(Reading time: 15 - 30 minutes)

ள்ளி பரபரப்பாக இருந்தது ஒவ்வரு பள்ளியில் இருந்தும் வந்த மாணவர்கள் தாங்கள் செய்த மாடலை மேஜை மீது வைத்து தாங்கள் பேச வேண்டியவற்றை ஒத்திகை  பார்த்துக்கொண்டிருந்தனர். அதே போல் தேஜஸ்ரீயும், அனன்யாவும் தங்கள் அறிவியல் செயல்முறையை ஐந்தாவது முறையாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர். “ஹே அனு, நீ சொல்லி பார்த்தது போதும் நான் கொஞ்சம் சொல்லி காட்டுறேன் கேளு”” என்று கையோடு இழுத்து சென்றாள் ஃபாத்திமா.

****ஃபாத்திமாவை பத்தி சொல்லனும்னா ரொம்ப கேடி, எல்லா வகுப்பிலும் ஒரு வேலை குடுத்தால் ஆசிரியரே மறந்தாலும் முதல் ஆளாய் முடித்து விட்டு வந்து மற்றவரை  மாட்டிவிடுகிற ஆர்வ கோளாறு பசங்க இருப்பாங்கள்ள அந்த வகையில் சேர்ந்தவள் தான் நம்ம ஃபாத்திமா, இப்படிப்பட்ட கேரக்டர் கூட நம்ம அனு இந்த ஸ்கூல் மட்டும் இல்லங்க இதுக்கு முன்னாடி இருந்த ஸ்கூல்லையும் சேர்ந்து தான் படுச்சா, ஃபாத்திமாக்கு அனுவும் தேஜுவும் சேர்ந்து வைத்த பேரு வாத்து, விடாதுகருப்பு இப்படிபல****

கண்காட்சி துவங்க இன்னும் நிறைய நேரம் இருந்தமையால் தன் தோழிகளுக்கு உதவிக்கொண்டு இருந்தால் அனு...சிறிது நேரம் கழித்து கண்காட்சி துவங்கியது. ஒவ்வரு மாணவர்களாக வர வர செயல் முறையை சொல்லி செய்து காட்டிக்கொண்டு இருந்தனர் இருவரும். விளக்கம் நன்றாக தந்தமையால் ஆசிரியர்கள் அவர்களை பாராட்டிச்சென்றனர். மதிய உணவு நேரம் வர கூட்டம் குறைந்தது.

“அனு யாராவது வந்தா கொஞ்ச நேரம் சமாளி இப்ப வந்திடுறேன்”” என்று கூறி தேஜு தன்  வகுப்பு மாணவியிடம் சென்றாள்.

அவள் வரும் வரை, தனியாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த அனுவை தேடி ஃபாத்திமா வந்தாள். அவள் தன்னை நாடி வருவதை பார்த்த அனு தன் உரையை வேகமாக முடித்தாள். கண்கள் அவளிடம் இருந்து அவள் பின்னாள் வரும் நெடியவன் மீது சென்றது. காற்றில் அடர்ந்த சிகை களைய ஆனால் அதுவும் அழகாக தோன்ற, வசீகரிக்கும் புன்முறுவலுடன், குறுகுறு பார்வையால், அனன்யாவையே அளவெடுத்தவாறு அங்கு வந்து கொண்டிருந்தான் அந்த நெடியவன். சிறிது நேரம் அந்த முகத்தை பார்த்தவளுக்கு இப்போது அது யார் என்று பொறி தட்டியது.

அய்யோ இவனா?! இவன் எதுக்கு இங்கே வருகிறான்? இவனை எதுக்கு இங்கே கூட்டிட்டு வருகிராள்? வந்தாள் வரட்டும் எனக்கு என்ன? ஏன் சின்ன வயசில சண்ட போட்டானு கண்டிப்பா கேட்கனும் என்று பலவகை எண்ணங்கள் அவள் மனதில் ஓடியது. அவளது மனதிற்கு ஏற்றவாறு முகம் பல பாவனைகளை பிரதிபலிக்க, அதை அறியாமல் நின்றுக்கொண்டிருந்தாள் அனு. அவளது முகப்பாவங்களை யார் கண்டனரோ அல்லவோ அந்த ஒரு ஜோடி கண்கள் மட்டும் எதையும் கவனிக்க மறக்கவில்லை (அட கரெக்டுங்க நம்ம ஹீரோவேதா!!)

“ஹாய் அனு ரொம்ப பிஸியா? இது யாருன்னு நியாபகம் இருக்கா?”” என்று ஃபாத்திமா அஸ்வத்தை சுட்டி காட்ட, அமைதியாக அனன்யா தலையை ஆட்டினாள்.

“அஸ்வத் அவனுடைய அறிவியல் செயல்முறையை சொல்லிட்டு இருந்தான். எனக்கு அவனை பார்த்ததும் உன் நினைப்புதான் வந்துச்சு, அதான் கூட்டிட்டு வந்தேன். சரி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க என்னோட டேபிள்ள யாருமே இல்லை நான் அப்பறமா வரேன்”” என்று கூறி அனன்யாவின் பதிலை எதிர் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

அடிப்பாவி, அது ஏன் என்னோட நினைப்பு வந்துச்சு இவளுக்கு? ஏதோ ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்த ஜோடியை சேர்த்து வைத்த ரேஞ்சுக்கு ஃபீல் குடுத்து விட்டு போறாள் பாரே.... ஃபாத்து (fathu) இப்படி வாத்துனு prove பண்றியேடி... என்று அவள் செல்வதையே செய்வது அறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவள் நினைவில் இருந்து விடுவிப்பதற்காக ““ஹலோ”” என்று தன் கைகளை அவள் முகத்தின் எதிரே ஆட்டினான் அஸ்வத். அவள் அவன் செய்கையில் அவ்விடத்திற்குவர “சே இப்படியா ஏதோ நினைப்பில் இருப்பது” என்று தன்னையே நொந்துக் கொண்டு சிறு புன்முறுவல் தூவினாள்.

“ஹப்பாடா வந்தாச்சா! அப்படி ஏன் ஃபாத்திமாவை முறைக்கிற? ஏன்டா இவனை கூட்டிட்டு வந்தாள்னா?”” என்று அனன்யாவின் மனதில் ஓடியதை அப்படியே அஸ்வத் புன்முறுவலுடன் கூறினான். அவள் என்ன சொல்வது என்று புரியாமல் திருதிருவென முளித்துக்கொண்டிருந்தாள்.

****நம்ம அஸ்வத்தை பற்றி சொல்லனும்னா?!?! பார்த்தாலே புடிக்கின்ற பணக்கார வீட்டு பையன்லா இல்லைங்க, நல்லா படிக்கிற மாநிறமான பார்க்க பார்க்க புடிக்கிற ஸ்மார்டான பையன், கொஞ்சம் கலகலப்பான கொஞ்சம் அமைதியான பையன், மீதியை போக போக தெரிஞ்சுக்கோங்க****

இவ்வாறு அஸ்வத் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தேஜு அங்கு வந்தாள் அப்போதுதான் அனுவிற்கு தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருந்தது, ஆனால் இவனை என்னவென்று அறிமுகம் செய்வது தோழன் என்றா இல்லை சிறு வயது எதிரி என்றா என்று அனு குழம்பிக்கொண்டு இருக்கையில் அந்த யோசனையே தேவையற்று போனது.

“ஹே அஸ்வத் நீயா! எப்படி இருக்க? அங்கிள் ஆன்ட்டியெல்லாம் நல்லா இருக்காங்களா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு”” என்று படபடவென பொரிந்தாள் தேஜு.

“நல்லா இருக்காங்க, நானும் நினைத்தே பார்க்கல உன்னை பார்ப்பேன்னு, நீ எப்படி இருக்க?”” என்று சிறிது நேர உரையாடல் சென்றது. இது அனைத்தையும் பிறமொழி படங்கள் போல் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் அனன்யா, அவள் அப்படி நிற்பதை பார்த்து விட்டு தேஜு அறிமுகம் செய்ய துவங்கினாள்.

“என்ன அனு அப்படி பார்க்கிற இது அஸ்...”” என்று தொடங்க அஸ்வத் இடைமறித்தான்.

“அதல்லாம் என்னை அனுக்கு நல்லாவே தெரியும்”, என்று அவளை கூர்ந்து பார்த்துக்கொண்டே கூறினான். “நானும் அனுவும் ஒன்னாதான் படுச்சோம்”” என்று அவன் கூற இப்பொழுது ஆச்சர்யம் தேஜுவை தொற்றிக்கொண்டது ஆனால் தேஜுவிற்கு உடனே புரிந்துவிட்டது (நம்ம தேஜு தா கேடிக்கு எல்லாம் கேடியாச்சே)

“ஓஹோ அந்த அஸ்வத் நீதானா!..”” என்று அவள் தன்னை அறியாமல் அனன்யாவை மாட்டிவிட்டாள்.

அய்யய்யோ மாட்டி விட்டுடாலே என்று எண்ணிக்கொண்டு அருகில் இருந்த தேஜுவை யாரும் அறியாமல் கிள்ளினாள் அனு. ஆனால் தேஜுவோ அனைவரும் அறிய கத்தினாள் “அய்யோ வலிக்குதுடி””

இதை அனைத்தும் அஸ்வதிற்கு நன்றாக புரிய வாய் விட்டு சிரித்துவிட்டான். அவனுக்கு புரிந்து விட்டதை அறிந்த அனன்யாவிற்கு அவமானமாக இருந்தது தலையில் அடித்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் தேஜுவிற்கு பல்பு எரிய அனைவரும் சிரித்துக்கொண்டனர். ( சில நேரத்தில் ஹீரோயின் இன்னோசென்ஸ்(innocence) மட்டும் இல்லைங்க ஹீரோயின்னோட ஃப்ரண்ட் இன்னோசென்ஸ் கூட சுபமல் முடியும் “இன்னோசென்ஸ் நல்லது”) 

சிரிப்பொலி அடங்கிய பின் “சோ, என்ன பத்தி தேஜுட்ட சொல்லி இருக்க?! என்னலாம் சொன்ன”” என்று நேரடியாக அனுவை பார்த்து ஆர்வமாக கேட்டான் அஸ்வத்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.