(Reading time: 17 - 34 minutes)

வீட்டிற்கு வந்த இளவரசனை ஜோதி வரவேற்றாள். “வாங்க வாங்க”

“வீட்டுல யாரும் இல்லையா”

“ஆமாம். அவரு வேலைக்கு போயிருக்காரு. அபி ஸ்கூல் போயிருக்கா”

“ஓ. ஓகே. என்ன எதுக்கு போன் பண்ணி இங்க வர சொன்னீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா”

“ம்ம்ம். அதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தான் எனக்கு தெரியலை.”

“என்னங்க ரொம்ப பெரிய பில்ட்-அப் எல்லாம் தரீங்க. என்ன விஷயம் சொல்லுங்க.”

“ம்ம்ம். ஓகே. நான் நேராவே விசயத்துக்கு வரேன். உங்களுக்கும் இனியாக்கும் என்ன ப்ரோப்லம்.”

சில நிமிடம் இளவரசன் ஏதும் பேசவில்லை.

“நான் உங்க பர்சனல் விசயத்துல தலையிடறேன்னு நினைக்க வேண்டாம். என்னால ஏதும் முடிஞ்சா உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்ற எண்ணத்துல தான் கேட்கறேன். தப்பா இருந்தா சாரி”

“நோ நோ. நான் அப்படி ஏதும் நினைக்கல. இதுல உங்க தங்கச்சியும் தானே இருக்காங்க. சோ அது எப்படி என்னோட தனிப்பட்ட விசயமாகும். ஆனா எனக்கு உங்க கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியலை”

“என்ன இப்படி சொல்றீங்க. ஓகே. இனியாக்கு உங்களை பிடிக்கும். உங்களுக்கும் இனியாவை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும். உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன ப்ரோப்லம்ன்னு இப்ப சொல்லுங்க”

“ம்ம்ம். கரெக்ட் தான். ஆனா நாங்க ரெண்டு பேருமே தெளிவா ஏதும் பேசிக்கலை. நான் என் விருப்பத்தை சொன்ன போதும் அவ கொஞ்சம் யோசிக்கணும்ன்னு சொன்னா. நானும் அப்ப ஏதோ டென்ஸன்ல ஏதேதோ பேசிட்டேன் என்று முதலில் இருந்து தங்களுக்குள் நடந்த ஸ்வேதா உட்பட எல்லாவற்றையும் தெரிவித்தான்.”

ஜோதியும் சிறிது நேரம் ஏதும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தாள்.

“என்ன ஜோதி ஏதும் பேச மாட்றீங்க”

“நீங்க சொன்னதை தான் யோசிக்கறேன். நீங்க சொன்ன மாதிரி ஸ்வேதா சரி இல்லை தான். அது எனக்கும் தெரியும். ஆனா என் வீட்டுக்காரரும் இனியாவும் தான் எப்பவுமே அவளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. சோ உங்க தம்பியை யார் சொன்னாலும் அவ கிட்ட இழந்துடாதீங்க. பட் அதே நேரத்துல இனியாக்கும் உங்களுக்கும் இருக்கற பிரச்சனையையும் சால்வ் பண்ணிடுங்க.”

“ம்ம்ம். நானும் அதுக்கு தான் ட்ரை பண்றேன். பட் ஒரு நாள் நாங்க சரியா பேசினா ஒரு பத்து நாளைக்கு சண்டை தான் வருது. என்ன பண்றதுன்னே தெரியலை”

“இப்படி சொன்னா எப்படிங்க. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணா நம்ம பாமிலில எல்லாரும் சந்தோசப் படுவாங்க”

“ம்ம்ம். அது எனக்கும் தெரியும். நானும் அவளை விட்டுக் கொடுத்தற எல்லாம் மாட்டேன். பட் அது அவ்வளவு சீக்கிரம் முடியும்ன்னு எனக்கு தோணலை. உங்களுக்கே தெரியும்ல உங்க தங்கச்சி ஸ்ட்ரோங் பர்சனாலிட்டி. நானும் தான். ரெண்டு பேருமே நாங்க பிலீவ் பண்ற விசயத்துல ஸ்ட்ராங்கா நிப்போம். சோ அதெல்லாம் சரி ஆகறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்”

“ஓகே. பட் அதை சீக்கிரம் சரி பண்ணுங்க. நம்ம ரெண்டு பாமிலிக்கும் சீக்கிரமே குட் நியூஸ் சொல்லுங்க. மத்தபடி இந்த ஸ்வேதா விசயத்துல உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்ன்னு சொல்லுங்க. நான் கண்டிப்பா செய்யறேன்”

“ம்ம்ம். கண்டிப்பா உங்க ஹெல்ப் தேவைப்படும்ன்னு தான் நினைக்கறேன். கொஞ்ச நாளா எங்களோட பிரச்சனைல இந்த ஸ்வேதா விஷயத்தை பேசாம இருந்தா. இப்ப திரும்ப அதை ஆரம்பிச்சிட்டா. சோ அவ இந்த விஷயத்தை லேசா விடுவான்னு எனக்கு தோணலை. சோ தேவைப்படற நேரத்துல நான் உங்க ஹெல்ப் கேட்பேன். ஓகே. வா”

“நான் மட்டும் இல்லங்க. என் வீட்டுக்காரரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு”

“ஓ. எனக்கு ஒரு படையே ஹெல்ப் பண்ண தயாரா இருக்கீங்க போலருக்கு”

“ம்ம்ம். இன்னும் தேவைபட்டா நம்ம ஆதரவுக்கு இன்னும் பெரிய படையே சேர்த்துக்கலாம்”

“ஹாஹஹா ஓகே ஓகே. பட் ரியல்லி தான்க் யூ. எனக்கு இப்ப ஏதோ ரிலீபா இருக்கு.”

மொபைலை பார்த்த இளவரசனுக்கு ஆச்சரியம் தாங்க இயலவில்லை. ஏனென்றால் இனியாவின் கால் அதில் வந்துக் கொண்டிருந்தது.

“ஹலோ”

“ஹலோ நான் இனியா பேசறேன்” என்று விறைப்பாக பேசினாள்.

மேடம்க்கு இன்னும் கோவம் குறையலையோ. போன் பண்ணிட்டு கோவம் மட்டும் போகலை போல.

“தெரியுது சொல்லு.”

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். எங்க வந்து உங்களை மீட் பண்றது”

“நான் வேணும்ன்னா உங்க வீட்டுக்கு வரட்டுமா” வேண்டுமென்றே தான் கேட்டான்.

“என்ன பண்றது. எல்லாம் தலை எழுத்து என்று இனியா மொனமொனப்பது இளவரசனுக்கு நன்றாகவே கேட்டது”

“எதாச்சும் சொன்னியா இனியா” என்றான் சாது போல.

“ஒண்ணும் சொல்லலை. நான் உங்க கிட்ட பேசணும்ன்னு சொன்னேன். வீட்டுக்கு வந்தா எப்படி பேசறது”

“ஓ அப்படியா. ஓகே. ஏதும் ரெஸ்டாரெண்ட் போகலாமா”

“இல்லை. எனக்கு கொஞ்சம் ப்ரீயா பேசணும். ரெஸ்டாரெண்ட் எல்லாம் சரிப்படாது.”

“அப்படின்னா ஓகே. அன்னைக்கு புரசைவாக்கம்ல இருக்கற ஷோரூம்க்கு வந்தல்ல, அங்க வந்துடு. அங்க யாரோட டிஸ்டர்பன்சும் இருக்காது.”

“ஓகே. நீங்க எத்தனை மணிக்கு ப்ரீன்னு சொன்னா அப்ப வரேன்”

“உன் இஷ்டம். நீ எப்ப வேணும்னாலும் வா. எனக்கு ஒரு ஒன் அவர்க்கு  முன்னாடி சொல்லிட்டா போதும்”

“நான் ஒரு 4’o க்ளாக் வரட்டுமா”

“ம்ம்ம். ஓகே.”

எப்ப நாலு மணி ஆகும்ன்னே தெரியலையே. இன்னைக்கு என்ன காலைல இருந்து எனக்கு நல்லதாவே நடக்குது. காலைல வான்டடா ஹெல்ப் வருது. இவளை எப்படி சமாளிக்க போறேன்னு நான் யோசிச்சிட்டு இருந்தா, இப்ப என்னடான்னா அவளே என்ன பார்க்க வரேன்னு சொல்றா. ஓ காட். தான்க் யூ வெரி மச்.

சொன்ன பத்து நிமிடத்திற்கு முன்பே இனியா வந்து சேர்ந்து விட்டாள்.

இருவருமே எப்படி பேசுவது என்பது போல் தயக்கத்துடன் பேசாமல் இருந்தார்கள்.

இளவரசனே பேச ஆரம்பித்தான்.

“போனது எல்லாம் போகட்டும் இனியா. போனதை பத்தி பேச வேண்டாம். நம்மளை பத்தி பேசுவோம். அன்னைக்கு நான் டென்ஸன் ஆனது தப்பு தான். நான் அன்னைக்கு பேசனதை நினைச்சி ரொம்ப வருத்தப் பட்டேன். வெறும் இப்படி சாரின்னு சொல்லி நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு என்னால உனக்கு சொல்லி புரிய வைக்க முடியல. ரியல்லி ஐ’யம் சாரி”

“அதப்பத்தி பேச வேண்டாம்ன்னு நினைக்கறேன்”

“ஓகே. நீ அன்னைக்கு யோசிக்கணும்ன்னு சொன்ன. இத்தனை நாள்ள யோசிச்சி இருப்ப இல்ல. நவ் டெல் மீ இனியா. நீ என்னை வேண்டாம்ன்னு எல்லாம் சொல்லிடுவியா என்ன. ஐ நோ. உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு கண்டிப்பா தெரியும். அதை உன் வாயால கேட்கணும்ன்னு ஆசைப் படறேன்.”

“நம்ம கல்யாணம் பண்ணிகிட்டா நம்ம பாமிலியும் சந்தோசப் படுவாங்க. என்ன சொல்ற இனியா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.