(Reading time: 17 - 34 minutes)

ற்கனவே கொதிப்புடன் வந்த இனியா இந்த பேச்சைக் கேட்டு இன்னும் டென்சன் ஆகி விட்டாள்.

“எப்படி நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க. உங்களை மாதிரி ஒரு செல்பிஷை நான் பார்த்ததே இல்லை. அதெப்படி நீங்க எப்பவும் உங்களை பத்தி மட்டும் பேசறீங்க. முதல்ல உங்களை நான் நீங்க ஒரு நல்ல அண்ணன்னு நினைச்சேன். பட் இப்ப தான் தெரிஞ்சிது. நான் உங்களை எவ்வளவு தப்பா ஜட்ஜ் பண்ணி இருக்கேன்னு. ஆமா எனக்கு உங்க மேல ஒரு இண்ட்ரெஸ்ட் இருந்துச்சி. பட் நாட் நவ்.”

“நான் இப்ப ஸ்வேதாவை பத்தியும் சந்துருவை பத்தியும் பேச வந்திருக்கேன். ஒரு அண்ணனா உங்களுக்கு சந்துரு மேல அக்கறை இல்லாம இருக்கலாம். பட் எனக்கு இருக்கு. இத்தனை நாளா நான் ஏன் பேசாம இருந்தேன்னா, இதுக்கு முன்னாடி எனக்கு எந்த உரிமையும் இல்லை. இப்ப எனக்கு சந்துரு அத்தை பையன். சோ இப்ப எனக்கு இதை பத்தி பேச உரிமை இருக்கு. காட் இட்.”

“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க. இப்பவும் உங்க லவ் பத்தி மட்டும் பேசறீங்க. சந்துரு மேல உங்களுக்கு என்ன கோவம். அவர் மேல நீங்க என்ன கோவம் காட்டனாலும் அவர் உங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காரு. பட் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க. ஸ்வேதா எப்படி அழுகறா தெரியுமா. கடைசியில உங்களுக்கு இந்த பணம் இதெல்லாம் தான் பெரிசா போச்சா.”

இனியா பேசி முடிக்கும் முன்பு இளவரசன் இனியாவை பிடித்து உலுக்க ஆரம்பித்து விட்டான். இனியாவின் பேச்சு அப்படியே நின்று விட்டது.

இனியா ஏன் இப்படி பேசுகிறாள் என்று இளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவள் கடைசியில் பேசியதிலிருந்து ஸ்வேதா அவளை சந்தித்து ஏதோ கூறி இருக்கிறாள் என்று தெரிந்தது. ஆனால் அவள் ஏதோ சொன்னால் இவளும் அதை நம்பிக் கொண்டு வந்து இங்கே சண்டை போடுகிறாளே என்று தான் இவனுக்கு ஆத்திரமாக வந்தது. அதுவும் அவனை என்னவெல்லாம் பேசிவிட்டாள்.

இனியாவின் தோலை பிடித்து உலுக்கியவாறே “வில் யூ ஸ்டாப் இட்” என்று கத்தினான்.

“நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க. நீ முழுசா மனசுல என்ன நினைச்சிருக்கன்னு எனக்கு தெரியலை. பட் இதுக்கு எல்லாம் அந்த ஸ்வேதா தான் ரீசன்னு எனக்கு நல்லா தெரியுது. பட் நீ அவ பேசறதை வச்சி என்னென்ன எல்லாம் சொல்ற. ஐ டோன்ட் பிலீவ் திஸ். என்ன பத்தி இவ்வளவு கேவலமான எண்ணம் தான் நீ மனசுல வச்சிருக்கியா”

இனியா ஏதோ பேச முயற்சித்தாள்.

“வேணாம். நீ ஏதும் பேசாத. இவ்வளவு நேரம் நீ பேசறதை நான் கேட்டேன் இல்ல. இப்ப நீ பேசாத. எத்தனை நாள் நீ பேசறதை கேட்க மாட்டோமான்னு ஏங்கி இருக்கேன் தெரியுமா. உன் மெசேஜ் வருமான்னு மொபைலை அப்படி பார்த்துட்டு இருப்பேன். சே உன்னை போயா நான் அப்படி லவ் பண்ணேன்.”

“இப்ப உனக்கு என் மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லை. அப்படி தானே. தென் ஒய் யு கேம் ஹியர். உன் அத்தை பையன் மேல உனக்கு உரிமை இருக்குன்னா அதை போய் உன் அத்தைக் கிட்ட பேசறது தானே. என் கிட்ட ஏன் வந்து பேசற. என் அம்மா இல்லை சந்துரு கிட்ட போய் பேச வேண்டியது தானே. நீ என்ன நினைக்கற. நான் என் தம்பிக்கு தப்பான லைப் அமைச்சிக் குடுத்துடுவேனா. ஹௌ டேர் யூ. நீ எப்படி என் கிட்ட வந்து இப்படி பேசற. உனக்கும் எனக்கும் தான் ஒன்னும் இல்லையே. அப்புறம் ஏன் என் கிட்ட வந்து இதை பத்தி பேசற. இதுல இருந்தே தெரியலை உனக்கு என் மேல இருக்கிற இண்டரெஸ்ட். முட்டாள்”

“எனக்கு ஒன்னும் உங்க மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லை. சந்துரு ஸ்வேதா கல்யாணத்துக்கு தடையா நிக்கறது நீங்க தான். அதனால தான் உங்க கிட்ட வந்து பேசறேன்”

“சோ உனக்கு என் மேல எந்த விருப்பமும் இல்லன்னு தானே சொல்ல வர” என்று சொல்லி விட்டு இனியாவை திடீரென்று கட்டியணைத்து விட்டான்.

இனியா அவன் பிடியிலிருந்து வர எவ்வளவோ போராடியும் அவளால் அவன் பிடியிலிருந்து தப்ப இயலவில்லை.

இளவரசன் இனியாவின் கன்னம் நெற்றி என்று மாறி மாறி முத்தமிட்டான். பின்பு அவளை அப்படியே அணைத்தவாறே இருந்தான். இனியாவும் கடைசியில் போராடுவதை நிறுத்தி விட்டாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு இனியாவை விடுவித்த இளவரசன் “இப்ப சொல்லு என் மேல எந்த விருப்பமும் இல்லைன்னு” என்றான்.

இனியா அடி வாங்கியதை போல் நிமிர்ந்து பார்த்தாள்.

“இந்த மாதிரி நீ லூஸ் மாதிரி ஏதும் பேசக் கூடாதுன்னு தான் நான் முதல்லையே வேற எதுவும் பேச வேண்டாம்ன்னு சொன்னேன்”

(ஆனால் அதை கேட்டதுக்கு அப்புறம் தான் இனியாவிற்கு கோபமே வந்தது என்று எண்ணிக் கொண்டாள், வெளியே சொல்லவில்லை)

“என் தம்பிக்கு நான் எப்பவும் கெடுதல் நினைக்க மாட்டேன். நான் ஒன்னும் லவ்க்கு எதிரி இல்லை. என் அப்பா அம்மா லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க. அவங்க வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து வளர்ந்தவன் நான். அப்புறம் எப்படி நான் லவ்க்கு அகெய்ன்ஸ்ட்டா இருப்பேன். அதுக்கும் மேல நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கும் தெரியும்ல, அப்படி இருந்தும் நான் என் தம்பி லவ் எதிர்ப்பேனா. கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணி பாரு.”

“நான் ஏன் இதெல்லாம் உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன். உனக்கு தான் என் மேல எந்த இண்டரெஸ்ட்டும் இல்லையே. கெட் லாஸ்ட். என் கண்ணு முன்னாடி நிக்காத” என்று கூறி விட்டு இளவரசன் வேகமாக வெளியே சென்று விட்டான்.

இனியாவிற்கு மூச்சே நின்று விடும் போல் ஆகி விட்டது.  தான் எண்ணி வந்தது என்ன. ஆனால் இங்கு நடந்தது என்ன. கடவுளே.

எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

ரண்டு நாட்கள் எப்படியோ கழிந்தன. இனியாவிற்கு எதிலுமே கவனம் செல்லவில்லை. எல்லாமே ஏதோ கடமைக்கு செய்வது போல் இருந்தது.

“இனியா போன் அடிக்குது பாரும்மா. போனை எடும்மா”

இனியாவிற்கு அவள் தாயின் குரல் காதிலேயே விழவில்லை.

பொறுத்து பார்த்து அவள் தாயே வந்து விட்டார். அதற்குள் போன் ரிங் நின்று விட்டது.

“இனியா. என்ன பண்ற” என்று சத்தமாக தாயின் குரலை கேட்ட இனியா தூக்கி போட்டவாறு விழித்தாள்.

“என்னம்மா”

“போன் வரர்து கூட தெரியாம அப்படி என்ன இனியா பண்ற”

“இல்லம்மா ஏதோ கவனுத்துல இருந்துட்டேன்”

“வரவர நீ சரி இல்லை. நான் அவ்வளவு தான் சொல்லுவேன். அதுவும் இந்த ரெண்டு நாளா சுத்த மோசம். என்ன தான் ஆச்சு டி உனக்கு”

“மா ஒன்னும் இல்லைன்னு சொல்றேன் இல்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே திரும்ப போன் அடித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.