(Reading time: 16 - 31 minutes)

வா….வா….. சாப்பிட்டுட்டே சொல்றேன்… ½ hour தான் டைம் குடுத்திருக்கார். திருப்பி continue பண்ணனுமாம். ஜெனி வேற சாப்பிட்டுவிட்டு வெயிட் பண்றேனு சொன்னா…” என்றுவிட்டு அவசர அவசரமாக அவர்களையும் அழைத்துக் கொண்டு மெஸ்ஸிற்குள் நுழைந்தாள்.

சாப்பாட்டை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு மூன்று பேரும் அமர்ந்தவுடன் ஆரம்பித்தாள்,

“சார் dissect பண்ண சொன்ன உடனே, கவின் தைரியமாத்தான் போனான்……ஆனா பக்கத்துல போயி , sir… scalpel-அ குடுத்து, “abdomen open  பண்ணு” ன்னு சொன்ன உடனே கை நடுங்க ஆரம்பிச்சது பாரு.. ஹா…. ஹா… அவன பாத்து ஊரே கைகொட்டி சிரிச்சது.”

இன்னும் பாவனையுடன் அவள் கூறியதைப் பார்த்து அவர்கள் சிரித்த சத்ததைக் கேட்டு வார்டன் வந்து,

“சைலன்ஸ்” என்று அதட்டவும்…

“sorry madam” என்று அனு முதல் ஆளாக பவ்யமாக கூறவும், சிரித்துக் கொண்டே

“நீ தான் அருந்த வாலு அனுன்னு தெரியும்…. மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம பேசனும்… என்ன” என்றபடி சென்றார்.

“சே … இதுக்கு திட்டிற்கலாம். சொர்ணாக்கானு நினைச்சா சாந்த சொரூபியா இருக்காங்க…..வில்லி இல்லாம போர் அடிக்கும் போலயே…” என்று உச்சுக் கொட்டினாள் அனு.

பிறகு அவர்களைப் பார்த்து “ம் ... அச்சச்சோ பாரு மறந்துட்டேன்… 2.30 வரைக்கும் தான் practical class அப்புறம,; Theory தான், அதனால உங்கள வரசொன்னார், smile sir ..”

“என்னது smile sir-அ….?”

“ஆமா சிரிக்க சிரிக்க பேசறதுனால smile sir . மறந்திராத class no: 1st building  …first floor” என்றவாறு பறந்துவிட்டாள்.

“Meet u guys at class” என்று சத்தம் மட்டும் கேட்டது.

“எல்லாத்துலையும் அவசரம்” என்றவாறே அவர்களும் எழுந்தனர்.

“ஆமா ஆரு, கேக்கனுன்னு நினைச்சேன்…. உங்கள்ள யாரு பெரியவள்.. நீதானே.. ?”என்று கேட்டாள் நந்து,

“ம்ஹீம்…அவதான்…. ஆனா எல்லாரும் அப்படித்தான் நினைப்பாங்க, அதோட இன்னொரு விசயம் என்ன தெரியுமா… நான் எங்க சித்தி மாதிரி அவ அப்படியே எங்கம்மா மாதிரி….. என்ன ஒரு குழப்பமான குடும்பன்னு தான நினைக்கிற? …”என்று அனு கேட்க

நந்து “ஆமாம்” என்று தலையாட்டியபடியே “இல்லை” என்றாள். ஆரு அவள் செய்கையை பார்த்து சிரித்தாள். பிறகு மணியைப் பார்த்துவிட்டு

“இப்போ டைம் 1.30 தான. இன்னும் 1 hr இருக்கு என்ன பண்ணலாம்……?”

“இங்க varandaல உக்கார்ந்து இருக்கலாம்” என்றபடி ரூமுக்கு போய், classக்கு தேவையான (books இன்னும் தராததால்,) பென் நோட்புக் எடுத்துக் கொண்டு வெளி varandaவில் அமர்ந்திருந்தனர்.

பிறகு மணி 2.15 ஆகவும் classஐ நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்பொழுது hostel வாசலில் ஒரு ஆடம்பரமான கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெண் மற்றும் இன்னொரு சற்று வயதான பெண்மணி, சர்வன்ட் போல, தெரிந்தவர் இறங்கினார். அதற்குமேல் தாமதிக்க நேரம் இல்லாததால் ஆருவும், நந்துவும் திரும்பி நடந்தனர்.

அவர்கள் முதல் பில்டிங்கை அடையும் பொழுது அந்த கார் அவர்களைத் தாண்டிச் சென்றது.

“யாராயிருக்கும்… ஒருவேளை தீப்தியாய் இருக்குமோ… அவள்தான் இன்னும் வரல…” என்று பேசியபடி இருவரும் முதல் பில்டிங்கின் முன்புறம் முழுவதும் இருந்த படிகளில் ஏற ஆரம்பித்தனர்.

3rd floorஐ அடைந்த போது முதல் அறையில் class நடந்து கொண்டிருந்தது corridorல் நடந்து கொண்டிருந்த நந்து, ஏதோ உந்த அந்த அறையின் ஜன்னலைப் பார்த்தாள். உள்ளே ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சந்துரு தெரிந்தான், classஐ சுவாரஸ்யமாக கவனித்து கொண்டிருந்தான். காலையில் தன் மேல் கோபம் கொண்ட முகத்திற்கும் இப்போதிருக்கும் முகத்திற்கும் சம்பந்தமே இல்லை.. அப்படி ஒரு சம்பவம் நடக்காமல், தங்கள் சந்திப்பு சுமுகமாக இருந்திருந்தால்...சட்டென்று சுதாரித்தவள் தன் எண்ணப்போக்கை கண்டு திகைத்து ' சே.. இது என்ன மடத்தனம்...முருகா இனிமே இந்த சீனியர் கண்ணிலே நான் படக்கூடாது' என்று மானசீகமாக வேண்டிக் கொண்டு முன்னால் நடந்து கொண்டிருந்த ஆருவை நோக்கிச் சென்றாள்..( ஐம் சாரின்னு முருகன் சொன்னது பாவம் நந்துவிற்கு கேட்கலை ).

வர்களின் classஐ அடைந்தவுடன் சார் இன்னும் வரவில்லை என்பதை அறிந்து, அவசரமாக உள்ளே சென்ற இருவரையும் பலத்த கைதட்டல் வரவேற்றது.

பின்பு “நந்து பாப்பா, தைரியமா classக்கு வந்திருச்சு… எல்லாரும் ஒருதடவை ஜோரா கைத்தட்டுங்க…” என்று நடு பெஞ்சில் அமர்ந்திருந்த ஒருவன் சொல்ல, அதையடுத்த இரு பெஞ்சில் உள்ளவர்களும் கைதட்டினர்.

நந்து tension ஆக அவர்களைப் பார்க்க, அந்த பெஞ்சின் ஓரமாக அமர்ந்திருந்த கவின், அவள் பார்ப்பதைக் கண்டு வேகமாக மேலே பார்த்து இல்லாத எதையோ எண்ணிக் கொண்டிருந்தான்.

நந்து முறைத்துவிட்டு ஆருவுடன் அனுவும், ஜெனியும் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் சென்று அமர்ந்தாள். அவர்கள் சென்று அமர்ந்ததும், அனு பொரிந்து தள்ளினாள்.

“இந்த கொசுத் தொல்லை தாங்கள, அதை என்னப் பண்றேன் பாரு…” என்றவாறு எழுந்தவளை ஜெனியும் ஆருவும் அமர்த்தினர்.

“இதெல்லாம் ஈசியா எடுத்துக்கனும் அனு, Jollyah tease பண்றாங்க…… எல்லாரும் நம்ம Friends தான……” என்று சமாதானப் படுத்தினாள், ஆரு.

ஜெனி அனுவிடம் ரகசியமாக,

“இப்ப விட்று அனு, அவன் வெளியே வரட்டும், பாத்துக்கலாம்…..”

ஆருவுக்கு தெரியாமல் இரண்டு பேரும், ஏதோ பாகிஸ்தான் மேல் போர் தொடுக்கப் போவதைப் போல் மிக தீவிரமாக திட்டம் தீட்டி அதற்கு “Operation mosquito” என்று பெயர் வேறு வைத்தனர். அவர்களின் திட்டம் முடிகையில் சார் உள்ளே நுழைந்தார்.

பிறகு அனைவரும் அவரது பாடம் நடத்தும் பாணியில், பாடத்துடன் ஐக்கியமாகி கவனித்தனர். வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை இழையோட, பாடத்தை மிகவும் எளிதாக புரியவைத்தார். இடையில் கவினை கலாய்க்கவும் மறக்கவில்லை. அனுவிற்கும் ஜெனிக்கும் அதற்காகவே அவரை அதிகம் பிடித்தது. நடத்தியது வரை நோட்ஸ் தந்துவிட்டு

“நாளைக்கும் Theory class தான். so meet you guys in this same place tomorrow morning 8.30” என்றுவிட்டு சென்றார்.

“நீ அவருக்கு smileனு பேர் வச்சது தப்பேயில்ல அனு” நந்து சொல்ல,

ஆருவும் “ஆமா அனு… ரொம்ப jovial அ இருக்கார்….Anatomy பத்தி கவலையில்லைனு நினைக்கிறேன்” என்றாள்.

“ஹா… ஹா…” என்று வில்லி சிரிப்பு சிர்த்த அனு

“அங்க தான் கடவுள் twist வச்சிருக்கார் ஆரு… நம்ம anatomy HOD Dr.Nasar ரொம்ப… strict கிட்டதட்ட சைக்கோவாம்”.. சீனியர்சே இன்னும் அவர் பேர கேட்டா நடுங்குவாங்கலாம்” என்றாள்.

எல்லோரும் திகிலுடன் ஒருவர் முகத்தைப் பார்க்க,

“சரி விடு… வர்றப்ப பாத்துக்கலாம்.. இப்பவே எதுக்கு கவலைபடனும்” என்றவாறு கவலையை தள்ளிப் போட்டனர்.

பிறகு பேசியவாறே classஐ விட்டு செல்ல முற்படும் போது நாலைந்து பேர் ஆணும், பெண்ணுமாக உள்ளே நுழைந்தனர். அதில் ஒருவன் முன்வந்து,

“dear friends நாங்க எல்லோரும் உங்க seniors (3rd years…)” என்றவுடன் class pin drop silence ஆனது. அவன் சிரித்துக் கொண்டே தொடர்ந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.