(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”நாச்சியா” என அழைக்க நாச்சியா அவனைப் பார்த்து அதிர்ந்து

  

”என்னங்க” என பதற

  

”எதுக்கு இப்படி பதட்டப்படற என்னாச்சி“

  

”ஒண்ணுமில்லைங்க”

  

”எந்த கவனத்தில இருந்த, நான் கூப்பிட்டா கூட நீ கவனிக்கலையே என்னாச்சிம்மா உனக்கு“

  

“ஒண்ணுமில்லைங்க உங்கப்பாவோட மரணத்தை நினைச்சா சந்தேகமா இருக்குங்க“

  

”சந்தேகமா என்ன சந்தேகம்“

  

”அவரோட இறப்பு இயற்கையானது இல்லைங்க தற்கொலை செய்துக்கிட்டாரு, போஸ்மார்ட்டம் செய்த டாக்டர்கிட்ட நான் பேசினேன், யாராவது அவரை தற்கொலை செய்ய வைச்சாங்களான்னு ஆனா இல்லயாம் அவரே தன் சொந்த விருப்பத்தோட தற்கொலை செய்துக்கிட்டாராம்ங்க, இதுலதான் எனக்கு சந்தேகமே”

  

”இதுல என்ன சந்தேகம்“

  

”நல்லாவே இருந்த மனுஷன் எப்படி திடுதிப்புன்னு தற்கொலை செய்துக்குவாரு, உங்களுக்கு ஆச்சர்யமா இல்லை”

  

”ஆமாம் ஆச்சர்யமாவும் இருக்கு அதே சமயம் உன் மேல சந்தேகமாவும் இருக்கு” என அகத்தியன் நேரடியாகச் சொல்ல நாச்சியா அதிர்ந்தாள்

  

”என்னது நானா, நான் என்ன செய்தேன் எதுக்கு என் மேல சந்தேகப்படறீங்க“

  

”பின்ன அவர்கிட்ட கடைசியா பேசப் போனது நீதான்னு வீட்ல இருக்கற எல்லாரும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.