(Reading time: 16 - 31 minutes)

யப்படாதீங்க juniors….. இது just introduction தான். எப்பவுமே நடக்கறதுதான்…. உங்களுக்காக நாங்களும், உங்க immediates (2nd year) சேர்ந்து fresher party வக்கிறோம்…..அடுத்த Friday 3.30 – 5.00. அதனால …. ” என்று பசங்களைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தவன், பெண்கள் பக்கம் பாத்தவுடன், ஸ்தம்பித்து வார்த்தையின்றி நின்றான். அவனது பக்கத்தில் நின்றவள் அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்து அவன் தோளை இடித்துப் பார்த்தாள். அப்பொழுதும் அவன் அசையாமல் நிற்கவே,

“அதனால எல்லாரும் கண்டிப்பா join பண்ணனும். சின்ன சின்ன games, jolly ragging, college பத்தின எல்லா விஷயமும் பேசலாம்…” என்றுவிட்டு அவனை தள்ளியபடி வெளியேறினாள் அவள்.

“பை guys” எனவும், இவர்களும் “Bye seniors” என்றனர்.

ந்த seniors உள்ளே நுழைந்ததுமே ஆருவின் உடல் இறுகியதை, பக்கத்தில் அமர்ந்திருந்த நந்துவினால் உணர முடிந்தது. குழப்பமாகவே நிமிர்ந்து ஆருவைப் பார்த்தாள். தாடை இறுக குனிந்து தன் கைவிரல்களையே பார்த்திருந்தாள் ஆரு.

அனுவோ, பேசிக்கொண்டிருந்தவனையே குழப்பத்துடனும், தீவிர யோசனையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள். நந்துவும், “சரி பிறகு அனுவிடம் கேட்டுக் கொள்ளலாம்” என்று நினைத்துக் கொண்டாள்.

ஜெனி லேசாக அனுவை உலுக்கி

“போலாம்.. அனு எல்லோரும் போய்ட்டாங்க பாரு…” என்று கூறி அவளை கிளப்ப, நால்வரும் படியிறங்கி கீழே வந்தனர்.

ஜெனி கடைசிப் படியில் நின்றிருந்தவனைப் பார்த்து தயங்கி நிற்க, மீதி மூவரும் என்ன என்பது போல் பார்க்க, அங்கே அந்த சீனியர் நின்றிருந்தான்.

ஆரு சட்டென்று கோபத்துடன் படியின் அந்த பக்கம் இறங்க முற்பட அவள் அருகில் வேகமாக வந்தவன், மகிழ்ச்சியும் ஆச்சர்யமுமாக,

“ஆரு, நீ இங்கயா சேர்ந்திருக்க…. நான் எதிர்பார்க்கவே இல்ல….” என்றான்.

தரையை பார்த்தபடி, இறுக்கமான குரலில்,

“வழியை விடு” என்று கூறினாள்.

அவளின் இறுக்கத்தில் அதிர்ந்தவன்,

“நீ இன்னும் அத மறக்கலையா…. ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு, என்ன நடந்துச்சுன்னா……..” என்று வேகமாக விளக்கத் தொடங்கியவனை பார்வையில் அருவருப்புடன் ஏறிட்டாள் ஆரு.

“ச்சீ.. வாயை மூடு, இன்னொரு வார்த்தை பேசின….என் கண்முன்னே வராதே… என்ன கொஞ்சம் நிம்மதியா இருக்கவிடு…” கோபத்தில் கண்களும் மூக்கு நுனியும் சிவக்க, உடம்பு நடங்க, குரலை உயர்த்தி கத்திவிட்டு வேகமாக hostel நோக்கி நடந்தாள்.

நந்துவிற்கு எதுவுமே புரியாவிட்டாலும், அனுவை அழ வைத்த அந்த புதிய சீனியரை பார்த்து முறைத்துவிட்டு, அனுவை தொடர்ந்து சென்று, இன்னும் நடுங்கிக் கொண்டிருந்த அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள்.

ஜெனி, எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அதிர்ந்து நிற்க, திகைத்து வேறோடியது போல் நின்றவனை அனுகினாள் அனு.

அவள் வந்ததையோ, தன்னையே அனுதாபத்துடன் பார்ப்பதையோ எதையும் அறியாமல் கோபமும் பச்சாதாபமும் மாறிமாறி காட்டியனை நெருங்கி தோளைத் தட்டி

“Hai வின்சி…;” என்றாள்.

இரண்டுமுறை கூப்பிட்டவுடன் உணர்வு வந்து அனுவைப் பார்த்தவன்

“அ… அனு,” என்றான் குரலில் கசப்புடன்…

"ஆருவுக்கு கொஞ்சம் டைம் குடு…. அவளை பத்தி உனக்கு தெரியாதா”…” என்றாள் அனு ஆறுதலாக.

“என்னன்னு காதுகுடுத்து கேட்டால் தான புரியும்” வின்சி

“நான் பேசறேன்… நீ கவலைபடாத….” அனு

“இல்ல, இல்ல அவளா ஒருநாள் புரிஞ்சுப்பா… அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்… ஆனா… புரிஞ்சுக்காம அவ அவமானப் படுத்துறப்போ...ரொம்ப கஷ்டமா இருக்கு..." என்றான் வின்சி என்று அனுவால் அழைக்கப்படும் வின்சன்ட் ராஜ்.

"விடு வின்சி... ஆருவைப் பத்தி தான் உனக்கு நல்லாத் தெரியுமே... அவளே புரிஞ்சுப்பா..." என்று அனு ஆறுதல் கூற

"என்னவோ போ அனு... நான் என்னனவோ நினச்சேன். எதுவும் நடக்காது போல..."

ஆரு தன்னை வெறுப்பதை தாங்காதவன் போல அவன் புலம்புவதை பார்த்த அனு அவன் கையைப் பற்றி அழுத்தி அவன் கண்களை பார்த்து ,

"இங்க பாரு... நீ நினைச்சது கண்டிப்பா நடக்கும்.. அதுக்கு நான் பொறுப்பு... என் மேல நம்பிக்கை இல்லையா...?" என்றாள்.

அவளையே ஒரு நொடி பார்த்தவன் இருக்கு என்பது போல் தலையை அசைத்து

" இருக்கு... அவளுக்கு ஒருவிஷயம் புரியவை... அவள் எனக்காகவே பிறந்தவ... என்னிக்கிருந்தாலும் எனக்கு தான் சொந்தம் .." ஒருவித பிடிவாதத்துடன் சொல்லிவிட்டு சென்றான்.

ஒரு பெருமூச்சுடன் 'இப்போ தான் பழைய வின்சியைப் பார்த்த மாதிரி இருக்கு' என்று நினைத்தபடி திரும்பிய அனுவை இரு திசைகளில் இருந்து வந்த ஜெனியும் கவினும் பிடித்துக் கொண்டனர்.

"என்னாச்சு அனு.. அந்த சீனியரை உங்களுக்கு தெரியுமா...?" என்ற ஜெனியைத் தொடர்ந்து

"ஆரு ஏன் டென்ஷனா போறா... ஏதும் பிரச்சனையா.?" என்றான் கவின்.

"பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல...அவர் தெரிஞ்சவர்தான்..நீங்க கிளம்புங்க டைம் ஆச்சுல்ல.." என்று அனு அவர்களை விரட்ட எத்தனிக்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தோளைக் குலுக்கிக் கொண்டு விடைப் பெற்றனர்.

சிறிது தூரம் சென்ற கவின் திரும்பி ஜெனியைப் பார்த்து

"ஜெனி டார்லிங்..மாமாவுக்கு பை சொல்லாம போறியே…?" என்று சற்று சத்தமாககூற அதைக் கேட்ட ஜெனி , பல்லைக்கடித்தபடி ' மவனே.. உனக்கு நாளைக்கு 'ஆபரேசன் மஸ்க்' கன்ஃபார்ம்.." என்று கூறிவிட்டு, மனதிற்குள் அர்ச்சித்தபடி வேகமாக பஸ் ஸ்டாப்பை நோக்கிச் சென்றாள்.

ஹாஸ்டலுக்கு சென்ற அனு  தன் அறை வாயிலில் நந்து கால் மாற்றி நிற்பதைப் பார்த்து,

"ரொம்ப நேரம் நிக்கிறியா நந்து?... வா உன் ரூம்க்கு போகலாம்... ஆரு கொஞ்ச நேரத்தில வந்திருவா..." என்று அவளை அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும் இருவரும் கோட்டை கழட்டிவிட்டு அமர்ந்தனர். எதுவும் பேசாமல் இருந்த நந்துவைப் பார்த்து அனு,

"என்ன நடந்ததுன்னு கேட்கலையா நந்து..?" என்று கேட்க,

"சொல்ற மாதிரினா கேட்காமயே சொல்லிருவியே அனு.." என்றாள் அமைதியாக

"மை ஸ்வீட் கேர்ள்... கண்டிப்பா சொல்லனும், அதுவும் ஆருவே சொல்லுவா...இப்போ என்ன விட நீதான் அவ பெட்… ... சரி அத விடு... எங்க உன் ரூமி..? வெறும் திங்ஸ்தான் தான் இருக்கு..ஆளைப் கானோம்..?" அனு

" தெரியலை அனு திரும்பி போய்ட்டா போல..." என்றாள் நந்து

" தீப்தி  ஒரு கேள்விகுறியாவே இருக்காளே...எப்படியும் இங்க தான வரனும் பாத்துக்கலாம்.." அனு. அப்போது அங்கு உள்ளே வந்த ஆருவின் மூக்கு சிவந்து முகம் கழுவியதற்கான தடயம் தெரிந்தது.. அதனால் அனுவும் நந்துவும் கவனமாக பேச்சை மாற்றி அவளை கலகலப்பாக்க முயன்றனர்.

அந்த வாரம் முழுவதும் anatomy theory classஏ  இருந்ததால் யாராலும் இங்கு அங்கு என்று அசைய முடியவில்லை. அதனாலே எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. அந்த வார இறுதி விடுமுறை என்பதால் பெற்றோர்கள் வந்து தங்களை வெளியில் அழைத்து செல்ல அனுமதித்திருந்தனர்.

நாளை தன் தந்தை வருவதை எண்ணி நந்துவிற்கு உற்சாகத்தில் இரவு உறக்கமே வர வில்லை. எப்படியோ இரவை நெட்டித் தள்ளி காலையில் தன் தந்தையை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. ஆனால் தந்தையோ அவளை அவசரமாக கிளம்ப சொல்லி வெளியே அழைத்துச் சென்றார். நந்துவும் அனு, ஆருவிடம் சொல்லிவிட்டு அவருடன் சென்றாள்.

பாஸ்கரன் நந்துவை அழைத்துச் சென்றது வட பழனி முருகன் கோவில். உள்ளே நுழைந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டவராய் நந்துவிடம் திரும்பி

" நந்துமா.. இதோ உன்னோட ஒரே சொந்தம்.. என்னோட ஒரே தங்கை, உன்னோட அத்தை.. அவர பார்க்கதான் இங்க வந்திருக்கோம்..." என்று எதிரே வந்து கொண்டிருந்தவரை காட்டினார். ஆர்வமாய் நிமிர்ந்து பார்த்த நந்துவிற்கு  ஆச்சர்யம் தாங்கவில்லை, ஏனென்றால் நந்து அப்படியே அவர் ஜாடையைக் கொண்டிருந்தாள்.

மெய் மறந்து தன்னையே பார்த்திருந்த தன் மருமகளை நோக்கி "நந்துமா..." என்றபடி வேகமாக வந்தார் நளினி.

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 03

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 05

நினைவுகள் தொடரும்...  

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.