தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 26 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
குமரேசனுக்கும் கிருத்திகாவை பார்த்து ஆச்சர்யமே!
மருமகளை சந்தோஷத்துடன் வரவேற்றவர், அதே குதூகலத்துடன் அவளிடம் பேசினார்.
“செல்லம் கொஞ்சுறேன்னு உன் அத்தை இந்நேரம் அவ செஞ்ச முறுக்கு பலகாரத்தை எல்லாம் எடுத்துக் கொடுத்து பயமுறுத்தி இருப்பாளே...”
“என்ன மாமா நீங்க? எல்லாமே சூப்பரா இருந்தது... நீங்க எவ்வளவு லக்கின்னு நான் அதிசயப் பட்டுட்டு இருக்கேன்,” என்றாள் கிருத்திகா புன்னகை மின்ன!
“ஆமாம், ஆமாம், என்னை ம்யூசியம்ல வைக்க வேண்டியது தான் பாக்கி... இவளோட சமையலை அட்ஜஸ்ட் செய்துட்டு இவ்வளவு வருஷம் இருக்கேனே...”
“இதெல்லாம் ரொம்ப ஓவர் மாமா...”
“எல்லாம் அவரு சும்மா பேசுறது தான்டா கிருத்திகா... ஒரு நாள் நான் இல்லைன்னு வை அவ்வளவு தான் சாப்பிடாம இருந்து பட்டினி கிடப்பார்...”
“நிஜமாவா???? என்ன மாமா அவ்வளவு தானா உங்க பவர் எல்லாம்???”
“நீ வேற, அப்படி ஏதாவது சொல்லலைன்னா இருக்கிற சாப்பாடும் இல்லாமல் போயிடுமேன்னு ஒரு பயத்துல ஃபோன் செய்து கூப்பிடுவேன்...”
“ஹா ஹா ஹா... மாமா அத்தை நீங்க இரண்டு பேரும் சூப்பர் ஜோடி... இவ்வளவு பெரிய வீடு இங்கேயே இருக்க ஏன் எங்களை தனியா அம்போன்னு விட்டுட்டீங்க...!”
“தியாகு கிட்ட சொன்னா கேட்டா தானே! உங்க கல்யாணம் நிச்சயம் ஆன உடனே அவசர அவசரமா அந்த வீட்டை கட்டினான்... நான் எவ்வளவோ சொன்னேன், கேட்டா தானே...” என்று குறைப் பட்டாள் செவ்வந்தி.