(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”பொதுவா தற்கொலை செய்துக்கறவங்க என் சாவுக்கு யாரும் காரணமில்லை இல்லைன்னா என் சாவுக்கு இவங்கதான் காரணம்னு எழுதி வைச்சிருப்பாங்க அதை நான் பல சினிமால பார்த்திருக்கேன், அப்படி ஏதாவது உங்கப்பா எழுதி வைச்சிருந்தா அப்பவாச்சும் உங்களோட சந்தேகம் தீரும்ல அதுக்குச் சொன்னேன்”

  

”சரி நான் போய் பார்க்கிறேன்”

  

”நானும் வரேன்“

  

”வேணாம்“

  

“இவ்ளோ சந்தேகம் ஆகாதுங்க, சரி நான் வரலை நான் என் அப்பா அம்மாகிட்ட இருக்கேன், ஒருவேளை உங்களுக்கு ஏதாவது தடயம் கிடைச்சா எனக்குச் சொல்லனும்”

  

”கண்டிப்பா சொல்றேன்” என சொல்லிய அகத்தியன் அவசர அவசரமாக தன் தந்தையின் அறைக்குச் சென்றான். அவனது வேகத்தைக் கண்ட நாச்சியா

  

”அய்யோ பாவம் வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைக்கற அளவுக்கு முட்டாளா இவனை வளர்த்து வைச்சிருக்காங்களே, ம் சரி போய் தேடட்டும், எப்படியோ பொன்முடி செத்துட்டான், இனி சங்கமேஸ்வரன்தான் பாக்கி, எங்க அவரு காலையில இருந்து தேடறேன், கண்லயே படலையே அவரையும் ஒரு வழி ஆக்கினாதான் நமக்கு நல்லது, சங்கமேஸ்வரா எங்கய்யா போன இதோ வரேன்” என அவரை தேடிக் கொண்டுச் சென்றாள் நாச்சியா.

  

அகத்தியனோ தன் தந்தையின் அறையை சல்லடை போட்டு தேடினான். எங்கும் ஒரு சின்ன தடயம் கூட கிடைக்கவில்லை, வெறுப்பானான் அந்தச் சமயம் சுவற்றில் எப்போதும் இருக்கும் அவரின் போட்டோ தரையில் இருப்பதைக் கண்டு வியந்தான்

  

அதனிடம் சென்று போட்டோவை எடுக்க அதன் கீழ் ஒரு காகிதம் இருந்தது, உடனே அந்த காகிதத்தை எடுத்து அவசர அவசரமாக பிரித்துப் பார்த்தான். அது பொன்முடி எழுதிய கடிதம் தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்தார் அதில்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.