(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”என்னை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும், எனக்கு ஒண்ணு வேணும்ங்கறதுக்காக, கூட இருந்த கூட்டாளிகளையே கொன்னவன், நீங்க எல்லாம் எனக்கு தூசு, நாச்சியாவை நம்பி இங்க வந்து சாகப்போறீங்களா இல்லை அகத்தியன் உங்க மகன்னு உரிமை கொண்டாடப் போறீங்களா இரண்டுமே நடக்காது நடக்கவும் விடமாட்டேன் புரியுதா” என மிரட்ட அவர்களோ பயந்து நடுங்க அந்நேரம் புயலென உள்ளே வந்த நாச்சியாவை கண்டு சங்கமேஸ்வரன் அதிர்ந்தார். வந்தவள் தனது பெற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு சங்கமேஸ்வரன் முன் மிடுக்காக நின்றாள்

  

”எதுக்கு இப்படி அநியாயமா நடந்துக்கறீங்க, அவங்க உங்க ஆளுங்கதானே, உங்க சொந்தம்தானே அவங்களை போய் இப்படி பயமுறுத்தலாமா”

  

“ப்ச் உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலை, இங்கிருந்து போயிடு“

  

”போகவா நான் வந்தேன் அது இருக்கட்டும் உங்க பையன் என்ன தப்பு செய்துட்டான்னு பாவம் அவரை கொன்னுட்டீங்க“

  

”எது நானா சே சே நான் அவனை கொல்லலை, அவனே தற்கொலை செய்துகிட்டான்

  

”அதான் எப்படி நீங்க என்ன சொன்னீங்க, அதைகேட்டு அவர் அந்த முடிவு எடுத்திருக்காரு”

  

”நான் எதுவும் சொல்லலை நீதான் என் புள்ளைகிட்ட ஏதோ பேசி பயமுறுத்தியிருக்க, அதனாலதான் அவன் தற்கொலை செய்துக்கிட்டான்“

  

“ஓஹோ இந்த வதந்தியை பரப்பினது நீங்கதானா இதுல உங்களுக்கு என்ன அவ்ளோ சந்தோஷம், எப்ப பாரு நீங்க செய்ற தப்புக்களுக்கு அடுத்தவங்கதான் பலியாகனுமா, உண்மையை ஒத்துக்குங்க உங்க புள்ளையை நீங்கதானே கொன்னீங்க”

  

”சத்தியமா இல்லை நான் கொல்லலை”

  

“அப்ப அந்த உயில் பத்திரம் எங்க இருக்கு”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.