(Reading time: 17 - 34 minutes)

13. என் இனியவளே - பாலா 

En Iniyavale

னியா தான் அன்று நடந்து கொண்டது தவறோ என்று திரும்ப திரும்ப எண்ணிக் கொண்டிருந்தாள். இளவரசனை பழி வாங்குவதாக எண்ணி ஏதோ பேச போய் சந்துரு அப்படி திடீர் என்று எழுந்து சென்றது அவள் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. இளவரசனை வருத்தும் நோக்கத்துடன் பேசினாலும் அவ்விசயம் சந்துருவை பற்றியது என்பதை எவ்வாறு மறந்தேன் என எண்ணி எண்ணி வருந்தினாள்.

சந்துரு என்ன தான் என் கிட்ட நல்லா பேசினாலும் அது அவனோட பெர்சனல் இல்லையா. யார்க்கு தான் தன்னுடைய பெர்சனல் விஷயத்தை மற்றவர் அலசுவது பிடிக்கும். அதுவும் அவ்வளவு பேர் எதிரில். ஐயோ கடவுளே நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்து விட்டேன். அதுவும் சந்துரு சூசைட் வரைக்கும் போனவன். எப்பவும் மத்தவங்க மனச புரிஞ்சிக்கிட்டு பேசற நான் எப்படி அப்படி திடீர்ன்னு தேவை இல்லாம பேசினேன்.

இதுல அவன் (இளவரசன்) வேற அப்படி முறைச்சான். பின்ன சும்மாவே ஆடுவான், இப்ப சலங்கையை வேற கட்டி விட்டா. எல்லாம் என் நேரம். ஹாஸ்பிடல் போயிருந்தாலாச்சும் மைன்ட் இப்படி திரும்ப திரும்ப தேவை இல்லாம குழம்பிக்கிட்டு இருந்திருக்காது.

மொபைலை எடுத்து கார்த்திக்கிற்கு ட்ரை செய்தாள். ஆனால் கால் போகவில்லை. நான்கு நாட்களாக ட்ரை பண்ணியும் அவன் நம்பர்க்கு போகவே மாட்டேங்குது. இது வேற இன்னொரு டென்சன்.

“இனியா என்னம்மா பண்ற, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க”

“என்னம்மா பண்ண சொல்றீங்க.”

“டெய்லி வேலைக்கு போயிட்டே இருக்கியே, புள்ள வீட்டுலையே இருக்க மாட்டேங்கறியேன்னு நான் பார்க்கறேன். நீ என்னன்னா ஒரு நாள் வீட்டுல இருக்கறதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க.”

“நான் என்னம்மா பண்ணேன்.”

“பின்ன என்னடி. ஏன் இப்படி முகத்தை வச்சிக்கிட்டு இதே இடத்துல உட்கார்ந்துகிட்டிருக்க.”

“இல்லம்மா. நீ எனக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டேங்கற. எனக்கு போர் அடிக்காதா. அதான்.”

“போடி. நான் உன்ன எப்பவுமே தான் வேலை வாங்க மாட்டேன். ஆனா நீ எப்பவும் கிட்சன்க்கு வந்து உங்க ஹாஸ்பிடல்ல நடந்தது அப்படி இப்படின்னு எதாச்சும் சொல்ல மாட்ட. இப்ப என்னடி ஆச்சு உனக்கு”

“மா. அப்படின்னா என்ன அர்த்தம்ன்னா சொல்ற மாதிரி ஹாஸ்பிடல்ல ஒண்ணுமே நடக்கலைன்னு அர்த்தம். புரிஞ்சிதா. அது சரிம்மா. இந்த கார்த்திக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. அவன் மொபைல்க்கு கால் பண்ணா போகவே மாட்டேங்குது. நானும் 4 நாளா ட்ரை பண்றேன்ம்மா. அவன் கிட்ட பேசாம கஷ்டமா இருக்கு”

“ஓ. சாரி டா. நீ இதுக்கு தான் பீல் பண்றியா. நான் வேற ஏதேதோ தேவை இல்லாம பேசிட்டேன். இரு. நான் உன் மொபைல் எடுத்துட்டு வரேன். நீ இப்ப கால் பண்ணு. இப்ப போகும் பாரு”

இனியா போன் ட்ரை செய்து விட்டு “இல்லம்மா. இப்பவும் கால் போகலை. நான் நாளைக்கு ஹாஸ்பிடல்ல அவன் அம்மா நம்பர் வாங்கி பேசிக்கறேன்.”

“சரி. நீ இப்படியே இருக்காத. ஜோதி வீட்டுக்காச்சும் போயிட்டு வா.”

“இல்லம்மா. நான் எங்கயும் போகல.”

“ஏய் இரு. நான் ஜோதிக்கு போன் பண்றேன். நீ ஏதும் சொல்லாம போயிட்டு வர”

“அப்படியா சரி நீ போயிட்டு வா.” என்றவாறே திரும்பி வந்த லக்ஷ்மி “சாரி டா. அவளும் எங்கேயோ போறாளாம்.”

“சரிம்மா. பரவால்ல. எனக்கு இப்ப எங்கேயும் போற மூட் இல்லை”

“சரி விடு. நீ போய் எதாச்சும் படம் போய் பாரு. இல்லன்னா எதாச்சும் நாவல் எடுத்து படி. உன் மூட் மாத்து. இப்படி உட்கார்ந்திருக்காத. போ” என்றார்.

“ஹ்ம்ம். சரிம்மா.”

ந்த பக்கம் பாலு “ஹே ஜோதி. நீ எங்க போக போற. இன்னைக்கு இளவரசன் நம்ம வீட்டுக்கு வரார்ன்னு தானே சொன்ன”

“ஆமாம்ங்க. நான் எங்கயும் போகலை. இளவரசன் தான் நம்ம வீட்டுக்கு வரார்”

“அப்புறம் ஏன் அத்தை கிட்ட வெளியே போறேன்னு சொன்ன”

“அவங்க இனியாவை இங்க அனுப்பி வைக்கறேன்னு சொன்னங்க. அதான்”

“இனியா வந்தா உனக்கு என்னடி. அதுக்கு எதுக்கு வெளிய போறேன்னு சொன்ன”

“வெயிட் வெயிட். கூல். உங்களுக்கு வேலை செஞ்சி செஞ்சி இப்பல்லாம் மூளையே வேலை செய்யறதில்லைன்னு நினைக்கறேன்”

“ஏய் என்னடி என்னை ரொம்ப ஓட்டற”

“பின்ன என்னங்க. நம்ம வீட்டுல என்ன நடக்குதுன்னு கூட உங்களுக்கு தெரியலை.”

“அப்படி என்ன எனக்கு தெரியாம நடக்குது”

“நம்ம இனியாக்கு இளவரசன் மேல ஒரு இண்ட்ரெஸ்ட்ன்னு நினைக்கறேன்”

“ஏய் என்னடி சொல்ற”

“அட ஆமாங்க. இனியாக்கு மட்டும் இல்லை. இளவரசனுக்கும் தான்.”

“ஓ ஹோ. விஷயம் அப்படி போகுதா. அது சரி. அத்தை பையன். மாமா பொண்ணு. கரெக்ட் தான்”

“இந்த விஷயம் இவங்க அத்தை பையன் மாமா பொண்ணுன்னு தெரியறதுக்கு முன்னாடி இருந்தே ஓடுது. ஆனா உங்களை மாதிரி மரமண்டைங்களுக்கு தான் தெரியல”

“ஏய் என்ன நீ. திரும்ப திரும்ப எனக்கு மூளை இல்லை, மரமண்டை அப்படி இப்படின்னு சொல்ற. மூளை இல்லாம தான் நான் என் வேலைல கொடி கட்டி பறக்கறேனா”

“ஹ்ம்ம். உங்க வேலைல மட்டும் உங்களுக்கு மூளை இருக்குன்னு வச்சிக்குவோமா”

“அது சரி. உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்ன. சரி எனக்கு இந்த விஷயம் மட்டும் சொல்லு. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கன்னு சொல்ற. அப்புறம் ஏன் இளவரசன் இங்க வரும் போது இனியாவை இங்க வர வேண்டாங்கற. ரெண்டு லவ் பார்ட்ஸை பிரிச்சி வைக்காதாம்மா. அது ரொம்ப பெரிய பாவம்.”

“ஐயோ. உங்களை மக்குன்னு சொன்னா மட்டும் உங்களுக்கு கோவம் வருது. ஆனா திரும்ப திரும்ப இப்படியே பேசறீங்க. நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோங்க. திரும்ப சொல்ல மாட்டேன். ரெண்டு பேருக்கும் இண்ட்ரெஸ்ட் இருக்குன்னு தான் சொன்னேன். அவங்க இன்னும் ஓபனா லவ் சொல்லிக்கலை. அதுவும் இல்லாம அவங்களுக்குள்ள ஏதோ ப்ரோப்லம்ன்னு நினைக்கறேன்.”

“அதை பத்தி இனியா கிட்ட கேட்கறதை விட இளவரசன் கிட்ட கேட்கறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுச்சி. ஏன்னா இனியா அவ்வளவு சீக்கிரம் அவ மனசுல இருக்கறதை சொல்ல மாட்டா. அதான் அவர் கிட்ட பேசி அவங்களுக்கு நம்மளால ஏதும் நல்லது செய்ய முடியும்ன்னா நமக்கு சந்தோஷம் தானே. அதனால தான் இந்த பிளான். ஓகே. வா”

“ம்ம்ம். ஓகே. எப்படியோ நீ என் கூட சேர்ந்ததால என்ன மாதிரியே மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும்ன்னு உனக்கு தோணியிருக்கு. அதனால நீ அதை செய். எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை” என்றான் சிரித்துக் கொண்டே.

“அதானே எனக்கு ஹெல்ப் பண்றேன்னு எல்லாம் வராதீங்க. இதுல ஒண்ணுமே செய்யாத இவரை வேற இவரே புகழ்ந்துக்கறாரு. எல்லாம் என் நேரம்”

“சரி சரி. அதை விடு. உனக்கு என் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லு. நான் கண்டிப்பா செய்யறேன். இனியாக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு மாமாவும் அத்தையும் எவ்வளவு ஆசை படறாங்கன்னு தான் நமக்கு தெரியுமே. சொல்லு. என் ஹெல்ப் வேணுமா”

“இப்போதைக்கு ஏதும் வேண்டாம். முதல்ல அவங்களுக்குள்ள என்ன ப்ரோப்லம்ன்னு நாம தெரிஞ்சிக்கணும். இளவரசன் வரட்டும். நானே அதை கேட்கறேன். அப்புறம் நாம எல்லாம் சேர்ந்து என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்ணலாம்.”

“ம்ம்ம். ஓகே.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.