(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 75 - பிந்து வினோத்

75. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

செல்ஃபோனின் சிணுங்கலான ஓசையில் தூக்கத்தில் இருந்து கண் விழித்த விவேக், அழைப்பது பாரதி என்பதை ஃபோனின் டிஸ்ப்ளே உணர்த்தவும், அழைப்பை ஏற்காமல், ஃபோனில் தெரிந்த அவளின் பெயரை பார்த்தபடி இருந்தான்! சில நொடிகளில் செல்ஃபோன் அமைதியாகவும், கண்களை மூடிக் கொண்டு பாரதியை முதல் நாள் பார்த்தது தொடங்கி அவர்களின் ஒவ்வொரு சந்திப்பையும் மனதினுள் அசைப் போட்டான்... பின் மனமே இல்லாமல் எழுந்து கிளம்பினான்!

  

சொன்ன நேரத்திற்கு லாவண்யாவின் வீட்டை அடைந்தவன், அவளின் வீட்டினுள் செல்லாமல் அவளுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு காத்திருந்தான். அவனை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல், மறுநிமிடமே வீட்டினில் இருந்து வந்தாள் லாவண்யா. காரில் அமர்ந்தவள், அவர்கள் போக வேண்டிய மருத்துவமனையின் முகவரியை விவேக்கிடம் சொன்னாள். விவேக் தலையை மட்டும் அசைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்!

  

பழைய ரிப்போர்ட் எங்கே விவேக், நான் அதை பார்க்கலாமா?”

  

லாவண்யாவின் கேள்விக்கு மீண்டும் தலையை அசைத்தவன், லாவண்யா கேள்வியாக பார்க்கவும்,

   

, சாரி லாவி... ரிப்போர்ட் பின்னாடி சீட்டுல இருக்க அந்த ப்ளூ கவர்ல இருக்கு...” என்றான்!

  

பின் சீட்டை பார்வையிட்ட லாவண்யா, அங்கே இருந்த நீல நிற கவரை உடனே கண்டுக் கொண்டாள்! எட்டி, அந்தக் கவரை எடுத்தவள், அதன் உள்ளே இருந்த ஃபைலை கையில் எடுத்து, திறந்துப் பார்த்தாள்.

  

அதில் என்ன பார்த்தாளோ அவளின் விழிகள் விரிந்தது! நம்ப முடியாமல் இரண்டு பக்கங்களை புரட்டி விட்டு மீண்டும் முதல் பக்கத்திற்கு வந்தவள், அருகே இருந்த நண்பனை பார்த்து,

  

நீ என்ன லூசாடா விவேக்!” என்றாள்.

  

🌼🌸❀✿🌷

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.