த க்வாலிடி எல்லாம் இருக்குன்னு நம்பி கண்மூடித்தனமா காதலிக்கறாங்க.”

“அப்புறம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் அந்த மயக்கம் எல்லாம் போன உடனே நாம நினைச்சது எதுவுமே நடக்கலைன்னு பிரேக்-அப் பண்ணிக்கறாங்க. சோ அந்த மாதிரி லவ் நான் எதிர்க்கறேன். மத்தபடி உண்மையா அவங்களுக்கு லைப்ன்னா என்னன்னு தெரிஞ்சி ப்யுடர்ல நாம என்ன எல்லாம் ப்ரோப்லம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்னு தெரிஞ்சி லவ் பண்ணா அது அப்ரிசியேட் பண்ண வேண்டியது தான். என் பசங்கன்னா அவங்க எல்லாம் அனலைஸ் பண்ணி டிசைடு பண்ணி இருக்கங்களான்னு பேசி பார்ப்பேன். அப்படி இருந்தா, நான் எந்த அப்ஜெக்ஸனும் சொல்ல மாட்டேன்.” என்றார்.

ளவரசன் இனியாவை பார்த்து “பார்த்தாயா, நமக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை” என்பது போல் கண்ணை காண்பித்தான்.

இனியாவிற்கு கோபம் தான் வந்தது. இப்ப எதுக்கு இந்த பார்வை. அப்பா என்ன சொல்றாரு. எல்லாத்தையும் யோசிச்சி முடிவு பண்ணி இருக்கனும்ன்னு சொல்றாரு. இவன் நான் யோசிக்கனும்ன்னு சொன்னதுக்கே அப்படி திட்டிட்டு இப்ப என்ன இப்படி பார்வை கேட்க வேண்டி இருக்கு என்று உள்ளுக்குள் திட்டினாள்.

“நீங்க சொல்றது ஆச்சர்யமா இருக்குப்பா. நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணலை. ஆனால் லவ்க்கு சப்போர்ட் பண்றீங்க. ஆனா இப்ப எல்லாம் எப்படி இருக்காங்க தெரியுமா. அப்பாவே அவரோட சின்ன வயசுல லவ் பண்ணியிருப்பாரு. ஆனா அவரு பையன் லவ் பண்ணும் போது ஒத்துக்க மாட்டாரு.”

“அதே மாதிரி அண்ணன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைப்பாங்க. சாரி லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருப்பாங்க. ஆனா தம்பி லவ்க்கு அகெய்ன்ஸ்ட்டா இருப்பாங்க. நாட்டுல இப்படி செல்பிஷா தான் நிறைய பேர் இருக்காங்க” என்றாள்.

இளவரசனின் முகமோ வினாடியில் மாறி விட்டது. அது வரை இருந்த சந்தோஷமான மனநிலை போய் விட்டது.

மற்ற யாருக்கும் இளவரசனும் இனியாவும் பேசினால் புரியாவிட்டாலும் சந்துருவிற்கு அவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் மறைமுகமாக பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்திருந்ததால் இனியா தன்னுடைய (சந்துருவுடைய) காதலை பற்றி தான் பேசுகிறாள் என்பது அவனுக்கு தெளிவாகவே தெரிந்தது.

இளவரசனோ இனியாவை முறைத்துக் கொண்டிருக்க சந்துருவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது தான் நியாபகம் வந்தவனை போல் “அம்மா ஒரு முக்கியமான வேலை. மறந்தே போயிட்டேன். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்மா என்று சொல்லிவிட்டு, பொதுவாக சாரி. ஒரு முக்கியமான வேலை. முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்துடறேன்” என்று கூறி விட்டு விரைந்து விட்டான்.

இப்போது இனியாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

இளவரசனோ இனியாவை “நீ தான் குற்றவாளி” என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.  

தொடரும்

En Iniyavale - 11

En Iniyavale - 13

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.