(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

செவ்வந்தி, நீ ஏன் அவளை குழப்புற?” என மனைவியை கண்டித்த குமரேசன், மருமகளிடம், “அது அப்படி இல்லம்மா... எல்லாருக்கும் மனைவியை இம்ப்ரஸ் செய்ய ஆசை இருக்கும்... என் மகனுக்கும் மட்டும் இல்லாம போயிடுமா என்ன? அவனுக்கு நேரா உன் கிட்ட அவன் அன்பை பத்தி பேச தெரியுதோ இல்லையோ, இதெல்லாம் நல்லா செய்ய தெரியும்,” என்றார்!

  

பின்ன, அவர் உங்க மகனாச்சே மாமா,” என இப்போதும் புன்னகையுடனே பதில் சொன்னாள் கிருத்திகா!

  

பெரியவர்கள் இருவருடன் பேசிக் கொண்டிருந்ததில் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை...

  

அவளால் வெகு இயல்பாக அவர்களுடன் கதை பேச முடிந்தது... சிரிக்க முடிந்தது...

  

மதிய உணவை அங்கேயே சாப்பிட்டு விட்டு, மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள், தியாகுவிற்கு இரவு உணவு சமைக்க வேண்டும் என்பது நினைவில் வரவும்,

  

சரி அத்தை, மாமா நான் கிளம்புறேன்... கஸ்தூரி இங்கேயே இருக்கட்டும்...” என்றாள்

  

கஸ்தூரி இங்கே எதுக்குடா, அங்கே இருந்தா உனக்கு உதவியா இருப்பா...”

  

என்னை விட உங்களுக்கு தான் ஹெல்ப்க்கு ஆள் தேவை அத்தை...” என்ற கிருத்திகா, வற்புறுத்தி கஸ்தூரியை அங்கேயே தங்க சொல்லிவிட்டு கிளம்பினாள்.

  

🌼🌸❀✿🌷

   

வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, கிருத்திகாவிற்கு வீடு இப்போது மேலும் அழகாக தெரிந்தது...

  

அவளுக்காக ஆசையாக அவள் கணவன் கட்டிய வீடல்லவா...!

  

வீட்டின் முன் இருந்த தோட்டத்தைப் பார்த்தவளுக்கு ஒவ்வொரு செடியையும் அவன் எப்படி

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.