நம்பு” என சொல்ல அவன் நம்ப மறுத்தான்
”தேவையில்லாம நாச்சியா மேல பழி போட்டீங்க, உங்க பேச்சைக் கேட்டு நான் அவள் மேல சந்தேகப்பட்டேன், கடைசியில பார்த்தா அப்பா இப்படியொரு லெட்டரை எழுதி வைச்சிட்டு தற்கொலை செய்துக்கிட்டாரு, இந்த லெட்டர்ல ஒரு இடத்தில கூட நாச்சியா பேரை குறிப்பிடலை அப்படின்னா அவர் இறப்புக்கு நாச்சியா காரணம் இல்லை வேற ஏதோ ஒரு காரணம் இருக்கு, அந்தக் காரணம் அந்த உயில் பத்திரத்தில புதைஞ்சிருக்கு அதை நான் கண்டுபிடிக்கனும்”
”அப்படி எந்த உயிலும் இல்லை அகத்தியா”
”இல்லாமயா அங்கமுத்து மாமா உங்க அறையில அந்த உயில் பத்திரத்தை ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருந்தாரு” என சொல்ல அவருக்கு திக்கென்றது உடனே கோபம் எழுந்தது
”எவ்ளோ தைரியம் இருந்தா அவன் என் அறைக்கு வந்திருப்பான்”
”அதை விடுங்க தாத்தா மாமாவுக்கு தெரிஞ்ச உயில் ரகசியம் உங்களுக்கு தெரியலைன்னு சொல்றப்பதான் எனக்கு உங்க மேல சந்தேகம் வருது”
”என் மேல சந்தேப்படாத அகத்தியா”
”அப்போ உயில் பத்திரத்தை தரமாட்டீங்க”
”என்கிட்ட இல்லை அது பொய், அப்படி ஒரு பத்திரமும் இல்லை”
”சரி நானே தேடிக்கிறேன் அது கிடைச்சதும் அதுல இருக்கற உண்மையை வைச்சிதான் என் அப்பா ஏன் இறந்தாரு, எதுக்காக இறந்தாரு, அவரோட மரணத்துக்கு யார் காரணம்னு நான் கண்டுபிடிக்க முடியும்”
”கண்டுபிடிச்சி என்ன செய்யப் போற“