தெரியலை அதுக்கும் நாச்சியாவுக்கும் சம்பந்தமில்லை“
”அட நீ ஒண்ணு அவளை பார்க்கறப்பலாம் உன் அப்பா பயந்து மிரண்டதை நீயே பார்த்திருக்கல்ல, அவரை டாக்டர்கிட்ட கூட கூட்டிட்டுப் போனியே மறந்துட்டியா” என கேட்க அகத்தியனுக்கும் ஞாபகம் வந்தது, ஒவ்வொரு முறை நாச்சியாவை காணும் போதெல்லாம் தன் தந்தை பேயறந்ததைப் போல இருந்தார், பயந்தார், நடுங்கினார், நாச்சியாவும் அவரை பார்க்கும் போதெல்லாம் மிரட்டும் பார்வையில் இளக்காரமாகப் பேசினாள், அவ்வளவும் அவனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது
”அகத்தியா போதும், நாங்க கிளம்பறோம்”
”இருங்க மாமா நான் போய் நாச்சியா கிட்ட பேசிட்டு வரேன்” என சொல்லிவிட்டுச் செல்ல அங்கமுத்துவோ நக்கலாக சிரித்துவிட்டு
”எப்படியோ அந்த நாச்சியா இங்கிருந்து ஒழிஞ்சாள்னா அதுவே போதும், நானாவது இந்த வீட்டை விட்டு போறதாவது, நான் செத்து பிணமானாதான் இங்கிருந்து என் உடம்பு போகும், இந்த ஆடம்பர வாழ்க்கையை விட்டு நான் போவேனா, முட்டாள் அகத்தியா யார் என்ன சொன்னாலும் நம்பறானே ஆனாலும் நாச்சியா மேல சந்தேகமாதான் இருக்கு, அவளை பார்க்கறப்பலாம் எதுக்காக பொன்முடி பயந்து நடுங்கினான், என் மாமனாரும் அவளைப் பார்த்து பயந்தார், என்னவோ அவங்களுக்குள்ள ரகசியம் ஓடுது, அதைப்பத்தி தெரிஞ்சிக்கலாமா வேணாம், பொன்முடிக்கு அடுத்து நாம போய் சேர்ந்துடப் போறோம், நாச்சியாவே என் மாமனாரை பேசி பேசியே சாகடிச்சிடுவா, அவள்கிட்ட நாம பத்திரமா இருக்கலாம், இப்போதைக்கு நமக்கு தேவை உயில்தான் அந்த உயில்ல என்ன எழுதியிருக்குன்னு தெரிஞ்சிக்கனும், அதை எங்கதான் வைச்சிருப்பாங்கன்னு தெரியலையே” என மனதுள் புலம்பிக் கொண்டே உயிலை தேடிச் சென்றார் அங்கமுத்து.
அகத்தியனோ தன் அறைக்கு வந்தான், அங்கு நாச்சியா கலக்கமாக அமர்ந்திருந்தாள்.
”நாச்சியா” என அழைக்க அவள் கவனிக்கவில்லை, பொன்முடியின் மரணத்தை பற்றியே தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். நேராக அவளிடம் வந்து அவளின் தோளை உலுக்கி