(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

காரணமே வேற நீங்க பாட்டுக்கு நாச்சியாவை கொல்லப் பார்க்கறீங்க, நான் வராம இருந்திருந்தா என்னாயிருக்கும் இப்படியா செய்வீங்க, உயிர்பயத்தில யாரை வேணும்னாலும் சாகடிப்பீங்களா” என கேட்க அதற்கு தாத்தா விழிக்க நாச்சியா தன்னை சுதாரித்துக் கொண்டு

  

”அது உயிர் பயம் இல்லை உயில் பயம்” என சொல்ல தாத்தா அவளை முறைக்க அகத்தியனோ

  

”நாச்சியா அமைதியா இரு கண்டபடி பேசி வைக்காத இங்கிருந்து போ“

  

”என்னை விரட்டறீங்களா நான் வீட்டைவிட்டு போகமாட்டேன்“

  

”அய்யோ உன் ரூமுக்கு போன்னு சொன்னேன், நான் தாத்தாகிட்ட பேசனும் கிளம்பு” என அதட்ட அதில் நாச்சியாவும் அந்த அறையை விட்டு வெளியேறினாள், அவள் சென்றதும் அகத்தியன் தாத்தாவிடம் அந்த தற்கொலை கடிதத்தை நீட்ட அதை வாங்கிப் படித்துப் பார்த்த தாத்தாவிற்கு முகம் கருத்துவிட்டது.

  

”இதுக்கு என்ன தாத்தா அர்த்தம் அந்த உயில பத்திரம் எங்க”

  

”அப்படி ஒரு பத்திரமே இல்லை அகத்தியா”

  

”விளையாடாதீங்க தாத்தா எந்த ஒரு மனுஷனும் தான் சாகறதுக்கு முன்னாடி உண்மையைதான் சொல்வான், அப்பா அந்த உயில் பத்திரத்தைப் பத்தி சொல்லியிருக்காரு, அது என்னன்னு தெரிஞ்சாதான் அவரோட சாவுக்கு என்ன காரணம்னு கண்டுபிடிக்க முடியும் தாத்தா, அந்த உயில் பத்திரத்தை கொடுங்க”

  

”இல்லை என்கிட்ட இல்லை”

  

”இல்லைன்னா எப்படி”

  

”அப்படி ஒண்ணு இருந்தாதானே நான் தரமுடியும், அப்படி எதுவும் இல்லை அகத்தியா என்னை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.