(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - திருமதி அகத்தியன் - 09 - சசிரேகா

   

கத்தியனுக்கு அவனது தாத்தா சங்கமேஸ்வரன் வேப்பிலை அடிக்காத குறையாக அவனை நன்றாகவே பேசி பேசி குழப்பி வைத்தார்

  

”அகத்தியா இதுக்கு எல்லாமே அந்த நாச்சியாதான் காரணம், நீ கார்மெண்ட்ஸ்க்கு போன பின்னாடி அவள்தான் உன் அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தா, அவள் அப்படி என்ன பேசினாள்ன்னு தெரியலை, அதுக்கு அப்புறம்தான் உன் அப்பா தற்கொலை செய்துக்கிட்டான். எனக்கு அவள்மேலதான் சந்தேகமா இருக்கு அகத்தியா, அவளை விசாரிச்சிப் பாரு, அவள் ஏதாவது உளறினா கண்டிப்பா அவள்தான் உன் அப்பனோட மரணத்துக்கு காரணம், அவளை இனி இந்த வீட்ல தங்க வைச்சா இங்க இருக்கறவங்க உயிருக்கு ஆபத்து, எவ்ளோ சீக்கிரம் நீ அவளை இங்கிருந்து வெளியே அனுப்பறியோ அவ்ளோ நல்லது” என சொல்ல அகத்தியனுக்கு குழப்பமாக இருந்தது, தாத்தா சொல்வதில் ஏதோ உண்மையிருப்பதாக உணர்ந்தான், அவனுக்கு நாச்சியா மீது சந்தேகம் எழுந்தது அவளை தேடிச் செல்லும் வழியில் அங்கமுத்து எதிர்பட்டார்

  

”அகத்தியா எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா, நான் என் பொண்டாட்டி பொண்ணை கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு போயிடறேன்” என பதட்டமாகப் பேசினார்

  

”என்னாச்சி மாமா இப்ப எதுக்காக வீட்டை விட்டு போகனும்னு பேசறீங்க, எதுக்காக பயப்படறீங்க“

  

”பயப்படாம எப்படி இருக்கச் சொல்ற, கருங்கல் போல உங்கப்பா திடமா இந்த வீட்ல உலாத்திக்கிட்டு இருந்தாரு, என்னிக்கு அந்த நாச்சியா இந்த வீட்டுக்கு வந்தாளோ அப்பவே உன் அப்பா நிலைகுலைஞ்சிப் போனாரு,. கடைசியா உன் அப்பா ரூமுக்கு நாச்சியாதான் போனா, அவள் போய் 1 மணி நேரம் ஆயிருக்கும் அதுக்கு அப்புறம் அவள் வெளிய வந்தப்ப நான் அவளை பார்த்தேன், அவள் முகத்தில எதையோ சாதிச்ச திருப்தி தெரிஞ்சது,  அப்படி என்னத்த பேசினாளோ தெரியலை உன் அப்பா அடுத்த நாள் விடிகாலையிலேயே இறந்துட்டாரு, அதுவும் எப்படி தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கிட்டாரு, தற்கொலை செய்துக்கற ஆளா அவரு எவ்ளோ திடமா இருப்பாரு, அவரை தற்கொலைக்கு தூண்டிவிட்டிருக்கா அந்த நாச்சியா“

  

”சே சே இருக்காது மாமா, அப்பா எதை மனசுல வைச்சிக்கிட்டு இப்படி செய்தார்ன்னு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.