மே 18, வெள்ளிக்கிழமை
நிரஞ்சன் குழுவினருக்கு கணினி மூலம் வீடியோ கான்பரன்சில் சந்தியாவை கார்த்திக் அறிமுகப் படுத்தி வைத்தான். அந்த குழுவில் மென்பொருள் தயாரிப்பில் பெரிய பொறுப்பு வகிப்பவர்கள் கிட்ட தட்ட ஒரு இருபது பேர் வந்திருந்தனர். நிரஞ்சன் சந்தியாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு விட்டு, பின் அந்த குழுவினர் ஒவ்வொரு வரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அதன் பின், சந்தியா தான் தயாரித்த திட்டத்தை விளக்கினாள். நெடு நேரம் கலந்தாய்வு நடக்க, தைரியமாக அத்தனை கேள்விகளுக்கு பதிலளித்து, தெளிவாக எடுத்துரைத்தாள். அவள் பேசி முடித்ததும், கார்த்திக் “முக்கால்வாசி முடிந்த நம்ம மென்பொருளை ஆராய்ந்து இந்த புதுமையான விஷயத்தை புகுத்தி அதற்கு புதுப்பொழிவை குடுத்த சந்தியா பத்தி நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது அவங்க இதை முடிக்க எடுத்துக்கிட்டது வெறும் மூணே மூணு நாட்கள், அதை விட நம்மை ஆச்சர்யப்பட வைக்கிற விஷயம் - இப்போது தான் கல்லூரி முடித்த புதியவர்.” என ஆங்கிலத்தில் எடுத்துரைக்கவும், அனைவரும் ஆச்சரியத்தில் அவளுக்கு எழுந்து நின்று கை தட்டி தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.
கலந்தாய்வு முடிந்த பின், கார்த்திக் அவளை போனில் அழைத்து பாராட்டினான்.
“வல்லிகண்ணு ஆசம்!!! வாட் எ பெர்பார்மென்ஸ்? தேங்க்ஸ்” அவன் பாராட்ட
“நீங்க ஸ்பூன் பீட் பண்ணி விட்டுட்டு, என்னை புகழ்றீங்க பாஸ்.”
“தன்னடக்கம்!!!! சரி, நிரு லைன்ல தான் இருக்கான். கான்பரன்ஸ் போட்டிருக்கேன். பேசு” என நிரஞ்சனை அழைத்தான்.
“ஹெலோ மஞ்சிங் மான்ஸ்டர்….க்ரேட் ப்ரெசென்டேஷன். ஐ கான்ட் பிலீவ் யு ஆர் எ ப்ரஷர்” என்றான் நிரு.
“தேங்கஸ் நிரு. கார்த்திக், ஏன் அவர்கிட்ட மஞ்சிங் மான்ஸ்டர்ன்னு சொல்லி வச்சிருக்கீங்க” என கேட்க,
“நிரு ஷி வாண்ட்ஸ் இன் தமிழ் வெர்ஷன், கால் ஹெர் சாப்பாட்டு ராமி ” என்றான் கார்த்திக்.
“பாஸ், நான் இன்னக்கு விரதம். பசி கண்ணை கட்டுது. என்னை போய் சாப்பாட்டு ராமின்னு சொல்றீங்க. நிரு உங்களுக்கு தமிழ் தெரியாதா?”
“தமிழ் எனக்கு புரியும். நான் பெங்காலி “ என்று ஆங்கிலத்தில் சொன்னான் நிரஞ்சன்.
அவன் சொன்னதும் அதிர்ச்சியடைந்த சந்தியா “பாஸ், நிரஞ்சன்னா தமிழ் பேரு மாதிரி இருக்கு, நிரு பெங்காலியா? ” என நிருவிடமும், கார்த்திக்கிடமும் அதிர்ச்சியாய் வினவினாள்.
கார்த்திக் அதற்கு, “சந்தியா, நிரு பேரு நிரஞ்சன் போஸ். நிரஞ்சன் ஒரு ஹிந்து பேரு. தமிழ் நாட்டு சொத்து கிடையாது.” என்று சொல்லி சிரித்தான்.
“அதான பாத்தேன்...பச்சை தமிழனா இருந்தா இப்படியா இறகு போடு போடுன்னு எட்டு வருஷமா சுத்திக்கிட்டு இருப்பான்?..இந்த நேரம் கரக்ட் பண்ணி ரெண்டு குட்டி போட்டு குடும்பஸ்தன் ஆகியிருப்பான்…” என்றாள் சந்தியா.
“நான் பச்சை தமிழன் தான்...கரக்ட் ஆக மாட்டிங்குதே “, என்று கடமையை செய்தும் பலன் கிடைக்காதது போல வருந்தினான் கார்த்திக்.
"நீங்க இந்தியனே இல்லை பாஸ், உங்களுக்கு இது அவுட் ஆப் டாபிக் ....நிரு யு ஸ்டார்ட் ம்யூசிக் " என்றாள் சந்தியா.
நிரு சந்தியாவிடம் மது தன்னிடம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசுவாள் எனவும், தனக்கு தமிழ் பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும் எனவும், மதுவிடம் தனக்கு தமிழ் தெரியும் என்பதை சொல்லாமல் இரகசியமாக வைத்துள்ளதாகவும் சொன்னான்.
“பூதம் மாதிரி இத்தனை நாளும் ரகசியம் காத்தது போதும். இப்படியே வாழ்க்கையை கோட்டை விடப் போறீங்களா. பி அன் ஓபன் புக். சரி தமிழ் தெரியும்னா தமிழ்ல பேச வேண்டியது தானே? ” என்ற சந்தியாவிடம்,
கார்த்திக், “செல்லம், அவன் மதுகிட்ட ப்ரபோஸ் பண்றபோ தான் தமிழ்ல பேசுவானாம். அது வரைக்கும் யார்கிட்டயும் பேச மாட்டானாம்” என்றான் சந்தியாவிடம்.
“பெங்கால் டைகர் மாதிரி விரைப்பா இல்லாம இப்படி கல்கத்தா ரசகுல்லா மாதிரி சாப்ட்டா இருக்கீங்களே..…..உங்க சபதம் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா பொக்கை வாய வைச்சுகிட்டு தமிழ்ல ப்ராப்போஸ் பண்ணா என்ன இங்கிலிஷ்ல ப்ராப்போஸ் பண்ணா என்ன...அவளுக்கு ஒன்னும் புரியப் போறது கிடையாது. “ என்றாள் சந்தியா.
“நிருக்கு பொக்கை வாயா? ” என கேட்டான் கார்த்திக்.
“இந்த ரசகுல்லா ப்ராப்போஸ் பண்றப்போ 80 வயசாவது ஆகிடாது...அப்போ பொக்கை வாயா தான இருப்பாரு? ” என கேட்க கார்த்திக் சிரித்தான். “நிரு இதை விட உன்னை அசிங்கமா சொல்ல முடியாது” என்று நிருவிடம் விவரித்து விட்டு சிரித்தான். நிருவும் சிரித்துக் கொண்டே,
“ஆம் ஐ ரசகுல்லா? டியூட், வேர் டிட் யு கெட் ஹெர்?” என சந்தியாவை பற்றி கார்த்திக்கிடம் விசாரித்தான்.
“நானா கேட்டேன்..அதுவா முதுகுல ஏறி உட்க்கார்ந்துகிடுச்சு.” என்று கார்த்திக் சொன்னவுடன் சிரித்த நிரு, “ஹ்ம்ம்… ரியல்லி ஷி ஆக்ட்ஸ் லைக் எ மான்ஸ்டர்” என,
“ஏய் ரசகுல்லா, உங்க ஜீராவை சரியான பதத்துக்கு கொண்டு வர போராடிகிட்டு இருக்கேன். இந்த ஜொள்ளு பாஸ் கூட சேர்ந்துகிட்டு என்னை கிண்டல் பண்றீங்க. எட்டு வருஷமா உங்களுக்கு உருப்படியா ஐடியா கொடுத்தாரா? அவரே பழுத்த பழநியப்பா. சந்தியா சேவை வேணுமா வேண்டாமா? சீக்கிரம் சொல்லுங்க ” மிரட்டினாள் சந்தியா.
.
“எஸ்..எஸ்...ப்ளீஸ் ஹெல்ப் மீ...மஞ்சிங் மான்ஸ்டர்” என்றான் நிரஞ்சன் கிண்டலாக.
“பார்ரா..அந்த மஞ்சிங் மான்ஸ்டரை விட மாட்டிங்கிறீங்க. தமிழ்ல பேசுங்க”, என கட்டளையிட்டாள் சந்தியா.
“என்கு ஹெல்ப் சொய்” என்றான் பிழையுடன் சொன்னான் நிரஞ்சன்.
“விட்டா சொய் சொய் ன்னு கும்கி பாட்டு பாடுவார் போல” என கிண்டலடிக்க, கார்த்திக்கும் சிரித்தான்.
“ஹே..யு போத் ஆர் மேக்கிங் பன் ஆப் மீ” என்றான் நிரு. “காதல் வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம்” என்றாள் சந்தியா.
“மது எப்படி இருக்கு” என மதுவை ஆர்வமாக விசாரித்தான் நிரு.
“ஹம்...ப்ரீ கே ஜில தான் இன்னும் இருக்கா. இன்னும் நிறைய படிக்கணும். கவலைப்படாதீங்க ட்ரைன் பண்ணிடலாம்” என்று நம்பிக்கையுடன் சொன்னாள் சந்தியா.
“பெங்காளின்னா லிட்டரேச்சர்ல கலக்குவாங்களே? நீங்க எழுதுவீங்களா?” என்று நிரஞ்சன் பத்தி கேட்டாள் .
“குட் கெஸ். டாட் பெங்காளில பேமஸ் ரைட்டர். பட், நான் ஸ்கூல் படிக்குறப்ப இறந்தாச்சு. நான் பெங்காளில போயம்ஸ் எழுதுவேன். ம்... நோ டைம் பார் தேட் நவ் ” என்றான் நிரஞ்சன்.
“வாவ். நீங்க லக்கி. அம்மா ஆர்னிதாலஜிஸ்ட், அப்பா எழுத்தாளர். இயற்கையோடே வளந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். மதுக்கு உங்க போயம்ஸ் எல்லாம் காட்டியிருக்கீங்களா? அவ என்ன சொன்னா?” என கேட்டாள் சந்தியா.
“எஸ், எஸ், ஐ அம் சோ லக்கி. நேச்சர் பிடிக்கும். ஆனா, கம்ப்யூட்டர்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். மே பி ரிடையர்ட்மென்ட்ல மாம் டாட் மாதிரி லைப் திங் பண்ணலாம். மது போயம்ஸ் படிக்கிறதுல அவ்வளோ இன்ட்ரஸ்ட் காமிக்கலை….டு பி ப்ரிசைஸ், அதை புரிஞ்சிக்கிற அளவுக்கு மெச்சூர் ஆகல. ஷி இஸ் ஸ்டில் கிட்டிஷ் “
“ம்...உண்மை தான். அவளுக்கு ரொமான்ஸ் கதை படிச்சா தூக்கம் வருதுன்னு சொல்றாளே!! ….” என்று ஆதங்கப்பட்டாள் சந்தியா.
“கண்ணு, உனக்கு ரொமான்ஸ் புக் படிக்கிறப்போ எப்படி இருக்கும்?”, கார்த்திக், சந்தியாவிடம் கேட்டான்.
“பாத்தீங்களா ரசகுல்லா? பாஸ்ஸுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?” என கார்த்திக்கை பற்றி நிருவிடம் குறை கூறினாள்.
“ஏய் எவ்வளவு பொறுப்பா மதுவையும், நிருவையும் சேத்து வைக்கிற வேலையை கொடுத்திருக்கேன்” என்றான் கார்த்திக் சிரித்தவாறு.
“எனக்கு வேலைய குடுத்திட்டு சாரு என்ன பண்ணுவீங்க”, கேட்டாள் சந்தியா.
“இது கேக்குறியே அது கேள்வி. நீ வேலை பாரு. நான் உன்னை பாக்கிறேன் செல்லம் ” என்று வழிந்தான் கார்த்திக்.
“ப்ச்...மது உங்க கசின் தான, உங்க பாட்டி தான் அவளை அப்படி வளத்துட்டாங்கன்னா நீங்களாவது அவளை வெளில எக்ஸ்போஸ் பண்ணியிருக்கலாம்ல” என்றாள் சந்தியா ஆதங்கத்துடன்.
“நான் படிச்சது போர்டிங் ஸ்கூல்ல. ஹாலிடேஸ்க்கு தான் வீட்டிக்கு வர முடியும். நாங்க வர்றப்போ மது கூட நல்லா ஆடுவோம். மது இஸ் மோர் தேன் எ சிஸ்டர் டு மீ. ஆனா, மதுவை பாட்டி பொத்தி பொத்தி வளத்தாங்க. அதனால எங்க மனசுலயும் அவளை அப்படியே பாத்து பழகிட்டோம். அவ இன்னொசென்ட்டா இருக்கான்னு நிரு சொல்றப்போ கூட எனக்கு பெரிசா தெரியல. ஐ ஸ்டில் பீல் கில்டி பார் இக்னோரிங் தேட். இந்த ரெண்டு வருஷத்தில என்னால முடிஞ்ச அளவுக்கு அவளை வெளிய வர வச்சிருக்கேன். அது உனக்கு விசிபிள்லா தெரியலையா? “ என்று கேட்டான் கார்த்திக்.
“ம்...பாஸ் பிஸ்னஸ்ல நீங்க ட்ரைன் பண்ணது நல்ல விஷயம் தான். அப்படினாலும், இன்னும் முடிவெடுக்க உங்களை சார்ந்து தான இருக்கா. அவளுக்கு இன்னும் தைரியம் வேணும், ப்ரண்ட்ஸ் வேணும், அவளுக்குன்னு கனவுகள் வேணும்...எல்லாத்தையும் நாம கல்டிவேட் பண்ணனும். இத்தனை வருஷத்தில நீங்களாவது நிருவுக்கு அவ மேல இருக்கிற இன்ட்ரஸ்ட் பத்தி லேசாவது சொல்லியிருக்கலாம்ல.” கேட்டாள் சந்தியா.
“என்னால ஓர் அளவுக்கு மேல அவகிட்ட நெருங்கி போக முடியல வல்லிகண்ணு. நிரு லவ் பத்தி அவகிட்ட பேசனும்ன்னு நினச்சுகிட்டு இருக்கிறப்போ, அவ என்னை கல்யாணம் பண்ண சொல்லி குண்டை தூக்கி போட்டா. என் நிலைமைய யோசிச்சு பாரு எப்படி இருக்கும்ன்னு? என்னை காப்பாத்துறதே பெரும்பாடு. இதுல நிரு சார்பா என்ன சொல்ல முடியும்?..என்னால முடிஞ்ச ஒன்னே ஒன்னு அவளை அப்பப்போ நிரு கூட சேத்து வைச்சு ஓட்டிவேன்...அவ விளையாட்டா எடுத்திட்டு போயிடுவா” என்றான் கார்த்திக்.
“நிரு நிஜமாவே சொல்லுங்க எட்டு வருசமா மதுகிட்ட பறவைகளை தவிர்த்து வேற எதையும் சீரியசா பேசுறது இல்லையா?” என்று நிரஞ்சனிடம் கேட்டாள் ஆச்சர்யமாக.
“பர்ட்ஸ் இல்லாட்டி மது கார்த்திக் பத்தி பேசும். மது பேசினா கேட்டுகிட்டே இருக்க மட்டும் தான் தோணும். அவள இம்ப்ரஸ் பண்ணணும்கிற மோடிவ்ல நான் பேசாது. ஐ ஜஸ்ட் வான்ட் டு பி வித் ஹெர். மது, கார்த்திக்கிட்ட ஷேர் பண்ற மாதிரி என் கூட எதுவும் ஷேர் பண்ணாது. ஆனா, நானா என்ன ஏது கேட்டா நோ சொல்லாம சொல்லும். காலேஜ் முடிச்சு வொர்க் பண்ண பிறகு ப்ரொபோஸ் பண்ணலாம்ன்னு கூட திங் பண்ணது. அப்போ மது மாம் இறந்தது. தேட் டைம், கார்த்திக் அவங்களை பத்தி என்கு சொன்னது. அதை கேட்டவுடன், இனி மதுவை எந்த சிடிவேஷன்லயும் நான் ஹர்ட் பண்ணாதுன்னு டிசைட் பண்ணது. இப்பவும் அதே தான் நினைக்குது” என்றான் நிரஞ்சன்.
“ம்...அதெல்லாம் சரி. ஆனா, நோகாம நொங்கு எடுக்க முடியாது. லவ் இஸ் பெயின். அந்த வலியை தாங்கி தான் ஆகனும்...ரசகுல்லாவா இருந்தாலும் சரி...ஜீராவா சரி…“ என்று வெளிப்படையாக சொன்னாள்.
but u truly amazed me..... soooo nice..
karthik is kinda dream hero... ha ha .. pooma sandy chem I liked a lot.... than the way u narrated niru's love story is awesome. ..... cute and funny... I dont know how many times I have read certain episodes... like episode 17 18 ...
I know its late but after reading this many times.... I shud write this na .....
fantastic job....... some we r I felt. . ipdi kooda oru ponnu irukkuma.. ha ha lik sandy
eagerly waiting for tomorrow episode...
By reading the title, iam not very much interested in reading urs, but I am reading almost all novels in this site, based on that I started reading urs(very sorry for my opinion), once I started reading urs, not able to close the link, really its very relaxing while reading this. I like sandhya character very much, easy going and jolly personaliyt. Also i Karthik. Nice story and nice turning.Waiting for 20th. please update on weekly basis instead of 2 weeks once.(for all stories) regards Akila
Aha...title paarthu pidikkalayaa... A lot of friends here started reading this by seeing the title...;) Everyone's Taste differs!!! Title maathiriyum storyuum uniquekkka kudukka my first try!
Kurumbu & kalaata + komedy + kadhal + kudumbam + konjam msg than intha story... So relaxed aah padinga!
neenga akkannu solli uruga vaithuteengalae... Thanks! Naan Murugan fan illai...
Avan uyirai kuduthu paaduraan, intha munching monster romantic paatta poi MMnnu solludhaey!!
Niranjan ooda tamil paarthu neenga overaah sirikka poreenga adu episodes! ippovae Disclaimer pottuduraen unga ammakitta dose vaanginna naan poruppalla ;)
it's really true usha... naan unga theevira fan, you're a fantastic writer..
en ipdi engala wait panna vaikaringa
waiting early for 20th
waiting for 20th dec...
eluthuradae supera irukum idu twistoda inum super ah iruku...adutha update ah konjam sikiram podungalen pls...
It's going well I can't wait for the next episode pls post it every week. I am waiting from canada
Usha u won't believe it. As I said I'm from Canada, with in a busy life, I read all 17 episodes again and again. One day very stress at work so I just google it as thamil novels and I got this link. I started to read all the stories from there. But ur story remind my past .. Thank u so much and good luck for all ur success. Waiting for the next episode. Pls pls post it every week. Tnx