”அவங்களுக்கு ஊருக்கு முன்னாடியே தண்டனை தருவேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட சங்கமேஸ்வரனுக்கு குலையே நடுங்கியது.
அகத்தியன் வீரமாக பேசிவிட்டு வந்தாலும் உயில் பத்திரம் எங்கு இருக்கும் என பலமாக யோசித்தபடியே தன் அறைக்கு வர அங்கு நாச்சியா அவனுக்காகவே காத்திருந்தாள், அகத்தியனை கண்டதும் அவனிடம் வந்தாள்
”என்னாச்சிங்க உங்க தாத்தா ஏதாவது விசயம் சொன்னாரா”
”எதுவும் இல்லை, மறுபடியும் உங்கப்பா அம்மாவை மிரட்டக் கூடாதுன்னு அதட்டிட்டு வந்துட்டேன், அவரும் சரின்னு சொன்னாரு”
”அவ்ளோதானா“
”ஆமாம்”
”ஆமா இது என்ன கையில பேப்பர் கொடுங்க பார்க்கிறேன்”
”இது என்னோட சொந்த விசயம் நீ தலையிடாத” என சொல்ல அவளோ அமைதியாக ஒதுங்கி நின்றாள். அவனோ
”தாத்தா சொல்றதை வைச்சிப் பார்த்தா உயில்ன்னு ஒண்ணு இருக்கா இல்லையான்னு தெரியலை, இல்லாத உயிலை எதுக்காக மாமா தேடனும், வாய்ப்பில்லையே மாமாவுக்கு ஏதோ ஒரு உண்மை தெரிஞ்சிருக்கு, கண்டிப்பா உயில் பத்திரம் இருக்கும், என் அப்பா மரணத்துக்கு என்ன காரணமும்னு நான் நிச்சயம் கண்டுபிடிப்பேன்” என அவனுக்கு அவனாக பேசி வைக்க அதைக்கேட்ட நாச்சியாவோ
”இந்த வீட்டு ரகசியத்தை தெரிஞ்சவங்க 3 பேர்தான் இருக்காங்க” என சொல்ல அவனோ அவளை வியப்புடன் பார்த்து