“கடைக்கு போக கிளம்பினோம்... பாரதியையும் அழைச்சிட்டுப் போய் அவளுக்கு பிடிச்சதா ஏதாவது வாங்கி தரலாம்னு தோணிச்சு. அது தான் சொல்லாமல் வந்துட்டோம்... உங்களுக்கு தொல்லை இல்லையே?” என்று விளக்கமளித்தாள் கற்பகம்.
“தொல்லை எல்லாம் என்னங்க? நீங்க எப்போ வேணா வரலாம்... இது உங்க வீடு மாதிரி...” என்றாள் கமலா!
“அப்படி ஒரு நம்பிக்கையில் தான் சொல்லாமலே திடீர்ன்னு வந்தோம்... ஆமாம், பாரதி எங்கே? வெளியே எங்கேயாவது போய் இருக்காளா?”
“இல்லை, விவேக் வந்திருக்கார், உள்ளே தான் இருக்காங்க...”
கமலா சொன்னதை கேட்டு ஆச்சர்யம் மின்ன கணவரை பார்த்தாள் கற்பகம்.
பாரதியின் அறை கதவை தட்டலாமா என்று யோசித்த பவித்ரா, மனதை மாற்றிக் கொண்டு தோழியை செல்ஃபோனில் அழைத்தாள். ஆனால் அது ரிங் ஆகி நிற்கவும், தயக்கத்துடன் மீண்டும் அழைத்தாள். பவித்ராவை கவனித்தப்படி இருந்த உமா,
“பாரதி ஃபோன் எடுக்கலைன்னா பரவாயில்லை பவித்ரா... தொல்லை செய்ய வேண்டாம்... மெசேஜ் வேணா அனுப்பி வைங்க,“ என்றாள்.
ஏற்கனவே நான்கு முறை அழைத்தும் பாரதி எடுக்காததால் என்ன செய்வது என்ற கேள்வியுடன் இருந்த பவித்ரா,
“லாஸ்ட்டா இன்னும் ஒரே ஒரு தடவை ட்ரை செய்றேன்... பாரு எடுக்கலைனா டெக்ஸ்ட் செய்றேன்,” என்றப் படி மீண்டும் பாரதியின் நம்பரை அழைத்தாள்.
🌼🌸❀✿🌷